| 2025-05-12PanchaKamakshiGlories | |
| Machine translation was edited for clarity. | |
|
பஞ்ச காமாட்சி மகிமைகள்: ஐந்து காமாட்சிகளையும் காஞ்சியில் ஒருங்கே
தரிசிக்கலாம் தெரியுமா!
சக்தி விகடன் டீம் Sakthi Vikatan
பஞ்ச காமாட்சி மகிமைகள்: ஐந்து காமாட்சிகளையும் காஞ்சியில் ஒருங்கே
தரிசிக்கலாம் தெரியுமா!
Updated:12 May 2025 4 PM
Listen to Vikatan stories on our AI-assisted
audio player
பஞ்ச காமாட்சி மகிமைகள்: ஐந்து காமாட்சிகளையும் காஞ்சியில் ஒருங்கே
தரிசிக்கலாம் தெரியுமா!
பஞ்ச காமாட்சி |
Pancha
Kamakshi Glories:
You can Dharsan of five Kamakkshis in one place in Kānchi.
Sakthi
Vikatan
Published:12
May 2025 4 PM
Listen to
Vikatan stories on our AI-assisted audio player
Pancha
Kamakshi Glories: Do you know that all the five Kamakshis can be
worshipped simultaneously in Kanchi? |
|
பஞ்ச காமாட்சி
1.
`கடன்
பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார்கள். ஏனெனில்,
கடன் சுமை அத்தனை கொடுமையானது! கடனின்றி வாழ்தலே சிறப்பு. கடன்
பட்டிருந்தாலும் அவற்றை எல்லாம் உரிய முறையில்,
உரிய நேரத்தில் அடைத்து விடுவதே சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும்.
|
Pancha Kamakshi 1. It is said that the king of Ianka (Modern Ceylon) was troubled like a debtor's heart. Because the debt burden is so terrible! Living debt-free is special. Even if you have debts, it is only when you pay them off in a timely manner that brings happiness and peace. |
|
2.
கடன் என்பதை ஏதோ அவசர தேவைக்குக் காசு,
பணம் வாங்குவது என்று மட்டுமே எண்ணி விடாதீர்கள். கடன் என்பது கடமை. நம்
ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. அவற்றையும் உரிய காலத்தில் நியமத்துடன்
நிறைவேற்றவேண்டும். எனினும்,
கடன் இல்லாத வாழ்க்கை,
கடமையை நிறைவேற்றும் வகையிலான குறை இல்லாத வாழ்க்கை வாழ,
பொருள்செல்வம் வேண்டுமே? |
2. Don't think of a loan as just borrowing money for some urgent need. Debt is an obligation. Each of us has duties, which should also be implemented on time. However, to live a debt-free life and a flawless life in fulfillment of duty, does need material wealth |
| 3. வற்றாத பொருள்செல்வத்துடன், வளமான வாழ்வையும், நகை-ஆபரண யோகங்களுடன் கூடிய போகத்தையும் பெறற்கரிய பேறு களையும் பெற அம்பாளின் திருவுருள் நமக்குத் துணை செய்யும். |
3.
Ambal's
grace will help us to attain inexhaustible
material
wealth, prosperous life, luck and luxury with jewels and ornament and
rarest blessings. |
| 4. அவளின் பிள்ளைகள் நாம். நம் நிறை குறைகளையெல்லாம் மன்னித்து, அருளும் பொருளும் வழங்கி நம்மைக் காக்கும் அந்த ஜகன்மாதா, காஞ்சியம்பதியில் காமாட்சியாய் அருள்பாலிக்கிறாள். அவளைச் சரணடைந்து விட்டால் போதும்; சகல நன்மைகளும் நம்மை வந்து சேரும். |
4.
We are her
children. Mother Jaganmata (World Mother), who forgives all our
shortcomings and protects us with blessings and wealth, blesses us as
Kamakshi in Kanchiyampathi. It is enough to surrender to her; All good
things will come to us. |
| 5. காஞ்சியம்பதியில் உள்ள காமாட்சி அம்பாள் திருக்கோயில், நம் துக்கங்களை யெல்லாம் போக்கக்கூடிய அற்புதமான இடம். இங்கே, நம்மையும் இந்த உலகையும் காத்தருள்வதற்காகவே ஐந்து காமாட்சிகள் அருள்பாலிக்கிறார்கள். |
5.
The
Kamakshi Ambal Temple in Kanchiyampathi is a wonderful place to remove
all our sorrows. Here, there are five Kamakshis to protect us and the
world. |
| 6.
பஞ்ச காமாட்சி தரிசனம்! மூலஸ்தானத்தில், அதாவது கருவறையில் ஊருக்கும் உலகுக்கும் நாயகியாக, நடுநாயகமாகத் திகழ்கிறாள் காமாட்சி அம்பாள். |
6.
Pancha
Kamakshi Darshan!
In the
sanctum sanctorum, that is, in the innermost sanctum, Mother Kamakshi
Ambal is the Nayaki (goddess) of the place and the world
as the Central
gem of an ornament and exalted, eminent person. |
| 7. அவளுக்கு வலப் பக்கத்தில், கருவறையிலேயே வீற்றிருக்கிறாள் தபஸ் காமாட்சி. பஞ்சாக்னிகளுக்கு நடுவில், ஒற்றைக்காலில் நின்ற படி தவக்கோலத்தில் காட்சி தருகிறாள் அவள். |
7.
Tapas
Kamakshi stands in the sanctum sanctorum on Her right side. She appears
in a penance posture standing on one leg in the midst of Panchagnis
(five sacred Fires). |
| 8. அடுத்து, அஞ்சன காமாட்சியின் தரிசனம். அதாவது அரூபமாக, அதேநேரம் லட்சுமியாக அருட்காட்சி தருகிறாள். மகாவிஷ்ணுவின் சாபத்தால், அரூப லட்சுமியாக இருந்தாலும், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, அனைவருக் கும் அருள்பாலிக்கும் மகா சக்தி இவள் என்கின்றனர் பக்தர்கள். கருவறையில் காமாட்சி அம்பாளைத் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது இவளைத் தரிசிக்கலாம். அடுத்து, உற்ஸவக் காமாட்சி. |
8.
Next, Anjana Kamakshi's darshan. That is, she
appears in formless form because of Vishnu’s curse and at the same time
as Lakshmi. She is the Maha Shakti and
holy presence
who blesses everyone.
Devotees
can have the darshan of Mother Kamakshi Ambal in the sanctum sanctorum
and while coming out, obtain Dharsan of Anjana Kamakshi. |
| 9.சரி நான்கு காமாட்சிகளைத் தரிசித்து விட்டோம். இன்னுமொரு காமாட்சி அம்மை யார்? அவள்தான் பங்காரு காமாட்சி! |
9.
Okay, we
have seen four Kamakshis. Who is the next Kamakshi Ammai? She is Bangaru
Kamakshi! |
| 10. பங்காரு என்றால், சொர்ணம்... அதாவது தங்கம் என்று அர்த்தம். பங்காரு என்பது தெலுங்குச் சொல். அந்தக் காலத்தில், இங்கே வசித்து வந்த தெலுங்கு பேசுகிற மக்களும், ஆந்திரத்தில் இருந்து அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்களும் இந்த காமாட்சியின் அழகில் கிறங்கி, பங்காரு காமாட்சி என்றார்களாம். |
10.
Bangaru
means Sornam... It means gold. Bangaru is a Telugu word. In those days,
the Telugu speaking people living here and the devotees who come from
Andhra Pradesh to worship Ambica were mesmerized by the beauty of this
Kamakshi and called it Bangaru Kamakshi. |
| 11. முழுக்க முழுக்கத் தங்கத்தில் ஜொலித்த தேவியின் இந்த விக்கிரகத் திருமேனி, அந்நியப் படையெடுப்பின்போது பாதுகாப்புக் கருதி, தஞ்சாவுருக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பின்னாளில் அங்கேயே கோயில் கொண்டாள் பங்காரு காமாட்சியம்மன். தற்போது காஞ்சிபுரம் கோயிலில், வெளிப்பிராகாரத்தில் சரஸ்வதி தேவியின் சந்நிதிக்கு அருகில், அதாவது ராஜ சியாமளா சந்நிதிக்கு அருகில், தனியறையில் பங்காரு காமாட்சியின் திருப்பாதம் மட்டும் உள்ளது. |
11.
This idol of the Goddess glittering entirely
in gold was taken to Thanjavur for protection during a foreign invasion.
Later, Bangaru Kamakshi Amman had her own temple built there for her. At
present, in the outer prakāra (Circumambulatory path) of the Kanchipuram
temple, near the shrines of Goddess Saraswathi and Raja Shyamala,
Bangaru Kamakshi’s holy feet is present
in
a separate room. |
|
12. பஞ்ச காமாட்சியரை வழிபடுவது எப்படி? வாரத்தில் ஏதேனும் ஒரு கிழமையைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஐந்து காமாட்சிகளுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். கருவறையில் உள்ள காமாட்சி அம்பாளுக்கு, ஐந்து காமாட்சிக்கும் சேர்த்து அர்ச்சனை செய்வது விசேஷம் என்பார்கள். |
12.
How to
worship Pancha Kamakshi?
Choose any
day of the week. Perform archanas (Offerings) to all the five Kamakshis.
It is believed that archanas are performed to Mother Kamakshi in the
sanctum sanctorum along with all the five Kamakshis. |
| 13. ஐந்து தேங்காய், ஐந்து விதமான பழங்கள், ஐந்து விதமான மலர்கள், வெற்றிலை, பாக்கு ஐந்து செட் என்று வழங்கி, அர்ச்சித்து வணங்கி, உங்கள் குடும்பத்துக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் பட்டியலிட்டு அன்னையிடம் சொல்லிப் பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்து ஐந்து முறை பிராகார வலம் வந்து நமஸ்கரியுங்கள். |
13.
Offer five
coconuts, five types of fruits, five types of flowers, five sets of
betel leaves, areca nut and pray to the Mother. Next go around the
prakara five times and do namaskar (greetings, homage). |
|
14. எந்தக் கிழமையில் நீங்கள் வந்து தரிசித்தீர் களோ, அதே கிழமையில் அடுத்தடுத்த வாரங்களில் வந்து காமாட்சி அம்பாளைக் கண்ணார தரிசித்து, ஐந்து அம்பிகையருக்கும் அதே போல் ஐந்து அர்ச்சனைகள் செய்து, 15. வேண்டிக்கொள்ளுங்கள். அதன் பலனாக காமாட்சித் தாயின் பேரருள் கிடைத்து, பெருவாழ்வு வாழ்வீர்கள். |
14.
On the same
day of a week as you came and worshipped, come to Kamakshi Ambal in
successive weeks and pray to the five Ambicas by performing five
archanas in the same way. As a result, you will get the blessings of
Mother Kamakshi and live a great life. |
| 15. உங்கள் காரியங்களில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நினைத்த காரியங்கள் யாவிலும் தேவி துணை நின்று காத்தருள்வாள். வீட்டில் வறுமை நீங்கும்; செல்வம் பெருகும்; நகை ஆபரணங்களும் பொன் - பொருளும் பல்கிப் பெருகும்! |
15.
All the
obstacles in your work will be rendered into dust. Devi will support and
protect you in all the things you want. Poverty at home will fade away;
Wealth will increase; Jewelry and gold will increase! |
|
16. வசதி வாய்ப்பு இருந்தால், ஐந்து அர்ச்சனை கள் செய்யும்போது, ஐந்து
விதமான பழங்களுடன் ஐந்து வித இனிப்புகளும், சர்க்கரைப் பொங்கல்,
வெண்பொங்கல், புளியோதரை, சம்பா மிளகு சாதம், தயிர் சாதம் என ஐந்து வகைச்
சித்ரான்னங்களும் படைத்துப் பிரார்த்திக்கலாம். |
16.
If the
opportunity permits, while performing five archanas, one can offer five
types of sweets with five kinds of fruits, five types of chithrannas
such as Sweet Pongal, Ven Pongal, Tamarind, Samba pepper rice and curd
rice. |
|
17. பஞ்ச காமாட்சி தஞ்சையில் அருளும் பங்காரு காமாட்சி! காஞ்சியில் பிரம்மதேவரால் எழுந்தருளச் செய்யப்பட்டு, அவரால் வழிபடப்பட்ட அம்பிகை சொர்ண காமாட்சி. பின்னாளில் அந்நியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் அப்போதைய பீடாதிபதியாக இருந்த சுவாமிகள், ஆதிகாமாட்சியை தியானித்து, சொர்ண காமாட்சியை அந்நியர்களிடமிருந்து பாதுகாக்கும் வழியை உணர்த்தும்படி பிரார்த்தித்தார் |
17.
Pancha
Kamakshi
Bangaru
Kamakshi offers grace in Thanjavur!
Swarna
Kamakshi is the Ambica installed by Lord Brahma and worshipped by Lord
Brahma in Kanchi. Then came the invasion by
foreigners. Swamigal, the then
pontiff of Kanchi Kamakoti Sankara Mutt, meditated on Adikamakshi and
prayed to her to show him the way to protect Swarna Kamakshi from
foreigners. |
| 18. அம்பிகையின் திருவுள்ளக் குறிப்பின்படி, காஞ்சியிலிருந்து சுவர்ண காமாட்சி தஞ்சைக்குப் பயணப்பட்டாள். தஞ்சையை அடைந்த அன்னையைத் தரிசித்த மன்னன் பிரதாபசிம்மன், சொர்ணமயமான அம்பிகையின் அருளொளி வீசும் அறக்கருணையில் மெய்ம்மறந்து, ‘நா பங்காரு காமாட்சி, நா பங்காரு காமாட்சி’ என்று பக்திப் பரவசத்துடன் அழைத்தார். அப்போதிருந்து சொர்ண காமாட்சி ‘பங்காரு காமாட்சி’ என்று திருப்பெயர் பெற்றாள் என்பார்கள்! |
18.
According
to Ambica's instructions, Swarna Kamakshi travelled from Kanchi to
Thanjavur. On reaching Thanjavur, King Pratapa Simha, mesmerized by the
grace of Mother Ambica, called her "Naa Bangaru Kamakshi, Naa Bangaru
Kamakshi" with devotional ecstasy. From then on, Swarna Kamakshi came to
be known as 'Bangaru Kamakshi'! |
| 19. அந்நியப் படையெடுப்பின்போது பங்காரு காமாட்சியின் திருமேனி, தஞ்சாவூர் - கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையார்பாளையம் ஜமீனிடம் பத்திரமாக வைத்திருக்கும்படி கொடுக்கப்பட்டது. பின்னாளில், ‘இந்த பங்காரு காமாட்சி, தஞ்சாவூர்லயே இருக்கட்டும்’ என்று காஞ்சி சங்கராச்சார்யார் அருள... அதன்படி அமைந்ததுதான் தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி அம்பாள் கோயில் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுவது உண்டு. |
19.
During the
foreign invasion, the idol of Bangaru Kamakshi was given to the Zamin of
Udayarpalayam near Thanjavur-Kumbakonam for safekeeping. Later, Kanchi
Shankaracharya said, "Let this Bangaru Kamakshi remain in Thanjavur." It
is said that Bangaru Kamakshi Ambal temple in Thanjavur was built
accordingly. |
|
20. சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனை சங்கீத மும்மூர்த்தியரில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இந்த அம்பிகையின் மீது அதீத பக்தி கொண்டவர். |
20.
Shyama
Sastri's Keerthana
Shyama
Sastrigal, one of the Trinity of Music, was a great devotee of Ambica. |
| 21. ஒருமுறை ஆந்திர தேசத்திலிருந்து கேசவய்யா என்பவர், கர்னாடக சங்கீதத்தில் தமக்கு நிகர் யாருமில்லை என்ற அகந்தை கொண்டிருந்தார். தஞ்சைக்கு வந்த கேசவய்யா, ‘தம்மை வெற்றிகொள்ளும் தகுதியுள்ளவர் எவரேனும் தஞ்சையில் இருக்கிறார்களா?’ என்று எகத்தாளமாகக் கேட்டார். |
21.
Once
Kesavaiah, a native of Andhra, was arrogant that there was no equal to
him in Carnatic music. When Keshavayya came to Thanjai, he mockingly
asked, "Is there anyone in Thanjai who is capable of conquering him?" |
|
22. தஞ்சையின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று எண்ணிய சியாமா
சாஸ்திரிகள், பங்காரு காமாட்சியை தியானித்தார்... ‘தேவீப்ரோவ ஸமயமிதே அதிவேகமே ஒச்சி நா வெதலு தீர்சி கருணீஞ்சவே ஸங்கரீ காமாக்ஷி’ ‘தாயே, என்னைக் காப்பாற்றவேண்டிய தருணம் இதுதான். எனவே, கருணை வடிவமான காமாட்சியே, அதிவேகமாக வந்து என்னைக் காப்பாற்று’ என்ற கீர்த்தனையைப் பாடினார். பங்காரு காமாட்சியின் அருளால் கேசவய்யாவை வெற்றிகொண்டு, அவருடைய அகந்தையை அழித்தார். தஞ்சையில் அருளும் பங்காரு காமாட்சிக்கு, நவராத்திரி 9 நாள்கள், அன்னையின் ஜன்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம் மற்றும் பங்குனி உத்திரம் என வருடத்தில் 11 நாள்களில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு உகந்த விசேஷ தினங்களில் இந்த அம்பிகையைத் தரிசித்து வழிபட, பொன்மயமான வாழவை அருள்வாள் பங்காரு காமாட்சி. |
22. Shyama Sastrigal, who wanted to save the honour of Thanjavur, meditated on Bangaru Kamakshi
'Deviprova
samayamithe
High speed
is Ochi
Na Vedalu
Theerchi
Karuninjave
Sankari Kamakshi'
|