Basmasuran

 
Parallel Verses JOB  34:26
New Living Translation

He strikes them down because they are

wicked, doing it openly for all to see.

 

  

·        சக்தி விகடன் - 06 Dec, 2016

·        திருத்தலங்கள்

Posted Date : 06:00 (22/11/2016)   

Tamil Text: Sakti Vikatan

Translation: Veeraswamy Krishnaraj


முன்னொரு காலத்தில், பஸ்மாசுரன் என்றொரு அரக்கன் வாழ்ந்து வந்தான். நீண்டநெடிய காலம் தவமிருந்த அவன் முன் சிவபெருமான் தோன்றி, ‘வேண்டும் வரம் யாது’ எனக் கேட்டார்.  ‘‘எவர் தலையில் நான் கை வைத்தாலும் அவர் அப்போதே எரிந்து சாம்பலாகிவிட வேண்டும்’’ என்று வரம் கேட்டான் அசுரன். ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று வரம் தந்தார் சிவனார்.

Once upon a time, Basmasuran, a demon by birth, performed penance for a long time. Impressed by his effort, Siva appeared before him and said, “What is the boon you have on your mind?”

Basmasuran: When I place my hand on whomsoever, that person should burn and be reduced to ashes.

Siva acquiesced to his request.

Siva: So be it.

வரத்தை வாங்கியாகிவிட்டது. அது பலிக்குமா பலிக்காதா என்று சோதிக்க வேண்டாமா? இதுபற்றி யோசித்த அந்தப் பொல்லாத அசுரன், வரத்தை சோதிக்க சிவனார் சிரசிலேயே கை வைக்க முயற்சித்தான். அவனிடம் இருந்து தப்பிக்க சுயரூபத்தை மறைத்துக்கொண்ட சிவபெருமான் மண்ணானார் மருவானார்; மலையானார்; கடலானார்; நதியானார். இன்னும் பலவித உருக் கொண்டார். பின்பு, ஐவரளிச்செடியாகி, ஆயிரக்கணக்கான பழங்களுடன் காட்சி அளித்தார். ஈசனைத் தொடர்ந்து வந்த அந்த அசுரன், இறுதியாக இறைவனைத் தின்று தீர்க்க ஆட்டுக்கிடா உருவமாகி, ‘இதை மென்றே தீர்ப்பேன்’ என்று சூளுரைத்துத் தின்னத் தொடங்கினான். இதைக் கண்டு அஞ்சிய அன்னை பரமேஸ்வரி, இறைவனின் கையறுநிலை கண்டு, தனது தமையனான பெருமாளிடம் வேண்டி னாள். பெருமாளும் தெய்வ அரம்பையாக வடிவம் கொண்டு, பேரழகுடன் அந்த அசுரன் முன் தோன்றினார். அரம்பையின் அழகில் மயங்கிய அசுரன், அவளை அள்ளி அணைக்க அருகே சென்றான். உடனே அந்த அரம்பை, ‘‘இவ்வளவு அருவருப்பாக உள்ள நீ எவ்வாறு என்னைத் தீண்டலாம்? முதலில் நன்றாகக் குளித்துவிட்டுச் சுத்தமாக வா!’’ என்று கூறினாள். அசுரனும் குளிப்பதற்காகத் தண்ணீரைத் தேடியலைந்தான்.

Having gained the boon, he wanted to test its veracity and potency. He looked for a suitable victim to test his diabolical boon. He did not have to go any further. The victim was right before him. Yes, his intended victim was no other than the boon-giving Siva himself. He tried to place his hand on the head of Siva. Siva concealed his own true form and reduced himself as a heap of mud. Siva changed his forms from flower to mountain, sea, river… just to escape the demon’s palm touching his head. He assumed a multitude of beguiling forms. He presented himself as a plant with thousands of fruits. The Asura who followed Siva morphed into a ram, vowed to eat and began eating the plants and fruits. Witnessing this catastrophe and realizing Siva’s helplessness and dependency, Annai Paramesvari (Siva’s other half) supplicated to her elder brother Perumal. Vishnu Perumal took the form of a voluptuous celestial damsel (Rambhā) and appeared before the demon.  Having taken up with the drop-dead celestial beauty, the Asura rushed to embrace her.

Rambhā stopped him and addressed the Asura, “How could a disgusting you possibly touch me? First, you take good cleansing bath and then come to me.” The demon was searching hither and thither for water.

ஆனால், இறையருளால் உலகில் எங்குமே நீர் இல்லாமல் போக, அசுரனுக்கு சிறிதளவு கோமியம் மட்டுமே கிடைத்தது. அசுரனிடம், “அதுவும் நீர்தான்! சிறிதளவு கரத்தில் எடுத்து, உனது சிரசில் தடவினால், நீ சுத்தமாகி விடுவாய். பிறகு, நீ என்னுடன் சேரலாம்” என்று சொன்னாள் அரம்பை. அவளின் தெய்விக அழகில் மெய்ம்மறந்து இருந்த அசுரனும், சிரசில் கோமியத்தை வைத்துக் கையால் தேய்த் தான். அடுத்த நொடியே, தான்  வாங்கிய வரத்தின்படி எரிந்து சாம்பலாகிப் போனான்.

Because of the grace of God, there was not a drop of water anywhere in the world. He was standing by a mooing cow. He collected the cow’s urine in a half-shell of a coconut and rushed to Rambhā.

Rambhā: “I realize cow’s urine is also water. Take the urine on your palm and rub it on your head to purify yourself. Immediately thereafter you can embrace me.”

Asura, besides himself looking at the celestial beauty of Rambhā, rubbed the cow’s urine on his head vigorously. That moment, according to the precept of the boon, he was burnt and reduced to ashes.

இச்சம்பவத்தை அறியாது, தன்னை மறைத்துக்கொண்டு ஐவரளிச்செடியாக நின்ற ஈசனை, அந்த அரம்பை அழைக்க, தன் சுயரூபம் கொண்டு வந்து அந்த அரம்பையை அணைத்துக் கொண்டார் ஈசன். அவர்களுக்கு ஹரி, ஹரன் என இரு குழந்தை கள் பிறந்தன. இவர்களுக்கு மக்கள், திருக்கோயில் எழுப்பி, வழிபடத்தொடங்கினர். இந்தக் கோயில் முதலில் ஹரிஹரன் திருக்  கோயில் என்று அழைக்கப்பட்டு, இன்று அது நாட்டராயன் நாச்சி முத்து சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது.

Not knowing the incident, Siva stood in the form of a bush. Ramba called out for Siva, who upon assuming his own farm, embraced her. They bore two children: Hari and Haran. People built a temple for these two deities and worshipped them. Initially it was named Hariharan Sacred Temple. Today it is called Nāttarāyan Nācci Muthu Swamy Temple.
 
Sources: Google Images and Wikipedia