EscapeFromFieryWaxPalace A Story From Mahabharata |
|
The machine translation that came with the publication was edited for clarity. Additional information was inserted to explain some terms. | |
![]() 6734. Published: • உண்மையில், அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்கள் உயிர் தப்பியது எப்படி? மகாபாரதம் சொல்லும் ரகசியம்! பி.என்.பரசுராமன் 3 Min Read யமதருமனுக்கு மட்டும் இந்தச் சாபம் கிடைக்காமல் இருந்திருந்தால் விதுரரின் அவதாரமே நிகழ்ந்திருக்காது. தர்மதேவதையான யமதருமனைச் சபித்தவர் ஆணிமாண்டவ்யர் எனும் முனிவர். அவர் சாபம் கொடுக்கக் காரணம் என்ன? விளக்குகிறது இந்தக் கதை! Published:03 Feb 2025 2 PMUpdated:03 Feb 2025 2 PM ![]() திருதராஷ்டிரர் காந்தாரியுடன் விதுரர்! ( ஓவியம்: கோபுலு ) Join Our Channel 0Comments Share உண்மையில், அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்கள் உயிர் தப்பியது எப்படி? மகாபாரதம் சொல்லும் ரகசியம்! விதுரர்! மகாபாரதம் போற்றும் உத்தமர். விதுராழ்வார் எனப்போற்றித் துதிக்கப்பட்டவர். விதுர நீதி, சனத் சுஜாதீயம் எனும் ஞானநூல்கள் உருவாகக் காரணமானவர். விதுரர் யவன மொழி பேசுவதிலும் வல்லவர் எனும் தகவல் உண்டு.இவரின் பூர்வஜன்மம் குறித்து வியக்க வைக்கும் தகவல்களைச் சொல்கிறது மகாபாரதம்! சத்தியத்திலும் தவத்திலும் உயர்ந்தவர் மாண்டவ்ய முனிவர். அவர், தனது ஆசிரமத்தின் வாசலில் மரத்தடியில் இரு கைகளையும் உயரே தூக்கிக்கொண்டு, மௌனமாக இருந்தபடி கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது கள்வர்கள் சிலர், அரண்மனையில் திருடிய பொருள் களோடு ஓடிவந்து, மாண்டவ்யரின் ஆசிரமத்தில் ஔிந்து கொண்டார்கள். துரத்தி வந்த காவலர்கள், திருடர்களுடன் சேர்த்து ஆசிரம வாசலில் தவத்திலிருந்த முனிவரையும் சேர்த்துக் கட்டி இழுத்துப்போய், மன்னரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் அனைவரையும் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார் மன்னர். தண்டனை நிறைவேற்றப்பட்டது. கழுவில் ஏற்றப்பட்ட திருடர்கள் அனைவரும் இறந்தார்கள். மாண்டவ்யர் மட்டும் இறக்க வில்லை. உண்ணாமல் இருந்தும் அவருக்கு எந்தப் பாதிப்பும் உண்டாகவில்லை. பல நாள்கள் கடந்தும் கழு மரத்தில் உயிருடன் இருந்த அவரைத் தேடி, இரவு நேரத்தில் ஆகாய வீதியில் ரிஷிகள் வந்தார்கள். முனிவரை வணங்கி, ``மாண்டவ்ய முனிவரே! உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை? இந்த அளவு தண்டனை கிடைக்க, நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்?”- எனக் கேட்டார்கள். “இத்தகைய கொடுந்துயரை அனுபவிக்கும் அளவுக்குப் பெரும் பாவங்கள் எதையும் நான் செய்யவில்லை’’ என்றார் மாண்டவ் யர். வந்த முனிவர்கள் அங்கிருந்து அகன்றார்கள். அதன் பிறகு உண்மை உணர்ந்த அரசர், மாண்டவ்யரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். கழுமரத்து ஆணியின் சிறு பகுதி கழுத்திலேயே தங்கிவிட்டதால், ஆணி மாண்டவ்யர் என்ற பெயருடன் அங்கிருந்து புறப்பட்டார் முனிவர். யமதருமனைச் சந்தித்து, ``நான் அடைந்த துயரத்துக்கான காரணம் என்ன?’’ எனக் கேட்டார். யமன் பதில் சொன்னார்... “முனிவரே!நீங்கள் குழந்தையாக இருந்தபோது செய்த பாவத்தின் விளைவே இது. பறவைகளின் வால் பகுதியில் கூர்மையான இரும்பைக் குத்தினீர்கள் நீங்கள். தானமானது குறைவாகக் கொடுக்கப் பட்டாலும், அது பல மடங்காகப் பெருகிப் பலனை அளிப்பதைப்போல, பாவமும் பல மடங் காகப் பெருகித் துக்கத்தைக் கொடுக்கும்” என்றார். அதைக்கேட்ட ஆணி மாண்டவ்யர், ``யமனே!பிறந்தது முதல் பன்னிரண்டு வருடங்கள் வரையில், ஒருவன் எதைச் செய்தாலும் பாவம் வராது. அந்த வயதில் நல்லது-கெட்டது தெரியாது. சிறிய குற்றத்திற்குப் பெரிய தண்டனை கொடுத்து விட்டாய் எனக்கு நீ! எந்தப் பிராணிகளையும் இம்சை செய்வதைவிடவும், சாதுக்களான முனிவர்களை வதம் செய்வது மிகப்பெரியது. யமனே! இதன் காரணமாக நீ போய்ப் பூமியில் பிறப்பாய்’’ என்று சபித்தார். அத்துடன் ``இன்று முதல், உலகத்தில் வினைப்பயன் ஏற்பட, புதிய வரம்பை உண்டாக்குகிறேன். பதினான்கு வயது வரை, ஒரு மனிதனுக்குப் பாவம் சேராது. அதற்குமேல் பாவம் செய்பவர்களுக்கு மட்டுமே குற்றம் உண்டாகும்” என புதிய விதி முறையையும் உண்டாக்கினார். இங்ஙனம் ஆணி மாண்டவ்யரின் சாபம் பெற்ற அந்தத் தர்ம தேவதை - யமன்தான் விதுரராக வந்து பிறந்தார். குருகுலப் பரம்பரையில் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோருடன் ஒருவராகப் பிறந்த விதுரர், திருதராஷ்டிரனுக்கும் துரியோதனக் கும்பலுக்கும் நீதிநெறிகளைச் சொன்னார். ஆனால் விதுரர் சொன்ன எதையும் திருதராஷ்டிரனும் அவரைச் சார்ந்தவர்களும் ஏற்கவில்லை; பாண்டவர்களை அழிப்பதி லேயே ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். அவர்கள் செய்த அத்தனை தீமைகளில் இருந்தும் பாண்டவர்களைக் காப்பாற்றினார் விதுரர். ஒருமுறை, பாண்டவர்களையும் குந்தியையும் காசியில்-அரக்கு மாளிகையில் வைத்து எரித்துவிட வேண்டும் எனத் துரியோதனன், சகுனி முதலானவர்கள் தீர்மானித்தார்கள். அது தெரியாத பாண்டவர்களும் குந்தியும் அத்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். அப்போது விதுரர், பாண்டவர்களுக்கு அறிவுரை சொல்வதுபோல் சூட்சும ரகசியத்தை எடுத்துரைத் தார். ``தர்மா!உலோகத்தால் செய்யப்படாதது, உடம்பை அழிக்கக்கூடிய கூர்மையான ஆயுதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அதிலிருந்து தப்பவேண்டும். காடுகளை எரிப்பதும் குளிரைப் போக்குவது மான ஒன்று, பெருங்காட்டில் வளைக்குள் வாழும் எலி முதலியவற்றை எரிக்காது என்பதைத் தெரிந்துகொள். நடந்து செல்பவன் நட்சத்திரங்களால் திசைகளைத் தெரிந்து கொள்கிறான். நான் சொல்வ தைப் புரிந்து கொள் நீ!” தர்மருக்கு அறிவுரை சொன்னார். விதுரர் சொன்னவை எவ்வளவு சூட்சுமமான வார்த்தைகள்! சபையில் அப்போது திருதராஷ்டிரன் முதலானவர்கள் இருந்த தால், சூட்சுமமான வார்த்தைகளைச் சொல்லிப்புரிய வைத்தார். விதுரர். அதாவது, “தர்மா! உங்கள் அனை வரையும் அரக்கு மாளிகையில் வைத்து (தீயால் எரிப்பதன் மூலம்) கொல்லத் திட்ட மிட்டு இருக்கிறார்கள். அவர்கள் தீர்மானித்த நேரத்திற்கு முன், நீயாகவே அரக்கு மாளிகையைக் கொளுத்திவிட்டு, (நான் ஏற்பாடு செய்திருக்கும்) சுரங்கத்தின் மூலம் தப்பிவிடுங்கள். இரவான அந்த நேரத்தில், நட்சத்திரங்களின் மூலம் வழி தெரிந்து கொண்டு தப்பிச் செல்லுங்கள்!” என்பதையே அவ்வாறு சூட்சுமமான வார்த்தைகளால் புரியவைத்தார் விதுரர். (விதுரர் இதை யவன மொழியில் சொன்னார். விதுரர் யவன மொழியில் வல்லவர் - எனச் சிறப்புப் பெயர் அகராதி விவரிக்கிறது.) விதுரர் சொன்னபடியே பாண்டவர்களும் குந்தியும் அரக்கு மாளிகைத் தீயிலிருந்து தப்பிப் பிழைத்தார்கள். விதுரரின் மேன்மையை விவரிக்கும் இன்னொரு சம்பவமும் உண்டு! குருக்ஷேத்திர போர் மூளும் சூழல். பாண்டவர்களுக்காக தூது வந்தார் கண்ணன். அவர் அஸ்தினாபுர வீதிகளில் வரும்போது, அங்கே காணப்பட்ட பெரும்பெரும் மாளிகைகளை எல்லாம் சுட்டிக் காட்டி, “இது யாருடையது? இது யாருடையது?” எனக் கேட்டார். அவரவரும், “இது அடியேனின் குடிசை! இது அடியேன் இல்லம்...” என்றெல்லாம் சொன்னார்கள். அவற்றையெல்லாம் கேட்ட கண்ணன் புன்முறுவல் பூத்தபடிப் போகும்போது, எதிரில் இருந்த ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி, “இது யாருடையது?” எனக் கேட்டார். “கண்ணா! இந்த மாளிகை பகவானான உன்னுடையது” என்றார் விதுரர். அவ்வளவுதான்! ரதத்தை நிறுத்தச்சொன்ன கண்ணன் அதிலிருந்து இறங்கி, விதுரர் சொன்ன மாளிகையில் புகுந்தார். அங்கேயே தங்கினார். விதுரருக்கு இருப்பு கொள்ளவில்லை; தன்னிலை மறந்தார்; அகன்ற கைகளால் அமிர்தத்தை அருந்தியதைப் போல, கண் களால் கண்ணனை அப்படியே உள்வாங்கிக் கொண்டார்; தியானித்தார்; உள்ளம் உருகினார்; ஆனந்தத்தில் எழுந்து துள்ளினார்; கண்ணன் திருவடிகளில் விழுந்து,அவற்றைத் தலையில் சூடிக்கொண்டார்; துயரங்களை எல்லாம் தள்ளினார். இதுபற்றி வில்லி பாரதம் அற்புதமாக விவரிக்கிறது! இவ்வாறு தன்னிலை மறந்த நிலையிலிருந்த விதுரர், கண்ணனைத் துதிக்கத் தொடங் கினார். “கண்ணா! இந்த வீடு என்ன, நீ முன்னமே துயில் புரிந்த பாற்கடலா? ஆதிசேஷன் எனும் படுக்கையா? நான்கு வேதங்களா? நீயாகவே நினைத்து எழுந்தருள்வதற்கு, இந்தச் சிறுகுடில் என்ன மாதவம் செய்ததோ?”என உள்ளம் உருகித் துதித்தார். அங்கே கண்ணனுக்கு உண்பதற்கு என்ன கொடுக்கப்பட்டது தெரியுமா? உங்களுக் கென்று உண்பதற்குத் தயார் செய்ததையே எனக்கும் கொடுங்கள் என்று கண்ணனே கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நுக்க நொய்க்கஞ்சி வழங்கினார் விதுரர். நம் பகுதிகளில் நொய்யரிசிக் கஞ்சி என்பார்களே, அதுதான்! கஞ்சி வாழை இலையில் வழிந்தோடியது. அது கீழே சிந்தாத படி ஒரு கையால் வழிந்தோடும் புறத்தில் இலையைத் தாங்கிப் பிடித் தார் கண்ணன். கஞ்சி வேறொருபுறம் வழிய முற்பட்டது. அடுத்த கையால் அந்தப் புறத்திலும் இலையை ஏந்திப் பிடித்தார் கண்ணன். இப்படியே அவர் நான்கு திருக்கரங்களாலும் வாழை இலையைப் பிடித்துக் கொண்டு தலைகுனிந்து கஞ்சியைப் பருகினாராம். ``கம்சன், சிசுபாலன் முதலானோரை அடக்கும்போதும் கூட பணியாத என் சிரம், அன்பு மிகுதியால் நீ அளித்த கஞ்சியை அடக்கும் பொருட்டு பணிந்தது’’ என்று கண்ணன் கூறுவதாக சுவாரஸ்யத்துடன் விவரிக்கின்றன ஞானநூல்கள். ஆம்! கண்ணனே உவந்து போற்றிய மாமனிதர் விதுரர். அவரின் முடிவு எப்படி இருந்தது தெரியுமா? - அடுத்த இதழில் அறிவோம்... இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. |
![]() How did the Pandavas escape from the palace of Araku (wax)? The secret of Mahabharata! P.n.parasuraman 3 Min Read If Yamadharuman (The god of death) had not received this curse, the incarnation of Vidura would not have happened. Sage Āni (Nail)_ Mandavya cursed Yamadharuman, the Dharmadevata (God of virtue). What was the reason for his curse? This story explains! Published:03 Feb 2025 2 PMUpdated:03 Feb 2025 2 PM ![]() Dhṛtarāṣṭra with Gandhāri and Vidhura (Photo: Gopulu) Join Our Channel 0Comments Share How did the Pandavas escape from the palace of Araku (wax)? The secret that Mahabharata tells. Vidura, a man of virtue, praised Mahabharata. Praised as Viduralvār, he was responsible for the creation of Vidura Nīti (Nīti = Equity, justice) and Sanat Sujatiyam. It is said that Vidura was an expert in speaking Yavana language. Sanatsujatiya ( Wikiwand) A Portion of the text of Udyoga Parva (fifth book) of Hindu epic, Mahābhārata From Wikipedia, the free encyclopedia Discussion (3) The Sānatsujātiya refers to a portion of the Mahābhārata, a Hindu epic. It appears in the Udyoga Parva (book), and is composed of five chapters (Adhyāya 41–46). One reason for the Sānatsujātiya's importance is that it was commented upon by Adi Shankara, the preeminent expositor of Advaita Vedanta, and one of the most important Hindu sages, philosophers, and mystics. Buitenen wrote that "The Sānatsujātiya had a minor reputation as a philosophical classic.... The text certainly deserves more study than it has received" (p. 182). He also wrote. The Sānatsujātiya should probably be best approached as a brief, late-upaniṣadic text that very early attracted to itself, by way of appendix, commentary, and continuation, other texts that were considered to be of the same inspiration.... Its core seems to be the triṣṭubh verses of the beginning, in which the problem of death is addressed. This is followed, in ślokas, by reflections on brahman and wisdom, on the twelve vices and twelve virtues, and on brahmacarya. It ends with a mystical hymn on the manifestations of the Supreme... with the refrain: "The yogins behold the sempiternal (eternal) blessed Lord." (p. brahman =Impersonal Supreme Being brahmacarya = the stage of life of the student, entailing study of the Vedas and complete celibacy, usually lasting for twelve years. Sage Mandavya was superior in truth and penance. He was sitting under a tree at the entrance of his hermitage, silently performing austerities, with both hands uplifted. Then some thieves came running with the loot they had stolen from the palace and took refuge in the hermitage of Mandavya. The chasing guards dragged the sage who was performing penance at the entrance of the hermitage along with the thieves and handed them over to the king. The king ordered them all to be impaled. The sentence was carried out. All the thieves who were impaled died. Mandavya was the only one who did not die. He was not harmed by the fact that he had not eaten (while on the stake). Rishis came in the sky at night in search of him who was still alive in the Impaling stake (கழுமரம்) after many days. He bowed to the sage and said, "O sage Mandavya! Why are you in such a position? What sin have you committed to deserve this kind of punishment?" - They asked. "I have committed no great sins worthy of suffering such a great misery," said Mandavyar. The sages went away from there. The king then realized the truth, released Mandavya and apologized to him. As a small part of the nail remained in his neck, the sage left the place with the name Āni Mandavya. He met Yamadharuman (god of death) and asked, "What is the cause of my sorrow?" Āni = Nail. Yama replied... "O sage, this is the result of the sin you committed when you were a child. You pierced a sharp iron in the tail of a bird. Even if charity is given slightly, it multiplies manifold and yields fruit, similarly sin will multiply and cause sorrow." Hearing this, Āni Mandavya said, 'O Yama, from birth to twelve years, whatever one does, no sin will come. At that age, you don't know good or bad. You have punished me for a small crime! The slaying of sages who are sadhus is far greater in import than the torture of any creature. O Yama! Because of this you will go and be born on earth." "From today, I am creating a new limit for the benefit of the world. Up to the age of fourteen, a man does not incur sin. Beyond that, only those who commit sins will be guilty." Thus the Dharmadevata (god of death)_ Yama, who was cursed by Mandavya, was born as Vidura. Vidura, born of the Kuru race along with Dhritarashtra and Pandu, preached righteousness to Dhritarashtra and the gang of Duryodhana. But Dhritarashtra and his followers did not accept anything that Vidura said; They were interested in destroying the Pandavas. Vidura saved the Pandavas from all the evils they had committed. Once, Duryodhana, Shakuni and others decided to burn the Pandavas and Kunti in the palace of Araku (Wax) in Kasi. Unaware of this, the Pandavas and Kunti left Attinapur (Hastinapur). Then Vidura explained the subtle secret, as if advising the Pandavas. "Dharma, you must know a sharp weapon that is not made of metal, but can destroy the body; You have to escape from it. Remember that burning forests and relieving the cold does not burn the rats that live in the burrows of the great forest. The walker knows the directions by the stars. Understand what I am saying!" he advised Dharma (One of the Pandavas). What subtle words Vidura said! Since Dhritarashtra and others were present in the assembly at that time, he made them understand the subtle words. Vidura. That is, "Dharma! They are planning to kill all of you in the palace of lacquer (by burning them with fire). Before the time they have decided, burn the palace of lacquer yourselves and escape through the tunnel (which I have arranged). At that hour of night, find your way through the stars and escape!" (Vidura said this in the Yavana language; the Dictionary of Epithets describes Vidura as an expert in Yavana.) Yavana language = Language of a country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam (country). As told by Vidura, the Pandavas and Kunti escaped from the fire of the palace of Araku. There is another incident which describes the greatness of Vidura. The Battle of Kurukshetra. Krishna came as a messenger for the Pandavas. When he came through the streets of Hastinapur, he pointed to all the huge mansions there and said, "Whose is this? Whose is this?" he asked. Each one said, "This is my servant's hut! This is my home..." They said all that. Hearing all this, Kannan smiled and as he was leaving, he pointed to a palace opposite and asked, "Whose is this?" "Kannā! This palace is yours, the Lord.' That's all! Krishna asked the charioteer to stop the chariot and got down from it and entered the palace told by Vidura. He stayed there. Vidura had no existence; He forgot himself; He absorbed Krishna with his eyes, just as he drank nectar with his outstretched hands; He meditated; He jumped for joy; Vidura fell at the feet of the Lord and put them on his head; He pushed away all the misery. Willy Bharatham describes this wonderfully! Thus lost in his senses, Vidura began to praise Krishna. "Kanna! What is this house, the ocean of milk you slept in, before? On the bed of Adisesha? The four Vedas? What did Madhavam do in this small hut to wake up on your own?" He prayed with heart. Do you know what Krishna was given to eat there? Give me the same food that you have prepared for you, said Krishna at Vidura’s request. That's what we call rice porridge in our parts! The porridge flowed onto a banana leaf. With one hand Kannan held the leaf on the side where it flowed so that it would not spill down. The porridge drifted to the other side. With his other hand, Kannan held the leaf on that side as well. In this way he held the banana leaf with all the four hands and drank the porridge with his head bowed. "My head, which did not bow down even when subduing Kamsa, Sisupala and others, bowed down in order to stop the porridge offered by you out of love, to flow off the leaf" says Krishna. Well yes! Vidura was a great man whom Krishna himself admired. Do you know what his decision was? - We'll find out in the next issue... The opinions of those who leave comments are their personal opinion and Vikatan is not responsible for this. |