BouquetOfStories-01
கதைக் கொத்து (Madurai Project)

சி. சுப்ரமணிய பாரதி .
By Bharathiyar
Bharathiayar Stories
Madurai Project. Stories in Tamil
Translation: Veeraswamy Krishnaraj
1. வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை  1. Vaisakthan: The Pandaram's Story
1. வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை Priest Vaisakthan
வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் temple priest நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.
அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு. 1

''உனக்கு எந்த ஊர்?'' என்று கேட்டேன்.
''நடுப்பட்டி'' என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.
''நீ எந்த மதம்?'' என்று கேட்டேன்.
''வைச்சாக்தம்'' என்றான். 2

சிரிப்புடன் ''அதற்கர்த்தமென்ன?'' என்று கேட்டேன்.
''வைஷ்ணவ-சைவ-சாக்தம்'' என்று விளக்கினான்.
''இந்த மதத்தின் கொள்கையென்ன?'' என்று கேட்டேன்.
அப்போது பண்டாரம் சொல்லுகிறான்-
''விஷ்ணு தங்கை பார்வதி. பார்வதி புருஷன் சிவன். எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்ப வேண்டும். செல்வத்தைச் சேர்க்க வேண்டும். இவ்வளவுதான் எங்கள் மதத்தினுடைய கொள்கை'' என்றான். 3

''இந்த மதம் யார் உண்டாக்கினது?'' என்று கேட்டேன்.
''முன்னோர்கள் உண்டாக்கினது. தனித் தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும் ஒன்று சேர்த்தால் மிகவும் நன்மை யுண்டாகுமென்று எனக்குத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளும், தில்லை நடராஜரும் கனவிலே சொன்னார்கள். ஆதலால் ஒன்றாகச் சேர்த்தேன்'' என்று அந்தப் பண்டாரம் சொன்னான். 3
1. A temple priest was singing a song on the street in Vedapuram. He had a Namam, Vibhuthi, and Kumkum on his forehead, one on top of another in that order.
2. Bharathiyar: What is the name of your town?
Pandāram: ''Naduppatti''
Bharathiyar: "What is your religion?"
Pandāram: ''Vaichsāktham ('வைச்சாக்தம்').''
3. Laughing, I asked him," What does it mean?"
He explained, "Vaishnava-Saiva-Sāktham."
"What are the tenets of this religion?"
The Pandāram explained, "Vishnu's sister is Parvati. Her husband is Sivan. All deities are one. We must believe in God. We should accumulate wealth. That is all. That is all the tenets of our religion."
4. Bharathiyar: "Who is the founder of your religion?"
Pandāram: "Ancestors. Tirupati Venkatesa Perumal and Thillai Natarajar came into my dream and told me, "If you combine all three religions, greater good will come out of them. Therefore, I created this syncretic religion.

2. சிறுகதை 2. Short Story
2. சிறுகதை
ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக இருந்த படியால், தனக்கு, ஆஹாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள்.
புருஷன் வந்தவுடன், ''நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆஹாரம் வேண்டாம்'' என்றான். 1

உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்து விடவில்லை தங்களிருவருக்கும் உபயோகமில்லாவிடினும் மறுநாள் காலையில் வேலைக்காரிக்கு உதவுமென்று நினைத்து அது நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருந்து வடித்து வைத்து விட்டுப் பிறகு நித்திரைக்குச் சென்றாள்.

அது போலவே, கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்திவிடமாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.

பிரார்த்தனை

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாஹமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் படி அருள் செய்க.
1. Husband and wife lived in a house. She was unwell and decided she would not eat any food that night. She cooked enough food for her husband.
The husband came home that night and told his wife he was observing ritual fasting and, therefore, would not eat.
2. The wife did not turn off the hearth’s fire with a sprinkling of water. She thought the prepared food would be useful for the maid in the morning. She boiled the food items fully, stored them, and went to bed.
Likewise, the Karma yogi will not stop his work because It was of no use for him. Believing the effort will be helpful for others, he will continue his work, complete it, and only then initiate another work.
Supplication. O Devas! Please confer on me eternal grace and blessings as follows: The elder’s intellectual maturity, mid-life person’s mental strength, youth’s enthusiasm, and child’s heart.
3.1 ஆனைக்கால் உதை 3.1 Kick with elephantiasis leg
3. சில வேடிக்கைக் கதைகள்
3.1 ஆனைக்கால் உதை
ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவதுண்டு போகும் போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டுபோக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரமாண்டமான காலைக் காட்டிப் ''பயல்களே, கூடையிலே கை வைத்தால் உதைப்பேன். ஜாக்கிரதை!'' என்பான்.

''சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக்காலால் அடி பட்டால் நாம் செத்தே போவோம்'' என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலை சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி, ''அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை'' என்றான் மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். ''வெறுஞ் சதை''யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து ''எலும்புள்ள'' கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப் படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?
  1. A man with an elephantiasis leg had a fruit market. Children used to go on the street and desired to take some fruits. When they showed up in the fruit market, the elephantiasis man showed his huge leg and said, ''Boys! If I find your hands in the basket, I will kick you.'' 
  2. ''The children ran away from the market thinking, ''If an ordinary leg kicks us, it hurts. But if the elephantiasis leg hits, we will die.'' So thinking, they ran away.
  3. One day, when the merchant was looking elsewhere, one boy sneakily took a fruit from the basket. The merchant turned around and picked up his huge leg, and hit the boy with it. The boy laughed. The leg fell on him like a soft pillow. He called on his friends at the corner and said, ''It is all fat. There is no bone. All people appear as children in some matters. People from a distance think of the minor difficulties as major impediments and suffer anguish.'' 

3.2 கவிராயனும் கொல்லனும் 3.2 The poet and the blacksmith

3.2 கவிராயனும் கொல்லனும்

ஐரோப்பாவிலே மஹா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப்பட்டது. அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம்போன படிக்கெல்லாம் பாடிக்கொண்டிருந்தான். கவிராயருக்கு மஹா கோபம் வந்துவிட்டது. உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலிருந்து சாமான்களையும் கருவிகளையும் தாறுமாறாக மாற்றி வைத்துக் குழப்ப முண்டாக்கத் தொடங்கினார். 1

 

கொல்லன் கோபத்துடன்: 'நீ யாரடா, பயித்தியம் கொண்டவன், என்னுடைய ஸாமான்களை யெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்?'' என்றான்.

 

''உனக்கென்ன?'' என்று கேட்டார் கவிராயர்.

 

''எனக்கென்னவா! என்னுடைய சொத்து, தம்பீ என்னுடைய ஜீவனம்!'' என்றான் கொல்லன்.

 

அதற்குக் கவிராயர்: அது போலவே தான், என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக்கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே; என்னுடைய பாட்டை நீ தாறுமாறாகக் கலைத்தாய் எனக்கு அதுதான் ஜீவனம். இனி மேல் நீ சரியாகப் படித்துக் கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே' என்று சொல்லிவிட்டுப் போனார்.

The poet and the blacksmith

1.   A famous poet in Europe was walking on the street with the smithy. He heard a song, and upon looking around, he discovered the blacksmith was singing a poetic piece that he composed. He sang the words out of sequence; some were his own making. It did not follow the meter. The poet of poets became angry. He entered the smithy and rearranged his tools erratically to the point of confusion.  

2.   The blacksmith, equally angered, spoke to the poet, ''Who the heck are you? You crazed nincompoop! You rearranged my tools. It will take a long time to rearrange them appropriately. 

Poet: ''How does that affect you?'' 

Blacksmith: How? All these are my property, bother! My job is my life.''

Poet: ''Likewise, what you said applies to my poem. I composed the poem you sang sometime ago. You ruined my poem. Writing poetry is my livelihood. Hereafter, never sing a song, not knowing the lyrics, the meter, the words, and the meaning.'' So saying, heft the smithy

     

3.3 அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன் 3.3 A Chinese prince goes to America
3.3 அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்
சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள், ''உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?'' என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: 'உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?'' என்றான்.
A prince from China went to America. An American woman conversed with a Chinese guest and asked the Chinese woman, "Is it true that the prospective Chinese bride never saw the face of the future husband until the wedding day?" The prince intrusively jumped into the conversation and asked the American woman, "In your country, some women, after the wedding, never see the husband's face. Is that true?"
3.4 சாஸ்திரியார் மகன் 3.4 Sastri's son and the broken wagon
3.4 சாஸ்திரியார் மகன்
ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய்:- ''குழந்தாய், ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டான்.

பையன:- ''வண்டி ஒடிஞ்சு போச்சு''.

சிப்பாய்:- ''இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்.''

பையன்:- ''எங்கப்பா சாஸ்திரியார், அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார். வேறே ஒரு இழவுந் தெரியாது'' என்று விம்மி விம்மியழுதான். சிப்பாய் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.
A youngster stood on the street, crying over his broken play wagon. A soldier, seeing the crying child, asked, ''Child! Why are you crying?''
Boy: ''The wagon broke.''
Soldier: ''Do not cry. Go home. Your father will fix it.''
Boy: ''My father is a Sastri. He cannot mend my wagon. He has no expertise in any vocation. If any householder gives him rice, he brings it home. He does not know a darn thing about anything. He cried and sobbed.
The soldier went on his way, laughing.
3.5 ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம் 3.5 A new cause for a disease.
3.5 ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்
வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சினேகமாக இருந்தார்கள். வாத்தியார், செட்டியாரிடம் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். செட்டியாருக்கு ஒரு நாள் காலிலே முள் தைத்துப் பிரமாதமாக வீங்கியிருந்தது.

''செட்டியாரே, கால் ஏன் வீங்கியிருக்கிறது?'' என்று வாத்தியார் கேட்டார்.

''எல்லாத்துக்கும் காரணம் கையிலே பணமில்லாததுதான்'' என்று செட்டியார் சொன்னார்.

சில தினங்களுக்குப் பின் வாத்தியாருக்கு பலமான ஜலதோஷம் பிடித்திருக்கிறது. செட்டியார் வந்தார். ஏன், ஐயரே, ஜலதோஷம் பலமாக இருக்கிறதே'' என்று கேட்டார்.

''கையிலே பணமில்லை. அதுதான் சகலத்துக்குக் காரணம்'' என்று வாத்தியார் சொன்னார். செட்டியார் புன்சிரிப்புடன் போய்விட்டார்.
A schoolteacher and a Chettyar were friends in Vedapuri. The teacher borrowed money from the Chettyar. Chettyar stepped on a thorn one day, and his leg swelled up.
The teacher: ''Chettyarē! Why is your leg so swollen?
Chettiar: ''The reason for all is no money on hand.''
A few days later, the teacher developed a severe cold. Chettyar came home to him and asked him, ''Why Aiyarē! Your cold seems very severe.''
Teacher: ''No money on hand. That is the cause of all (maladies). Chettyar left him with a smile.
   
5. கிளிக் கதை 5. StoryOfParrots
BHA-SS-05
5. கிளிக் கதை
எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்காந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் தொழில். பிரசங்கம் தொடங்கு முன்பு பரதேசி கிளியை நோக்கி,

"முருகா, முருகா, ஒரு கதை சொல்லு" என்பான்.

உடனே கிளி ஏதோ கங்கா மங்காவென்று குழறும். பரதேசி சொல்லுவான்: 1

"அடியார்களே இங்கிருப்பது கிளியன்று. இவர் சுகப்பிரம ரிஷி. இவர் சொல்லிய வசனம் உங்கள் செவியில் தெளிவாக விழுந்திருக்கும். சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நான் அவர் சொல்லியதை மற்றொரு முறை சொல்லுகிறேன்.

கங்கா மங்கை மைந்தன்
பாம்பைத் தின்றது மயில்
மயிலின் மேலே கந்தன்

"இதன் பொருள் என்னவென்றால்..." இவ்விதமாகத் தொடங்கியப் பரதேசி, கந்த புராணம் முழுவதையும் நவரசங்களைச் சேர்த்துச் சோனாமாரியாகப் பொழிவான். ஜனங்கள் கேட்டுப் பரவசமடைந்து rapture போய் பொன் பொன்னாகப் பாத காணிக்கை குவிப்பார்கள். அவன் அந்தப் பணத்தை எவ்விதமாகச் செலவழிப்பானோ யாருக்கும் தெரியாது. அது தேவர், மனுஷ்யர், அசுரர் மூன்று ஜாதியாருக்கும் தெரியாத ரகசியம். இருந்தாலும் ஊரில் வதந்தியெப்படி யென்றால், இவன் மேற்படி பொன்னையெல்லாம் மலையடி வாரத்தில் ஏதோ ஒரு குகைக்குள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இருபது வருஷத்துக்குப் பிறகு அத்தனை பொன்னையும் எடுத்துப் பெரிய கோவில் கட்டப் போவதாகவும் சொல்லிக் கொண்டார்கள். 2

இப்படியிருக்கும்போது ஒருநாள், திடீரென்று மிளகாய்ப் பழச்சாமி மறைந்து போய்விட்டான். பொழுது விடிந்து தூப்பு வேலை செய்யும் கிழவி வந்து பார்க்கும்போது, மடம் திறந்து கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்தால், சாமியார், கூடு, கிளி, தடி, புஸ்தகம், திருவோடு முதலிய யாதொரு வஸ்துவுமில்லை. கிழவி கூவி விட்டு வீடு போய்ச் சேர்ந்தாள். ஊரதிகாரிக்குத் தெரிந்தது.3

பொன்னை ஒரு வேளை பரதேசி மறந்து போய் வைத்து விட்டுப் போயிருக்கக்கூடும்; அதை யெடுத்து யாதேனும் ஓர் தர்மம் பண்ணலாமென்ற தர்ம சிந்தையினால் அதிகாரி சேவகரை விட்டு மலையிலுள்ள பொந்து முழுவதையும் தொளை போட்டுப் பார்க்கச் சொன்னார். சிற்சில இடங்களில் ஓரிரண்டு பொன் அகப்பட்டது. தேடப் போனவர்களில் பலரைத் தேள் கொட்டிற்று. அநேகரைப் பாம்பு தீண்டிற்று. அதிகாரி தேடுவதை நிறுத்திவிட்டார். 4

சில தினங்களுக்கப்பால் வாழைப்பழச் சாமியாரென்ற மற்றொரு பரதேசி, ஒரு கட்டுக் கட்டிவிட்டான். அதெப்படியென்றால், மிளகாய்ப் பழச்சாமி பொற்குடத்துடன் ஆகாயத்தை நோக்கிப் பறந்து போய் மேகமண்டலத்துக்குள் நுழைந்ததைத் தான் பக்கத்திலே யிருந்து பார்த்ததாகவும், தானேயிருந்து வழியனுப்பினதாகவும், புரளி பண்ணினான். அதிகாரி அடியார் விசுவாசமுள்ளவராகையால் அந்தப் பரதேசி சொன்னதை நம்பி, அவர் பொன்னைத் தான் தேடப் போனது குற்றமென்று நினைத்து, மேற்படி மிளகாய்ப் பழச்சாமிக்கு வருஷந்தோறும் மேற்படி மடத்தில் குருபூஜை நடத்தி வைப்பதாகவும், மடத்தை வாழைப்பழச் சாமி வைத்துக் கொண்டு கந்த புராணப் பிரசங்கஞ் செய்து வந்தால் திருவிளக்குச் செலவு தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். வாழைப்பழச்சாமி சம்மதம் கொண்டு மடத்தை ஒப்புக் கொண்டார். 5

இவனுடைய விசேஷமென்னவென்றால், இவன் நாளொன்றுக்கு இருபது வாழைப்பழம் தின்று ஒரு மிடறு தண்ணீர் குடிப்பான். அதன் பிறகு ஜலபானம் கிடையாது. இவனும் ஒரு கிளி வளர்த்தான். அதற்கும் கங்கா மங்கா என்று கற்றுக் கொடுத்து, அதையும் சுகப்பிரம ரிஷியென்று சொன்னான். ஆனால் பிரசங்கம் செய்வதில் பழைய சாமியாருக்குள்ள திறமையில் நூற்றிலொரு பங்குகூட இவனிடம் கிடையாது. ஆகையால் இவனுக்குப் பழைய வரும்படியில் நூறிலொரு பங்குகூட கிடையாது. இருந்தாலும் சொற்பத்தைக் கொண்டு ஒருவாறு வாழைப்பழச் செலவை நடத்திவந்தான். 6

இப்படியிருக்கையில் ஒருநாள் நாலைந்து புதிய சீடருக்குக் கந்தபுராணம் சொல்லத் தொடங்கி வாழைப்பழச்சாமி தனது சுகப்பிரம ரிஷியிடம் கேள்வி போட்டு கொண்டிருக்கையிலே, திடீரென்று மடத்துக்குள் பழைய மிளகாய்ப்பழச்சாமி தனது கிளிக்கூடு சகிதமாக வந்து தோன்றினான். சாமிக்கும் சாமிக்கும் குத்துச் சண்டை. மிளகாய்ப் பழச்சாமி காலை வாழைப்பழச்சாமி கடித்துக் காலிலே காயம். வாழைப்பழச்சாமிக்கு வெளிக்காயம் படவில்லை. உடம்புக்குள்ளே நல்ல ஊமைக் குத்து. அப்போது வந்த காய்ச்சலிலே ஆறு மாசம் கிடந்து பிழைத்தான். குத்துச் சண்டையின்போது கிளியும் கூட்டுக்குள் இருந்தபடியே ஒன்றுக்கொன்று கங்கா மங்கா என்று அம்பு போட்டதுபோல் தூஷணை insultசெய்து கொண்டன.7

அந்தச் சமயத்தில் ஊர்க்கூட்டம் கூடி, அதிகாரியிடமிருந்து சேவகர் வந்து இரண்டு பரதேசிகளையும் பிடித்துக் கொண்டு போய் நியாய ஸ்தலத்தில் விட்டார்கள். வாழைப் பழச்சாமியை ஊரை விட்டுத் துரத்திவிடும்படிக்கும், மிளகாய்ப் பழச்சாமி மடத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும், இனிமேல் கந்தபுராண உபந்யாசத்தில் வரும் பொன்னில் ஆறிலொரு பங்கு கோயிலுக்கும், நாலில் ஒரு பங்கு அதிகாரிக்கும் செலுத்தி விடும்படிக்கும் நியாய ஸ்தலத்தில் தீர்ப்புச் செய்யப்பட்டது. 8

1. Milakaipazasamy a Paradesi lived in Tiruvannamalai 800 years ago. He ate twenty ripe chilies with a draught of water. He carried a parrot with him and narrated Skanda Purana stories to the monastery visitors. Before the discourse, he called out the parrot to say, ''Murugā, Murugā, Narrate a story.'' Immediately the parrot babbled.

2. Paradesi said, ''Devotees! This is no ordinary parrot. He is Sukha-Brahmana Rishi. His clear spoken words must have fallen into your ears. In the unlikely event, you did not pay enough attention, I will repeat what the bird said.
Ganga Mangai’s son (Mangai = beautiful woman)
The peacock ate the snake
Kandan rode on the peacock.
''The meaning of the poem is…'' Starting the narration like this, the Paradesi showered an incessant rain of stories in their nine sentiments (Navaracam). The people, immersed in rapture hearing these stories, gave heaps of gold at his feet. No one knew how he spent all these riches. It was a secret unknown to Gods, humans, and Asuras. The circulating rumor was that he stashed away the gold in a cave in the base of the mountain and that he would use it twenty years later to build a temple.

3. As the rumor prevailed as such, Milakaipazasamy, the Paradesi disappeared one day. The next morning, the cleaning woman found the monastery with open doors. She entered the premises and did not find the Swamiyar, the cage, the parrot, the ceremonial staff, the book, the begging skull bowl, and the rest. The old woman emitted a loud cry and went home. The city officials discovered what happened.

4. The officials thought the Paradesi might have forgotten the hoard of gold and ordered the volunteers to dig all the mountain caves to retrieve the gold and give it to charity. The volunteers found one or two pieces here and there. Many of the helpers suffered scorpion stings and snake bites. The officials stopped the search.


5. A few days later, Vāzaipaza Swamy, a Paradesi himself, spun a false story. Accordingly, Milakaipazasamy, with the pot of gold on hand flew into the cloud mandala, which he witnessed himself at close quarters and sent him on his way. The official, believing what the new Paradesi said, felt going in search of gold was his crime and he would authorize yearly Gurupūjai for Milakaipazasamy, authorized Vāzaipaza Swamy to conduct Skanda Purana discourses in the mutt. The official promised to pay for the maintenance of the sacred lamp. Vāzaipaza Swamy accepted the position in the mutt.

6. What is peculiar about him is he ate twenty bananas daily with water. After that, he did not drink the water. He taught his parrot some gibberish and named it Sukhabrahma Rishi. This Banana Swamy did not have one in 100 parts of knowledge of the former Swamy. Therefore, he received less than one in one hundred parts of his share. Whatever income he received went to pay for his bananas.

7. One day, the Banana Swamy was narrating Skanda Puranam to his pupils and posed questions to the Sukhabrahma Rishi, the parrot. Out of the blue, the old Swamy (Milakaipazasamy = Chili Swamy) showed up with his parrot. A fistfight ensued between the two Swamys and the Banana Swamy sustained a bite from chili Swamy, which resulted in an internal bruise without an external mark. The two parrots exchanged barbs and arrows of insults from their cages.

8. A crowd of concerned citizens assembled in the Mutt and two peace officers took them to the court. The Banana Swamy (the second one) was fired and led out of town. The court handed the verdict. The Chili Swamy could continue his discourses on Skanda Purana and was ordered to pay one in six parts of income in gold to the temple, and one in four parts to the officers
                                                                   6. இருள்  6. Darkness
வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணூறு வருஷங்களுக்கு முன் திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவனுடைய பந்துக்களிலே சிலர் விரோதத்தினால் அவனுக்குப் பல தீங்குகள் செய்யலாயினர். ஒரு நாள் இரவில் அவன் நித்திரை செய்யும்போது எதிரிகள் அரண்மனை வேலைக்காரரிலே சிலரை வசமாக்கி உள்ளே நுழைந்து அவன் கால்களைக் கட்டி எடுத்துக் கொண்டு போய் சமீபத்திலிருந்த மலைச்சாரலில் ஒரு குகைக்குள்ளே போட்டு வெளியே வரமுடியாதபடி ஒரு பாறையால் மூடி வைத்து விட்டார்கள். இவ்வளவுக்கு மிடையே அவன் கண் விழிக்காதபடி மூக்கிலே ஒரு மயக்கப் பச்சிலையின் சாற்றைப் பிழிந்து விட்டார்கள். 1.

நெடுநேரம் கழிந்த பிறகு பச்சிலையின் மயக்கம் தெளியவே அரசன் கண்ணை விழித்துப் பார்க்கும்போது கை, கால்கள் கட்டுண்டு தான் பேரிருளிலே கிடப்பதை உணர்ந்து கொண்டான். ''எங்கிருக்கிறோம்?'' என்று சிந்தித்தான். இடம் தெரியவில்லை. ''நமக்கு யார் இவ்விதமான தீமை செய்திருக்கக் கூடும்?'' என்று யோசனை செய்து பார்த்தான். ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தான். சாத்தியப்படவில்லை. தாகம் நாக்கை வறட்டிற்று. கண்கள் சுழன்றன. நெஞ்சு படீல் படீலென்று புடைத்துக் கொண்டது. ''தெய்வமே என்னைக் கொல்லவா நிச்சயித்து விட்டாய்?'' என்று கூவினான். 2.

''ஆம்'' என்றொரு குரல் கேட்டது.

''ஆமென்கிறாயே நீ யார்?'' என்று வினவினான்.

''நான் காலன். உன் உயிரைக் கொண்டுபோக வந்திருக்கிறேன்'' என்று அந்த மறை குரல் சொல்லிற்று.

அப்போது திடதித்தன். நான் யௌவனப் பருவத்தில் இருக்கிறேன். அறிவிலும் அன்பிலும் சிறந்த எனது மனைவியையும், சிங்கக் குட்டி போன்ற என் மகனையும், செழிப்பும் புகழும் மிகுந்த என் நாட்டையும் விட்டு விட்டு உன்னுடன் வருவதில் எனக்கு ஸம்மதமில்லை. இங்கிருந்து போய்விடு'' என்றான். மறை குரல் கொல்லொன்று சிரித்தது.

''நான் எப்போது கொண்டு போகப்பட்டேன்?'' என்று திடசித்தன் கேட்டான்.

''விடியும் ஒரு ஜாமத்திற்குள்ளே'' என்று குரல் சொல்லிற்று. இது கேட்ட மாத்திரத்திலே திடசித்தன் அயர்ந்துபோனான். கண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. நெஞ்சு முன்னிலும் விரைவாக அடித்தது. கால்கள் பதறலாயின. 3

அப்போது அவனுடைய தாய் சொல்லிக் கொண்டிருந்த மந்திரமொன்று நினைப்பு வந்தது. உடனே உச்சரித்தான் தாய் இறந்துபோகும் ஸமயத்தில் அவனை அழைத்து அந்த மந்திரத்தை அவன் காதில் உபதேசம் செய்துவிட்டு, ''மகனே, உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்த சமயத்திலும் நீ இம்மந்திரத்தை உச்சரித்தால் விலகிப் போய்விடும்'' என்று சொல்லியிருந்தாள். 4

இப்போது அதனை உச்சரித்தான். 'கரோமி' (செய்கிறேன்) என்பதே அம்மந்திரம். ''கரோமி, கரோமி, கரோமி'' என்று மூன்று தரம் சொன்னான்.

காலிலே ஒரு பாம்பு வந்து கடித்தது.

''தாயே. உன் மந்திரத்தின் பயன் இதுதானா?'' என்று அலறினான்.

''அஞ்சாதே மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு. மந்திரத்தைச் சொல்லு. மந்திரத்தைச் சொல்லு,' என்று அசரீரிவாக்கு பிறந்தது.

இந்தப் புதிய வாக்கைக் கேட்கும்போது அவனுடைய தாயின் குரலைப் போலே இருந்தது.

''கரோமி, கரோமி, கரோமி'' செய்கிறேன், செய்கிறேன். செய்கிறேன்'' என்று மறுபடி ஜபிக்கலானான்.

''குரு, குரு, குரு'' (செய்,செய்,செய்) என்றது அசரீரி.

உடனே மூச்சையுள்ளே இழுத்து அமானுஷிகமான வேகத்துடன் கையை உதறினான். கைத்தளைகள் படீரென்று நீங்கின. உடைவாளையெடுத்தான்.

செய், செய், செய், என்று மறுபடி சத்தம் கேட்டது.

பாம்பு கடித்த கால் விரலைப் பளிச்சென்று வெட்டி எறிந்து விட்டான். குரு, குரு, குரு என்ற சத்தம் மீண்டும் கேட்டது.

உடம்பிலிருந்த துணியைக் கிழித்து, மண்ணிலே புரட்டி அதிக கால் ரத்தம் விரலிலிருந்து விழாதபடி சுற்றிக் கொண்டான்.

மறுபடியும் 'செய்' என்ற தொனி பிறந்தது. தலைகளை வாளால் வெட்டி விட்டான்.

அப்போது அவனுடைய சரீரத்திலே மறுபடியும் ஆயாஸ முண்டாயிற்று. அப்படியே சோர்ந்து விழுந்தான். ஜ்வரம் வந்து விட்டது. மரணதாக முண்டாயிற்று.

''ஐயோ, தாகம் பொறுக்கவில்லையே, என்ன செய்வேன்?'' என்று புலம்பினான்.

''மந்திரத்தை ஜபம் பண்ணு'' என்றது அசரீரி.

கரோமி, கரோமி, கரோமி என்று தாய் மந்திரத்தை மறுபடி ஜபித்தான்.

''செய்'' என்று கட்டளை பிறந்தது.

''என்ன செய்வது?'' என்றேங்கினான்.

''சோர்வடையாதே. செய்கை செய்'' என்றது தொனி.

''என்ன செய்வது?' என்று பின்னொரு முறை கேட்டான்.

''கல்லிலே முட்டு'' என்று கட்டளை பிறந்தது. 5

எழுந்து வந்து குகையை மூடியிருந்த பாறையிலே போய் முட்டினான். மண்டையுடைந்து செத்தால் பெரிதில்லையென்று துணிவு கொண்டு செய்தான். மண்டையுடையவில்லை குகையை மூடிச் சென்றவர்கள் அவஸரத்திலே அந்தக் கல்லை மிகவும் சரிவாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். பாறை சரிந்து கீழே விழுந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தான். சூர்யோதயம் ஆயிற்று, கரோமி, கரோமி, கரோமி; செய்கிறேன், செய்கிறேன் செய்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு தனது ராஜதானி போய்ச் சேர்ந்தான். பிறகு அவனுக்கோர் பகையுமில்லை. 6
1. King Thidachchiththan was the ruler of Vidya Nagaram 800 years ago. A few relatives joined the enemy camp and created evil on him. When the king was asleep, his enemies overwhelmed a few night workers, entered the palace, tied up the king's legs, interned him in a nearby mountain cave, and blocked the entrance with a boulder. The hijackers instilled soporific herbal juice into his nostrils.
2. After a long time, the king woke up, in pitch darkness, from his herbal anesthetic to find his hands and legs tied up. He wondered where he was but could not guess. Unable to stand up, thirsty, and with palpitations of the heart, he could not think of who did this evil act to him. He could not stand up. He was thirsty and had palpitations of the heart. He shouted out, "O God! Are you determined to kill me?"
3. "Yes" was the voice he heard in the darkness.
The king: "Who said, 'Yes.'
The unknown voice: "I am Time. I am here to take your life."
Thidachchiththan: "I am in the spring of my youth. I am unwilling to go with you, leaving my intelligent and loving wife, the lion cub of a son of mine, and my fertile and famous country. Get out of here." The unknown voice laughed.
Thidachchiththan: "When was I abducted?"
The voice: "Sometime before dawn." When he heard the incorporeal voice, the king felt fatigued envelop him, his eyes were downcast, his heart palpitated more, and his legs trembled.
4. Then, he remembered a Mantra, his mother instructing him on her deathbed, "Son, whenever you face any great danger, recite this Mantra, and the trouble will melt away."
5. The king recited the Mantra, 'Karōmi.' He uttered, 'Karōmi, 'Karōmi, 'Karōmi three times.
A snake bit his leg.
"Mother! Is this the fruit of your Mantra?"
Mother: "Have no fear. Recite your Mantra, recite your Mantra." That was the disembodied voice of his mother.
That voice sounded like the natural voice of his mother.
"Karōmi, Karōmi, Karōmi" (Will do it, Will do it, Will do it).
The voice: "Guru, Guru, Guru" (Do, Do, Do), said the voice.
The king took a deep breath, in a superhuman act, shook his hand, and saw the handcuffs fall loose. He drew his sword.
The voice: "Do, Do, Do."
The king cut the snake-bitten toe and threw it away. "Guru, Guru, Guru" sound came again.
He pulled the clothing off his body and wrapped it around the toe to stop the bleeding.
Again, the voice said, "Do."
He felt exhausted, feverish, and thirsty.
He lamented, "Aiyō, I am unable to bear the thirst. What am I to do?"
The voice said, "Recite the Mantra."
The king recited the Mantra again, "'Karōmi, Karōmi, Karōmi."
The voice order came, "Do."
The king: "What am I supposed to do?"
The voice: "Do not give in to tiredness. Do."
The king: "What am I to do?"
The voice: "Bang your head against the rock."

6. He went to the cave's entrance and headbutted the barrier cave rock. He decided it was all right to die of head injury. His head did not break. The enemies blocked the cave's entrance in a hurry, and left the barrier stone in a slant. With the headbutt, the slab slid and fell down the hill. The king exited the cave and saw the sunrise. He uttered 'Karōmi, Karōmi, Karōmi' and reached his palace. Since then, he had no enemies.

                                                                                            7. குதிரைக் கொம்பு

                                                               BHA-SS-07 The horsé's horn

குதிரைக் கொம்பு

1. சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் என்று சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர்கள் விளங்கினார்கள்.

 

1.           Raja Rīvana Nāyakkan lived in Andhappuram in the Sindh country. He claimed he came in the lineage of Ravanan a few yugas ago. In his assembly, Pundits shined as explicators of all sastras.   

2. ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி, "குதிரைக்கு ஏன் கொம்பில்லை?" என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சம்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர், தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுக சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.

 2.           One day, the king addressed the assembly, asking them, "Why does not a horse have horns?" The pundits were dumbfounded at the question. Vakramukha Sastry, a tribute collector from the Karnataka country, informed the king he would answer the question. The king permitted Sastry to tell a story

3. "கேளீர், ரீவண மஹாராஜரே, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டான்" என்றார்.

 3.           Sastry: "Hear me Rīvana Maharaja. A long time ago, all horses had horns. Rāvanēṣvaran, your ancestor and the ruler of Lanka, issued a mandate to Brahmadevan, who accordingly stopped the horses from having horns."

4. இதைக் கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், "அதென்ன விஷயம்? அந்தக் கதையை விஸ்தாரமாகச் சொல்லும்" என்றான்.

 4.           Hearing this explanation, Rīvana Nāyakkan, joyous and horripilated, said to the Sastry, "Please tell the full story on that matter."

 

5. வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்:

"இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்து மூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஓரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள்தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்களை நடத்தி வந்தார்கள். ஆட்டுக் கணக்கு மாத்திரம்தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லியிருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷத் பரமசிவனுடைய திருவடிநிழலைச் சார்ந்தனர்.

 5.           Vakramukha Sastry told the story as follows. When Rāvanan maintained Dharmarājyam (Just rule), it rained three times a month. A year had thirteen months in those days, and each month had thirty-three days. It rained once every eleven days and amounted to thirty-nine rainy days in a year. The Brahmanas, then, were well-versed in four Vedas, six sastras, sixty-four arts and sciences, 1008 Purāṇās, and 10,080 subsidiary Purāṇās and recited them from beginning to end from memory without looking up the text. In each Brahmana household, the daily sacrifice of 24,000 goats took place, and they conducted all kinds of Yāgas. The exponents of Purāṇās mentioned the number of goats only. They could have given the numerical value of other sacrificed animals. Other Varna members performed their respective assigned duties. All people were virtuous souls and Dharma followers, enjoyed the pleasures of life here and hereafter, and took refuge under the shadow of Sākṣāt Paramasiva's holy feet.

 

 

 

6. அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரத ராஜன் பிள்ளையாகிய ராமன், தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டங்கட்டாமல் தனக்கே பட்டங்கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபமுண்டாய் ராமனையும் லட்சுமணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப் போய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டகாரண்யம் புகுந்தான்.

 6.           Raman, the son of Dasaratha Rajan of Ayodhya, caused a revolt against his father, demanding to install him as the heir apparent instead of the older Bharata. Dasaratha became angry and threw Rama and Lakshmana out of his kingdom. They went to Mithila and surrendered to Janaka, who gave them refuge and sustenance. Ramar seeing the beauty of Sita, Janaka's daughter, abducted her and took her to Dhandakarunyam.

 

7. அங்கு ராமர், லட்சுமணர் முனிவர்களை யெல்லாம் பல விதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகைத் தேவியின் காதில் பட்டது. ராவணன் தங்கை யாகையாலும், பிராமண குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லட்சுமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினிடம் உத்திரவு கொடுத்தாள். அப்படியே ராம லட்சுமணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லிப் பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம் பிள்ளைகளாகவும் இருந்தபடியால், இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம மன்னிப்பதாகவும், இனிமேல் இவ்விதமான காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்குமென்றும் சொல்லி, நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள்.

 7.           Ramar and Lakshmanar tortured the Munis and destroyed their Yāgas. This news fell into the ears of Surpanakai was the administrator of the region, a Brahmana woman, and the sister of Ravana. She asked her army to manacle the brothers and bring them to her. The minions shackled them with ropes and brought them before Surpanakai. She made the attendants untie them, threatened them with harsh words, and offered pardon for the mischief they perpetrated because of their tender age. She stressed that if they performed any maltreatment of the Munis, they would receive severe punishment. She also gave them advice. She entertained them in the palace before they went on their way.

8. அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலையில் கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்பும் பொருட்டு நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

 8.           When Sita was alone with Surpanakai, she told her that Ramar abducted her and would like to go back to her father in Mithila. Surpanakai felt compassionate and sent Sita to Ravana to send Sita back to Mithila. When Sita came to Ravana's palace, the astrologers wanted to send her to Mithila on an auspicious day. No auspicious day was available for the entire year. Ravanan ordered that Sita stay in his palace for two years before her departure home.

9. தண்டகாரண்யத்தில் ராமன் சூர்ப்பநகையிடம் "சீதை எங்கே?" என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். 'எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?' என்று கோபித்து லட்சுமணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக்கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லட்சுமணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள்.

 9.           In the Dhandakarunyam forest, Ramar asked Surpanakai, where Sita was. She said that she sent Sita to Mithila. Lakshmana became angry with Surpanakai and criticized her. Surpanakai had a kitchen knife in her waist, with which she cut off Lakshmana's ears and the big toes.

10. இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, 'அட! சீதையைத் தான் மிதிலைக்கனுப்பி விட்டாய், என்னை நீ விவாகஞ் செய்து கொள்ளு' என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு 'நீ அழகான பிள்ளைதான். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். ஆனால், அண்ணா கோபித்துக் கொள்ளுவார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும் என்றாள்.

 10.         Recognizing Surpanakai's heroic deeds, Raman fell in love with her and said," You sent Sita to Mithila. You marry me now. "With her eyes turning red from bashfulness, Surpanakai replied, "You are a handsome youngster, fit for marriage. But my older brother will get angry. It would help if you did not stay here anymore. If you remain here any longer, slander will be your lot.

11. அப்போது ராமன்: 'சீதையை எப்போது மிதிலைக்கனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?' என்று கேட்டான்.

 11.         Raman questioned her, "When did you send Sita to Mithila? Who accompanied her as an escort? How far away she is from here?"

12. அதற்குச் சூர்ப்பநகை, 'இனிமேல் சீதையின் நினைப்பை விட்டுவிடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக்கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்துவிடு' என்றாள்.

 12.         Surpanakai said, "Stop thinking of Sita from now on. I have sent her to my brother Ravana, the king of Lanka. What he will do to Sita, I have no idea. He has the power over her and the three worlds. Forget Sita."

13. இதைக்கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம். இரண்டு பேரும் ஒரு பள்ளிக்கூடத்திலே கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணனன் 'கிஷ்கிந்தா பட்டணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டான்.

 13.         Hearing this dire news, he went to Kishkinda to retrieve Sita from Ravana. Sugriva was the king of Kishkinda. His brother Vāli was the king, a friend of Ravana; they went to the same school. Ravanan received tributes from all three worlds and demanded no tribute from Vāli.

14. இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு இவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்து கொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகா கோபத்துடன் சுக்கிரீவனுக்குப் பின்வருமாறு ஓலையெழுதியனுப்பினான்.

 14.         When Vāli was asleep, his younger brother Sugriva cut off his head with a machete, forced his brother's wife Tārai to marry him, and usurped the kingdom with the help of his minister Hanuman through trickery. The news reached Ravana, who wrote an angry palm-leaf letter to Sugriva.

15. "கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகனைக் கொன்றாய். உன் அண்ணனைக் கொன்றாய், அரசைத் திருடினாய். இந்த ஓலை கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யாஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ சந்நியாசம் பெற்றுக்கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படாத விஷயத்தில் உன் மீது படையெடுத்து வருவோம்."

 15.         Ilangesan Ravana wrote a letter to Kishkinda's Sugriva. ''You killed our friendship and your older brother, usurping his kingdom. Send Tārai (Vali's wife) to the widow's convent when you receive this letter. Vāli's son, Angathan, inherits the kingdom. You must become an ascetic and leave the kingdom. If you do not follow this order, I will invade the country.''

16. மேற்படி உத்தரவு கண்டவுடன் சுக்கிரீவன் பயந்து போய் அனுமானை நோக்கி 'என்ன செய்வோம்? என்று கேட்டான். அனுமான் சொல்லிய யோசனை என்னவென்றால்,

'வாலியிடம் பிடித்துக்கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பதுகோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற் பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரசம் என்ற சாறும் அனுப்பி அவனைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். இளவரசுப் பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும் வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்' என்று அனுமான் சொன்னான்!

 16.         Reading the letter from Ravana, Sugriva, seized with fear, sought advice from Hanuman. Hanuman suggested, "You should send Tārai and millions of virgins, many millions of sacrificial animals, and many million bags of Soma Rasam in leather bags to pacify Ravana. Inform him that Angathan will be the king and that you will pay him yearly tribute in gold. If you do all these, we will survive this ordeal."

 

 

17. சுக்கிரீவன் அப்படியே அடிமைப் பெண்களும் ஆடுமாடுகளும் சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதித் தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும், சாற்றையும் ராவணன் அரண்மனையிலே சேர்ப்பித்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர் அடிக்கடி தோற்பயிலுள்ள சாற்றை குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள். ராவணன் தனது நண்பருடன் ஆடுமாடுகளையெல்லாம் அப்போதே கொன்று தின்று அந்தச் சாற்றையும் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்துவிட்டதாகவும், அவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் யாகத்திலே தட்சிணையாக்கி யெடுத்துக் கொண்டபடியால், இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் ஆசிரமங்களிலிருந்து பெரும்பாலும் ஓடிப் போய் விட்டதாகவும் செய்தி கிடைத்தது.

 17.         Sugriva followed Hanuman's advice to the letter and sent them all to Ravana. The animals, the women, and the money went to the Rishis. The Sugriva's minions handed the letter to Ravana. On the way to Ravana's palace, the minions drank Soma. Ravana and friends ate the butchered animals and drank the Soma. Later, Ravana read the letter and enquired why the slave girls and the money did not come to him. Sugriva's minions told Ravana the Rishis took the money as fees for Yaga services and recouping the money was against established Sastra rules. The girls ran away from the hermitages. Ravana received the above message.

18. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான். அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்தியெல்லாம் வேவுகாரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்கிரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படை தயாரான பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லட்சுமணரும் போய்ச் சேர்ந்தார்கள். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணூற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிப்பு குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.

 18.         Ravana ordered his general to kill all the messengers of Sugriva. The chief of the army gathered his army. His spies informed Sugriva of the impending invasion from Lanka. Sugriva assembled his invading force on the advice of Hanuman. The Ravana's forces were at the ready. But Ravana waited for an auspicious hour to launch the invasion. Hanuman gathered the warriors of his class and marched towards Lanka, with Rama and Lakshmana joining the Hanuman's contingent, which had millions of foot soldiers, horses, chariots, and elephants.

19. இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதிர்த்துக் கொன்று முடித்துவிட்டன. ராம லட்சுமணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக்கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் 'ஹா! ஹா! ஹா! நமது நகரத்திற்குள் மனிதர் சேனை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா! ஹா! ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரியமண்டலம் தரை மேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

 19.         Before Sugriva's military came to Lanka, Ravana's soldiers killed part of Sugriva's forces. Rama-Lakshmana reached Lanka with his contingent entered Lanka. The news reached Ravana, who shouted, "Ha, ha! The human brought soldiers into Lanka.'' What a joke!" He screamed so much that Adhi Sesa heard it and went deaf. Surya Mandal fell on earth. Ravana destroyed Rama's military and ordered his minions to bring the two brothers before him. Because of his compassion for your royals, Ravan did not kill them. On his order, the servants took the two princes to king Janaka. Later Sita went to Mithila.

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராஜனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லட்சுமணர் அயோத்திக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான "ராமாயணக் கதை" என்று வக்ரமுக சாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.

அப்போது ரீவணன்: "சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?" என்று கேட்டான்.

 20. Janaka married his daughter Sita to Rama as a sign of grace. Sita, Rama, and Lakshmana went to Ayodhya and behaved obediently to their father. This narrative is the true Ramayana story, according to Vakramukha Sastry, as told in the Rīvana Nayakkan's assembly. Rīvanan questioned him, "Sastry! You did not answer the question, why the horse has no horns."

 

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறான்.

ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் "ஹா", "ஹா", "ஹா", என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரியமண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேனன்றோ? அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது.

  21.         Vakramukha Sastry said, "Remember, I said the Sun Mandala fell on earth because of Ravana's loud sounds. With that, the seven horses fell, and the horns broke."

சூரியன் வந்து ராவணன் பாதத்தில் விழுந்து, "என் குதிரைகள் சாகா வரமுடையன. இவற்றைப் போல் வேகம் வேறு கிடையாது. இவற்றிற்குக் கொம்பு முறிந்து போய் விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன்?" என்று அழுது முறையிட்டான். ராவணன் அந்தச் சூரியனிடம் கிருபை கொண்டு பிரமதேவனிடம், "இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது" என்று சொன்னான். அது முதலாக இன்று வரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரமதேவன் படைத்துக் கொண்டு வருகிறான்.

 22.         The Sun fell at the feet of Ravana and said, "My horses are immortal, according to their boon. Their speed is phenomenal, and there is no one to match them. Their horns broke from the fall. The whole world will laugh at me. What shall I do?" The Sun cried and supplicated to Ravana. Showing grace and charity to the Sun God, he told Brahma Deva, the creator, "Hereafter, create from now on horses without the horns. That way, no one can laugh at the Sun's horses. Since then, Brahma, the creator, created horses without horn

இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷ்ரத்துக்கு லட்சம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணிப் பரிசு கொடுத்தான்.

 23.         Rīvana Nāyakkan, pleased with Vakramukha Sastri, gave 100,000 gold pieces based on the number of letters in his story.

   

 8. Arjuna's Dilemma

1.       8. அர்ஜுன சந்தேகம்

1.       Arjuna's dilemma. (This is a subsidiary story in Mahabharata, carrying sastra authority.)

2.       ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து:- '', கர்ணா சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?'' என்று கேட்டான். (இது மஹாபாரதத்திலே ஒரு உபகதை; சாஸ்திர ப்ரமாணauthorityமுடையது; வெறும் கற்பனையன்று).

2.         Sons of Kings Pandu and Duriyaodhana were the students in Duronacharya's school. When Arjuna was enjoying the evening breeze, he saw Karnan and asked him, "Hey Karna! Between war and peace, which is better? 

3.       ''சமாதானம் நல்லது'' என்று கர்ணன் சொன்னான்.

3.         Karnan: "Peace is good."

4.       ''காரணமென்ன?'' என்று கிரீடி கேட்டான்.

4.         Arjuna: "What is the reason?"

5.       கர்ணன் சொல்லுகிறான்:- ''அடே, அர்ஜுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அது உனக்குக் கஷ்டம். நானோ இரக்கச் சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால் சமாதானம் சிறந்தது'' என்றான்.

5.         Karnan said, 'If the fight breaks out, I will smite you. That will harm you. I am compassionate, and my mind will not tolerate such a hurtful act. It is difficult for both of us, and therefore, peace is better.

6.       அர்ஜுனன்:-''அடே கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்'' என்றான்.

6.         Arjuna: "I am not talking about either of us. In general, Is war or peace good for the world?

7.       அதற்குக் கர்ணன்:-''பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை'' என்றான்.

7.         Karnan: "I do not incline researching matters of general interest."

8.       இந்தப் பயலைக் கொன்று போடவேண்டும் என்று அர்ஜுனன் தன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான். பிறகு அர்ஜுனன் துரோணாச்சாரியாரிடம் போய் அதே கேள்வியைக் கேட்டான்.

8.         Arjuna decided in his mind that moment he should kill him. Arjuna went to Dronacharya and posed the same question.

9.       ''சண்டை நல்லது'' என்று துரோணாசார்யர் சொன்னார்.

9.         Dronacharya: ''War is good.''

10.   ''எதனாலே?'' என்று பார்த்த்ன் கேட்டான்.

10.     Parthan (Arjuna): "Why so?"

11.   அப்போது துரோணாசார்யர் சொல்லுகிறார்:- ''அடே விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும், இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம்-ஸ-ஸ-ஸ-'' என்றார்.

11.     Dronacharya: Hey Vijaya! There is money in war, besides fame and the last and not least, death. In peace, all are elusive.

12.   புறகு அர்ஜுனன் பீஷ்மாசார்யரிடம் போனான். ''சண்டை நல்லதா, தாத்தா, சமாதானம் நல்லதா?''என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவனார் சொல்லுகிறார்:-''குழந்தாய், அர்ஜுனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய ஷத்திரிய குலத்திற்கு மகிமையுண்டு. ஸமாதானத்தில் லோகத்துக்கே மகிமை'' என்றார்.

12.     Arjuna went to Bhismacharya and asked him, Grandpa! What is better, war or peace?" He, the son of Ganga, said, "My child! Peace is better. War brings greatness to the Kshatriyas (warrior class). Peace brings greatness to the world."

13.   ''நீர் சொல்லுவது நியாயமில்லை'' என்று அர்ஜுனன் சொன்னான்.

13.     Arjuna: "I see no justice in what you say."

14.   ''காரணத்தை முதலாவது சொல்லவேண்டும். அர்ஜுனா, தீர்மானத்தை அதன்பிறகு சொல்லவேண்டும்'' என்றார் கிழவர்.

14.     Bhisma: "You should mention the reason and later the decision."

15.   அர்ஜுனன் சொல்லுகிறான்:- ''தாத்தாஜீ, சமாதானத்தில் கர்னன் மேலாகவும் நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்'' என்றான்.

15.   Arjuna: "Grandpa! With peace, Karnanan is higher (has the advantage) than I am. When war breaks out, the truth will come out." 

16.   அதற்கு பீஷ்மாசார்யர்:- ''குழந்தாய், தர்மம் மேன்மையடையவும், சண்டையாலேனும், சமாதானத்தாலேனும், தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால் உன் மனதில் கோபங்களை நீக்கி சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப் போலே, மனுஷ்யர் பரஸ்பரம் mutual அன்போடிருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்'' என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.

16.   Bhisma: "Child! For Dharma to ascend, Dharma has to win in either peace or war. Therefore, you must remove the anger in you and seek peace. All men should practice mutual love as if all are siblings. Love is support in the past, present, and the future." Ashe said this, he tears of joy.  

17.   சில தினங்களுக்குப்பால் அஸ்தினாபுரத்துக்கு வேதவியாஸர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான்.

17.   A few days later, Vedavyāsar came to Hastinapuram. Arjuna asked him, "Between love and peace, which is better?" 

18.   அப்போது வேதவியாஸர் சொல்லுகிறார்:- ''இரண்டும் நல்லன, சமயத்துக்குத் தக்கபடி செய்ய வேண்டும்'' என்றார்.

18.   Vedavyasar answered him, "Both are good. One should pursue either one depending on circumstances."

19.   பல வருஷங்களுக்கப்பால் காட்டில் இருந்து கொண்டு துர்யோதனாதிகளுக்கு விடுக்கு முன்பு, அர்ஜுனன் கிருஷ்ணனை அழைத்து ''கிருஷ்ணா, சண்டை நல்லதா சமாதானம் நல்லதா?'' என்று கேட்டான்.

19.     Many years later, while in exile in the forest, Arjuna asked Krishna, "Krishna! What is better, war or peace?

20.   அதற்குக் கிருஷ்ணன்:- ''இப்போதைக்கு சமாதானம் நல்லது. அதனாலே சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப்போகிறேன்'' என்றாராம்.

20.     Krishna: At this moment, peace is better. I am leaving to Hastinapuram seeking peace."

BHA-SS-09  9. தேவ விகடம்  BHA-SS-09 A Funny Thing in the Heaven 
1) நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, "நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்" என்றார். 1   1. Narada went to Kailasam and met Nandikeshurar, who said to him. "Narada! This is not the time to see Swamy. Swamy and Devi are talking to each other in the private quarters. ONE Jāmam later (2 hours 24 minutes = 1 Jāmam), you can have an audience with Swamy. Until then, you may sit here and wait."  
2) அப்படியே நாரதர் வலப் பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர் "முப்பது வண்டி கொழுக்கட்டையும், முந்நூறு குடத்தில் பாயசமும் ஒரு வண்டி நிறைய வெற்றிலைபாக்கும் கொண்டுவா" என்று கட்டளையிட்டார். 2 2.   Narada sat on the right side. Pillaiyar was a visitor along with a Gana. Narada ordered the Gana, "Bring 30 carts of Kozhukkattai, 300 vessels of Pāyāsam, and one cart of Pan leaves.  
3)    இமைத்த கண்ட மூடும்முன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரமபரிகாரம் rest பண்ணிக் கொண்டார். நாரதரோ ஒரு கொழுக்கட்டையை யெடுத்துத் தின்று அரைக்கிண்ணம் ஜலத்தைக் குடித்தார். நந்திகேசுரர் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த இரண்டு மூட்டை பருத்திக் கொட்டையையும், இரண்டு கொள்ளு மூட்டைகளையும், அப்படியே இரண்டு மூட்டை உளுந்தையும், இரண்டு மூன்று கட்டுப் புல்லையும் ஒரு திரணம் போலே விழுங்கிவிட்டுக் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார். 3   3. Before an open eyelid could close, the Gana brought in the food items before Narada. Pillaiyar took some rest. Narada ate one Kozhukkattai and half a cup of water. Nandikeshurar ate two sacks of cotton seeds, two sacks of horse gram, two sacks of black gram, two or three bundles of grass as it was nothing, and drank some water.  
4)    பிறகு வார்த்தை சொல்லத் தொடங்கினார்கள்.
பிள்ளையார் கேட்டார்; நாரதரே, சமீபத்தில் ஏதேனும் கோள் இழுத்துவிட்டீரா? எங்கேனும் கலகம் விளைவித்தீரா?
நாரதர் சொல்லுகிறார்: கிடையாது சுவாமி. நான் அந்தத் தொழிலையே விட்டு விடப்போகிறேன். இப்போதெல்லாம் தேவாசுரர்களுக்குள்ளே சண்டை மூட்டும்
4.   A conversation ensued among the assembled. Pillaiyar said, Hey Narada! Have you brewed any scheme or told any tales? Did you incite lately any strife? Narada answered, "I am giving up all those activities. Now I mostly stopped starting fights between gods and Asuras. I incite conflict between human beings.  
5)    பிள்ளையார்: சமீபத்தில் நடந்ததைச் சொல்லும்.
நாரதர் சொல்லுகிறார்: விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவர் பெரிய லோபி; தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி, அவர் பெரிய கர்வி. செட்டியாருக்குச் செலவு மிகுதிப்பட்டுப் பார்ப்பானுக்குக் கர்வம் குறையும்படி செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த யோசனை யெடுத்தேன். நேற்றுதான் முடிவு பெற்றது. முதலாவது, பார்ப்பான் விழுப்புரத்துக்கு வரும்படி செய்தேன். 5
5. Pillaiyar to Narada: Please tell us what happened recently. Narad answered," In Vizhupuram a miserly chettyar, in Tanjore, and a Sastri, who is arrogant. Chettyar. I wanted to increase the expenses for Chettyar and reduce the arrogance of Sastry. I took the decision six months ago. Only Yesterday, I completed the task. First, I made the Brahmana go to Vizhuppuram.  
6)    பிள்ளையார்: எப்படி?
நாரதர்: செட்டியாரின் சொப்பனத்திலே போய்த் தஞ்சாவூரில் இன்ன தெருவில் இன்ன பெயருள்ள சாஸ்திரியிருக்கிறார். அவரைக் கூப்பிட்டால், உமக்குப் பலவிதமான தோஷ சாந்திகள் செய்வித்து ஆண் பிள்ளை பிறக்கும்படி செய்வார் என்று சொன்னேன். அப்படியே செட்டியாரிடம் போனால் உமக்குப் பணமும் கீர்த்தியும் மிகுதிப்பட வழியுண்டென்று பார்ப்பானுடைய கனவிலே போய்ச் சொன்னேன். செட்டியார் காயிதம் போடு முன்பாகவே பார்ப்பான் விழுப்புரத்திலே செட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். செட்டியாருக்குக் குழந்தை பிறக்கும்படி ஹோமம் பண்ணத் தொடங்கினான். பார்ப்பான் காசை அதிகமாகக் கேட்டான். பாதியிலே செட்டியார் ஹோமத்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பானை வீட்டுக்குப் போகும்படி சொல்லி விட்டார். பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு வருஷ காலமிருந்து பகவத்கீதை பிரசங்கம் செய்யும்படி சாஸ்திரியை அந்த வீட்டு பிரபு வேண்டிக்கொண்டார். மேற்படி பிரபுவுக்கும் அந்தச் செட்டியாருக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம். செட்டியார் தனக்கு முப்பதினாயிரம் பொன் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பிரபு நியாயஸ்தலத்தில் வழக்குப் போட்டிருந்தார். செட்டியார் அந்தப் பணத்தைத்தான் கொடுத்துவிட்டதாகவும், நம்பிக்கையினால் கையெழுத்து வாங்கத் தவறினதாகவும், வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் சொன்னார். நியாயஸ்தலத்தில் செட்டியார் வாதத்திற்குத் தக்க ஆதாரமில்லை என்றும், பிரபுவுக்குப் பணம் சிலவுட்பட கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயிற்று. 6  தோஷம் tosham (p. 2120)  Sin, offence, transgression, heinous crime, guilt.  சாந்தி =    Alleviation, pacification; தணிவு. 3. Propitiatory rites for averting the evil influences of planets

  6. Pillaiyar: "How."

Narada: I appeared in Chettyar's dream and told him to go to Sastry in Tanjore at a particular address. I mentioned Sastry would exculpate the sins and guarantee the birth of a son. If he went to the Chettyar, he would gain fame, name, and money. Sastry showed up in the house of the Chettyar and began to conduct fire sacrifice to guarantee the birth of a son. Halfway through the sacrifice, the Sastry demanded more money. Chettyar stopped the Homam and asked the Brahmana to leave and go home. The Brahmana stayed in a wealthy man's house for a year. The Prabhu asked Sastry to talk on Bhagavadgita. The Prabhu and the Chettyar had some problems between them from the past. Prabhu went to court demanding repayment of 30,000 gold coins from Chettyar, who claimed he returned the god coins beforehand but failed to take a receipt. The court found no credible document to support his claim and therefore ordered Chettyar to pay Prabhu his loan plus the cost of litigation.

7)    செட்டியாரிடமிருந்த (கழனித் தொழில்) அடிமையொருவன் கள்ளுக்குக் காசு வாங்குவதற்காக இவரிடம் வந்து, செட்டியாருக்கு யாரோ ஒரு அய்யர் சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்தபோது, தன்னுடைய பெண்டாட்டி சொன்னதாகச் சொல்லிவிட்டான். செட்டியார், தன்னுடைய எதிரி வீட்டிலே போய் இருந்து தஞ்சாவூர்ப் பார்ப்பானே சூனியம் வைக்கிறானென்னும், அதனாலே தான் எதிரிக்கு வழக்கு ஜயமாகித் தனக்குத் தோற்றுப் போய் விட்டதென்றும் உறுதியாக நினைத்துக் கொண்டார். ஒரு மனுஷ்யனை அனுப்பித் தன் எதிரியின் வீட்டிலே எதிரியும் சாஸ்திரியும் என்ன பேசிக் கொள்ளுகிறார்களென்பதைத் தெரிந்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்தார். அந்த ஆளுக்கு மூன்று பொன் கொடுத்தார். இந்த வேவுகாரன் போய்க் கேட்கையிலே அ  7. The farmworker working for Chettyar needed money to buy country liquor. He went to Chettyar and told him that his wife, seized by goddess Mariamman, said that a Brahmana was causing injury to him (Chettyar) by witchcraft. Chettyar believed strongly that the Vizhupuram Sastry stayed in his opponent's house and performed witchcraft to make him lose the case in court. Chettyar employed a man for a fee of three gold coins to listen in on the conversation between the Sastry and his opponent. The spy heard a discussion on Vedanta between his opponent and Sastry.  
8)    பிரமந்தான் சத்யம்
மற்ற தெல்லாம் சூன்யம்
என்று சாஸ்திரி சொன்னான். இதைக் கேட்டு வேவுகாரன் செட்டியாரிடம் வந்து எதிரி பக்கத்துக்குச் சூனியம் வைக்க வேண்டுமென்று பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கதை சொன்னான். செட்டியார் "பிரமாணம் பண்ணுவாயா?" என்று கேட்டார். "நிச்சயமாகப் பிரமாணம் பண்ணுவேன். சாஸ்திரி வாயினால் சூனியம் என்று சொன்னதை என்னுடைய காதினால் கேட்டேன். நான் சொல்வது பொய்யானால் என் பெண்டாட்டி வாங்கியிருக்கும் கடன்களையெல்லாம் மோட்டுத் தெருப் பிள்ளையார் கொடுக்கக் கடவது" என்று வேவுக்காரன் சொன்னான். இப்படி நாரதர் சொல்லி வருகையிலே, பிள்ளையார் புன்சிரிப்புடன், "அடா! துஷ்டப் பயலே! அவன் பெண்டாட்டியினுடைய கடன்களையெல்லாம் நானா தீர்க்க வேண்டும்! இருக்கட்டும்! அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

  8. Sastry said,

"Brahman is Satyam (Truth)

All else is Sūnyam (nothing)." 

Hearing the word Sūnyam (double meaning: 1. Nothing. 2. Witchcraft), the spy reported it to Chettyar. The latter asked him, "Can you guarantee the veracity of your statement? The worker said, "I heard with my ear the word 'Sūnyam' coming from the mouth of Sastry. If I told a lie, let the Mottu Street Pillaiyar pay my wife's loan." As Narada was narrating the story, Pillaiyar said with a smile, "Adā, evil character! Should I pay his wife's debts? Let it be so. I will make arrangements for him.  

9) அப்பால் நாரதர் சொல்கிறார்: மேற்படி வேவுகாரன் வார்த்தையைக் கொண்டு செட்டியார் தன் எதிரியையும் எதிரிக்குத் துணையான தஞ்சாவூர் சாஸ்திரியையும் பெரிய நஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் இடமாக்கி விடவேண்டுமென்று துணிவு செய்து கொண்டார். ஒரு கள்ளனைக் கூப்பிட்டுத் தன் எதிரி வீட்டில் போய்க் கொள்ளையிடும்படிக்கும் சாஸ்திரியின் குடுமியை நறுக்கிக் கொண்டு வரும்படிக்கும் சொல்லிக் கைக்கூலியாக நூறு பொன் கொடுத்தார். இதுவரை செட்டியாரின் அழுக்குத் துணியையும், முக வளைவையும் கண்டு செட்டியார் ஏழையென்று நினைத்திருந்த கள்ளன், செட்டியார் நூறு பொன்னைக் கொடுத்ததிலிருந்து இவரிடத்திலே பொற்குவை யிருக்கிறதென்று தெரிந்து கொண்டான். மறுநாள் இரவிலே நான்கு திருடரை அனுப்பிச் செட்டியார் வீட்டிலிருந்த பொன்னையெல்லாம் கொள்ளை கொண்டு போய்விட்டான்.  9. Narada proceeds further. "Trusting the spy's words, Chettyar decided to subject his opponent and the Tanjore Sastry to loss and disgrace. He sought the help of a thief to rob his opponent's home and cut the tuft of Sastry with a payment of 100 gold coins. The thief thought Chettyar was poof from his dirty clothes and sordid looks, but when he received 100 gold coins, he knew he was rich with a mound of gold. The next night, he sent four thieves and robbed Chettyar of all his hoard of gold.  
10) செட்டியாரிடம் கொண்ட பொருளுக்குக் கைம்மாறாக அவரிடம் ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று நினைத்துச் செட்டியாரின் கட்டளைப்படியே சாஸ்திரியின் குடுமியை நறுக்கிச் செட்டியாரிடம் கொண்டு கொடுத்தான். பொன் களவு போன பெட்டியிலே இந்தக் குடுமியை வாங்கிச் செட்டியார் பூட்டி வைத்துக் கொண்டார். பார்ப்பான் கர்வ மடங்கித் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர்ந்தான். நேற்று மாலையிலே தான் தஞ்சாவூரில் தன் வீட்டிலே போய் உட்கார்ந்து, "தெய்வமே, நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே! அப்படி யிருந்தும் எனக்கு இந்த அவமானம் வரலாமா?" என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அப்போது நான் ஒரு பிச்சைக்காரன் வேஷத்துடன் வீதியிலே பின்வரும் பாட்டைப் பாடிக் கொண்டு போனேன்
"கடலைப் போலே கற்றோ மென்றே
கருவங் கொண்டாயே
கல்லா ரென்றே நல்லார் தம்மைக்
கடுமை செய்தாயே"

 10. The thief, to reciprocate for the gold coins, cut the Sastry's tuft and gave it to Chettyar, who locked away the tuft in his lockbox. The humiliated Brahmana went back to Tanjore to save his reputation. In his home at Tanjore, Sastry cried, thinking, "O God! I never wished any evil to anyone, though disgrace came upon me." He donned the clothes of a beggar and walked the streets with the following poem.

"Like the ocean, is my learning

That arrogance, I had

Because they were unlettered, though virtuous

You dealt them hardship."  

11) இவ்வாறு நாரதர் சொல்லியபோது நந்திகேசுரர், "இந்தக் கதை நடந்ததா? கற்பனையா?" என்று கேட்டார். நாரதர், "கற்பனைதான்; சந்தேகமென்ன?" என்றார். பிள்ளையார் கோபத்துடன், "ஏன் காணும்! நிஜம்போல் சொல்லிக் கொண்டிருந்தீரே! உண்மையென்றல்லவோ நான் இதுவரை செவி கொடுத்துக் கேட்டேன். இதெல்லாம் என்ன, குறும்பா உமக்கு?" என்றார்.

"
குறும்பில்லை. வேண்டுமென்றுதான் பொய்க் கதை சொன்னேன்" என்று நாரதர் சொன்னார்.

"
ஏன்?" என்றார் பிள்ளையார்.

அதற்கு நாரதர், "நந்திகேசுரருக்குப் பொழுது போக்கும் பொருட்டாகக் கதை சொல்லச் சொன்னார்; சொன்னேன். தாங்கள் கேட்டதையும் அதோடு சேர்த்துக் கொண்டேன்" என்றார்.

"
நான் கேட்ட¨ விளையாட்டாக்கி நீர் நந்திக்குத் திருப்தி பண்ணினீரா? என்ன நந்தி இது? எஜமான் பிள்ளை நானா நீயா?" என்று பிள்ளையார் கோபித்தார்.

11. After Narada narrated the story, Nandikeshsurar asked, "Is this story real or imaginary?" Narada: ''Imaginary. Where is the doubt?" Pillaiyar, in a fit of anger, said, "You were telling the story as if it was happening before us. I lent my ears, thinking it was all true. Is this a mere mischief on your part?"

Narada: "No mischief. On purpose, I narrated a false story."

Pillaiyar: "Why?"

Narada: Nandikeshsurar asked me to tell a story to pass the time. So, I narrated a false story. I added what you mentioned."

Pillaiyar: "You made whatever I said a part of your story and satisfied Nandi. What Nandi is this?. Who is the son of the Master, 'You or me?'"

12) அப்போது நந்திகேசுரர் முகத்தைச் சுளித்துக் கொண்டு, "பிள்ளையாரே, உமக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாபகமிருப்பதில்லை. வாயில் காக்கும் வேலை எனக்கு; உமக்குப் பொழுது போகாமல் போனால் வேலை செய்பவரை வந்து தொல்லைப்படுத்துகிறீரா? முருகக் கடவுள் இப்படியெல்லாம் செய்வது கிடையாது. அவர் மேலே தான் அம்மைக்குப் பட்சம். நீர் இங்கிருந்து போம். இல்லாவிட்டால் அம்மையிடம் போய்ச் சொல்லுவேன்" என்றார்.

அப்போது நாரதர் சிரித்து, "தேவர்களுக்குள்ளே கலகமுண்டாக்கும் தொழிலை நான் முழுதும் நிறுத்தி விடவில்லை" என்றார்.

பிள்ளையாரும், நந்திகேசுரரும் வெட்கமடை

12. Nandi, with a twisted face, said, "Pillaiyare! You forget however many Kozhukkattais I gave you. I guard the entrance. When you have nothing else to do, you bother the working people. God Muruga never makes mischief. That is why Ammai favors Murugan. You leave us. If not, I will tell Ammai."

Narada laughed and said, "I never stopped completely instigating rancor among the gods."

Pillaiyar and Nandikeshsurar felt ashamed and playfully knuckled the head of Narada twice.  

13) அப்போது நாரதர் சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்: "நேற்றுக் காலையிலே பிருஹஸ்பதியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்; இன்று என்னுடைய ஜன்ம நட்சத்திரத்திற்குள்ளே அவருடைய கிரகம் நுழையப் போகிறதென்றும், அதனால் இன்று என்னுடைய தலையில் நந்திகேசுரரும், பிள்ளையாரும் குட்டுவார்களென்றும் சோதிடத்திலே பார்த்துச் சொன்னார். உம்முடைய கிரகசாரங்களெல்லாம் நம்மிடத்திலே நடக்காதென்று சொன்னேன். பந்தயம் போட்டோம். நீங்கள் இருவரும் என்னைக் குட்டினால் நான் அவரிடத்தில் பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டேன். நீங்கள் குட்டாவிட்டால் நமக்கு தேவலோகத்தில் ஆறு சங்கீதக் கச்சேரி இந்த மாதத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர் கட்சி வென்றது. பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்க வேண்டும்."

அப்போது பிள்ளையார் இரக்கத்துடன் "பதினாயிரம் பஞ்சாங்கத்துக்கு விலையென்ன?" என்று கேட்டார்.

நாரதர், "இருபதினாயிரம் பொன்னாகும்" என்றார். பிள்ளையார் உடனே ஒரு பூதத்தைக் கொண்டு நாரதரிடம் இருபதினாயிரம் பொன் கொடுத்துவிடச் சொன்னார். பூதம் அப்படியே அரண்மனைப் பணப் பெட்டியிலிருந்து இருபதினாயிரம் பொன் நாரதரிடம் கொடுத்து பிள்ளையார் தர்மச் செலவு என்று கணக்கெழுதிவிட்டது. பிறகு பிள்ளையார் நாரதரை நோக்கி, "இந்தப் பந்தயக் கதை மெய்யா? அல்லது இதுவும், பொய்தானா?" என்று கேட்டார்.

"
பொய்தான்; சந்தேகமென்ன?" என்று சொல்லிப் பணத்தைக் கீழே போட்டுவிட்டு நாரதர் ஓடியே போய்விட்டார்.

 13. Then, Narada laughed and said, "Yesterday, I was talking with Brihaspati. He said, 'His planet will be entering into my Janma Nakshatra with the result Nandikeshsurar and Pillaiyar will knuckle me on the head, according to his astrological forecast.'" I told him, "Your predictions of planetary movements will not work for me. We bet. If you have not knuckled me on the head, the bet was Brihaspati will arrange in Devaloka six musical extravaganza for me. His side won. I need to buy 10,000 Panchāngas." Panchanga = Almanac

Pillaiyar compassionately asked Narada, "What is the cost of 10,000 Panchanga?"

Narada: ''20,000 gold coins.'' Pillaiyar called a Bhūta and asked to give 10,000 gold coins. The Bhūta took the gold from the palace treasury, handed it over to Narada, and wrote it as charity. Pillaiyar looked at Narada, "This betting story: is it real or is this also false?"

Narada: ''False. Why doubt it?" Narada dropped the gold bag and ran away from there.