GP02GarudaVinataTheSlave
Sakthi Vikatan This was a machine translation, edited for claity.

0.கருட புராணம்: வெள்ளைக் குதிரையும் கறுப்பு நாகங்களும்-கருடனின் தாய் அடிமையான கதை!

இல.சைலபதி

4 Min Read

தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க

வினதா, தன் முட்டைகளில் ஒன்றை உடைத்துப் பார்த்தாள். அதில் ஒரு குழந்தை இருந்தது. ஆனால் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. அந்தக் குழந்தை பிறந்தவுடன் கோபம் கொண்டு தன் தாயான வினதாவுக்குச் சாபம் கொடுத்தது.

Published:28 Oct 2024 3 PMUpdated:28 Oct 2024 3 PM

Garuda Puranam: White horse and black snakes. The story of Vinata Garuda's mother becoming a slave.
Ila. Sailapathy
Read other sections.
Vinata, the snake mother broke one of her eggs. There was a premature child. The newborn child became angry at his mother and laid a curse on her.
Published:28 Oct 2024 3 PMUpdated:28 Oct 2024 3 PM

1.   இந்த உலகில் மரணத்தை வெல்ல முடியாது. மரணமே நிகழக்கூடாது என்று வரம் கேட்ட பலரும் அது கிடைக்காமல் தவித்த பல கதைகளை நாம் புராணங்களில் கண்டிருக்கிறோம். உபன்யாசகர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.

1. Death cannot be conquered in this world. The Puranas contain many stories of individuals who sought immortality but failed to attain it. A lecturer once narrated a story to me.

2. குப்புசாமி என்பவர் கடவுளை நோக்கித் தவம் செய்தார். கடவுள் அவர் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்குக் காட்சி கொடுத்து, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.

2. A man named Kuppusamy performed penance to please the Lord. Pleased with his devotion, the Lord appeared before him and asked, "What boon do you desire?"

3. குப்புசாமி, ‘எனக்கு சாவே வரக்கூடாது என்று சொன்னார். கடவுளும், ‘சரி’ என்று சொல்லிவிட்டார்.

மறுநாள் காலை குப்புசாமி சாலையில் நடந்து செல்கிறபோது ஒருவர் அவரை நோக்கி, ‘ஐயா உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டார் அதற்கு குப்புசாமி, ‘என் பெயர் குப்புமி’ என்றார்.

கேள்வி கேட்ட நபர், ‘என்னது குப்புமி என்று ஒரு பெயரா?’ என ஆச்சர்யமாகக் கடந்துபோனார்.

குப்புசாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தார். அவரால், ‘குப்புமி... குப்புமி...’ என்றுதான் சொல்ல முடிந்தது. கோபம் வந்தது. மீண்டும் தவம் செய்து கடவுளை அழைத்தார்.

கடவுளே என் பெயரை ஏன் என்னால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை?’ என்று கேட்டார்.

அதற்கு கடவுள், ‘நீதானே உனக்கு ‘சா’வே வரக்கூடாது’ என்று சொன்னாய். அதுதான் வரவில்லை’ என்று சொன்னார்.

3. Kuppusamy replied, "I do not want to die." The Lord granted his wish, saying, "So be it."

The next morning, as Kuppusamy was walking down the road, a man approached him and asked, "Sir, what is your name?" Kuppusamy responded, "My name is Kuppumi."

The stranger was taken aback. "Is there really a name called Kuppumi?" he wondered.

Kuppusamy was equally shocked. He tried to say his name again, but all that came out was, "Kuppumi… Kuppumi…" No matter how hard he tried, he couldn't say it correctly. Frustrated and bewildered, he performed penance once more and called upon the Lord.

"God, why am I unable to say my own name correctly?" he asked.

The Lord replied, "You asked for no death. That is why it did not come."

4. விளையாட்டாகச் சொன்னாலும் இந்தக் கதை, இந்த பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்து நிலைத்திருக்கக்கூடிய மாபெரும் உண்மையைச் சொல்லக்கூடியது. அந்த உண்மையை விளக்கத்தான் கருடபுராணம் பகவான் மகாவிஷ்ணுவின் மூலம் நமக்கு அருளப் பட்டது எனலாம். அதைத்தான் நாம் ரசித்து வருகிறோம் 4. Though told humorously, this story conveys an eternal truth. It is this very truth that Lord Vishnu reveals to us through the Garuda Purana, which we are fortunate to learn and reflect upon.

5. த்ரு, வினதா இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. கத்ருவுக்கு ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாக பிறந்தன. வினதாவுக்கு இரண்டே முட்டைகள் பிறந்தன. கத்ருவுக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்வதைக் கண்டு பொறாமை உற்ற வினதா, தன் முட்டைகளில் ஒன்றை உடைத்துப் பார்த்தாள். அதில் ஒரு குழந்தை இருந்தது. ஆனால் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை.

5. Kadru and Vinata were both mothers. Kadru gave birth to a thousand snakes, while Vinata laid only two eggs. Feeling envious of Kadru for having many children, Vinata broke one of her eggs prematurely. Inside, there was a child, but he was not fully developed.

6. அந்தக் குழந்தை பிறந்தவுடன் கோபம் கொண்டு தன் தாயான வினதாவுக்குச் சாபம் கொடுத்தது.

நீ யாரைக் கண்டு பொறாமையுற்றாயோ அவளுக்கே 500 ஆண்டுகள் அடிமையாக இருப்பாய்’ என்று சொல்லிச் சென்றது.

அந்தக் குழந்தைதான் அருணன். கோபத்தினால் சிவந்த முகம் உடையவனாக விளங்கியதால் அவனுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.

6. As soon as the child was born, he became furious and cursed his mother.

"Because of your envy, you will be a slave for 500 years to the one you resented!"

That child was Aruna. He was given that name because his face was red with anger.

7. தனக்குக் கிடைத்த சாபத்தை எண்ணி வருந்திய வினதா, ‘எப்போது அந்தத் துயரம் நிகழும்’ என்று காத்திருந்தாள். கத்ருவும் தன் குழந்தைகள் வளர்வதைக் கண்டு, அவர்களைக் கவனித்துக்கொள்ளப் பணிப்பெண் ஒருத்தி வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

7. Vinata was devastated by the curse. A deep sense of unease filled her heart, as she feared that misfortune was inevitable. Meanwhile, Kadru, whose children were growing up, was thinking of finding a maid to look after them.

8. ஒருநாள் வினதாவும் கத்ருவும் நீராட நதிக்கரைக்குச் சென்றனர். அப்போது வானத்திலே ‘உச்சிஸ்ரவஸ்’ என்கிற தேவலோகத்துக் குதிரை பறந்து போவதை வினதா கண்டாள். உடனே கத்ருவை அழைத்து, ‘`அதோ பார் உச்சிஸ்ரவஸ்' என்று காட்டினாள்.

உடனே கத்ரு, ‘`நானும் பார்த்தேன். எங்கே உச்சி ஸ்ரவஸ் எப்படி இருந்தது சொல்?'’ என்று கேட்டாள். அதற்கு வினதா, `‘அது மிகவும் அழகாக இருந்தது. தெய்விகக் களையோடு இருந்தது.

ஒருபோதும் தன் இளமையில் குறை யாது என்பது போன்று தோன்றியது'’ என்று சொன்னாள்.

8. One day, Vinata and Kadru went to the riverbank to bathe. At that moment, Vinata noticed the celestial horse, Ucchaihshravas, flying in the sky. She immediately called Kadru and said, "Look! There is Ucchaihshravas!"

Kadru replied, "I see it too. Tell me, how did Ucchaihshravas appear to you?"

Vinata eagerly said, "It was divinely beautiful. It seemed as though its youth would never fade."

9. இதைக் கேட்டதும் சிரித்த கத்ரு, ‘`அதெல்லாம் சரி. அது என்ன நிறத்தில் இருந் தது என்று சொல் பார்க்கலாம்’' என்றாள்.

உடனே வினதா, ‘`அது தூய பால்போன்ற வெள்ளை நிறத்தில் இருந்தது'' என்றாள்.

கத்ரு, “நன்றாகக் கவனித்தாயா... உடல் முழுவதுமா வெள்ளையாக இருந்தது?

 வால் கறுப்பாக இருந்ததே?’' என்றாள்.`இல்லவே இல்லை. வாலும் நல்ல வெளுப்புதான்'’ என்றாள் வினதா. கத்ரு சும்மா இல்லாமல், ‘`நான் பார்த்தேன். அதன் வால் கறுப்பாகத்தான் இருந்தது. என்ன பந்தயம்’' என்றாள்.

அதுவரை பதில் பேசிய வினதஆ ஒருகணம் மௌனமானாள். அருணனின் சாபம் அவளின் மனதில் தோன்றியது. நாம் கத்ருவுக்குத்தான் அடிமை யாகப் போகிறோம் என்பதை அறிந்திருந்ததால், அந்தச் சூழலில் இருந்து தப்புவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

9. Kadru laughed and said, "That's all well and good. But tell me, what color was it?"

"It was pure milky white," Vinata replied.

Kadru smirked. "Did you observe it carefully? Was its body white? But wasn’t its tail black?"

"Not at all! The tail was also pure white," Vinata insisted.

Kadru, feigning nonchalance, said, "I saw it too. Its tail was black. Want to bet on it?"

Vinata hesitated. Aruna’s curse loomed in her mind. Realizing that she was destined to become Kadru’s slave, she began searching for a way to escape her fate.

10. ‘கத்ருவே பந்தயத்துக்கு வருகிறாள். நிச்சயம் உச்சிஸ்ரவஸ் வாலும் வெள்ளை நிறம்தான். அப்படி இருக்கும்போது, இந்தப் பந்தயத்தைப் பயன்படுத்தி நாம் ஏன் கத்ருவை அடிமையாக்கிவிடக் கூடாது’ என் நினைத்தாள்.

சாபங்களும் பாவங்களும் காலைச் சுற்றிய சர்ப்பங்கள் போன்றவை. நிச்சயம் அவை தீண்டியே தீரும். அவற்றிலிருந்து வெளியேற பொறுமையும் வெளிப்படைத் தன்மையும் தேவை.

தான் அடிமைப்பட விரும்பாத வினதா மற்றொருவரை அடிமையாக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு அல்லவா!

மேலும் ‘இரண்டாவது மகன் விடுவிப்பான்’ என்று அருணன் சொல்லியும் வினதா அதை நம்பாமல் பந்தயம் கட்டத் துணிந்தாள்

10. Kadru is betting… but Ucchaihshravas' tail is definitely white. Why don't I use this bet to enslave Kadru instead? Vinata thought to herself.

But curses and sins cling to a person like serpents wrapped around their feet. There is no escaping them. Only patience and honesty can free one from their grasp.

Was it not wrong for Vinata to wish to enslave someone else when she herself feared slavery?

Moreover, Aruna had foretold that her second son would one day free her. Yet, Vinata did not trust this prophecy and dared to accept the bet.

11. “உச்சிஸ்ரவஸ், வாலும் வெள்ளை என்று தெரியவந்தால், நீ எனக்கு அடிமையாக வேண்டும். சம்மதமா” என்றாள்.

கத்ருவோ தனக்கு ஓர் பணிப்பெண் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் வினதா இப்படிச் சொல்வதைக் கேட்டு வியந்தாள். எப்படியேனும் வினதாவை இந்தப் பந்தயத்தில் தோற்கடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

11. "If it turns out that Ucchaihshravas' tail is white, you will become my slave. Do you agree?" Vinata proposed.

Kadru, who had been looking for a maid, was taken aback. But she quickly decided that she would win the bet at any cost.

12. தன் வீட்டுக்குத் திரும்பி, தன் ஆயிரம் கருநாகக் குட்டிகளையும் அழைத்தாள்.

 “நாளைக் காலை உச்சிஸ்ரவஸ் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்” என்றாள்.

 அதேபோன்று நாகங்களும் சென்று அதன் வாலில் சுற்றிக் கொள்ள, வால் பார்ப்பதற்குக் கறுப்பாகத் தோற்றம் அளித்தது.

மறுநாள் காலை வினதாவும் கத்ருவும் நதிக்கரைக்குப் போய் நின்றபோது உச்சி ஸ்ரவஸ் வானில் பறந்துபோனது.

அப்போது கத்ரு, “பார்த்தாயா வினதா அதன் வால் கறுப்புதான்” என்றாள்.

 வினதாவால் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள். அப்போதும் அது கறுப்பாகவே தெரிந்தது.

அவள் விரக்தியின் உச்சிக்கே சென்றாள். தன் மகனின் சாபம் பலித்துவிட்டதை எண்ணிக் கவலைப்பட்டாள். என்றாலும் வேறு வழியில்லை. கத்ருவுக்கு அடிமையாக வாழத் தொடங்கினாள்.

12. That night, Kadru returned home and summoned her thousand black cobra sons.

"Tomorrow morning, wrap yourselves around the tail of Ucchaihshravas," she commanded.

The cobras obeyed, slithering onto the celestial horse’s tail and coiling around it. By morning, the tail appeared completely black.

The next day, when Vinata and Kadru returned to the riverbank, Ucchaihshravas soared through the sky.

Kadru pointed triumphantly. "Do you see, Vinata? Its tail is black!"

Vinata couldn’t believe her eyes. She rubbed them in disbelief, but the sight remained unchanged. The tail was black.

A wave of despair washed over her. She knew that Aruna’s curse had come to pass. There was no escape. From that day onward, she lived as Kadru’s slave.

13. கஸ்யபர் கந்தமாதன மலையில் மாபெரும் யாகம் ஒன்றைச் செய்யத் திட்டமிட்டார். அதற்கு அனைவரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய முன்வந்தனர். அந்த மலையிலேயே வசிக்கும் முனிவர்கள் வாலகில்யர்கள்.

13. Meanwhile, the great sage Kasyapa was preparing to perform an immense fire sacrifice on Mount Gandhamādana. People from all over came forward to assist in whatever way they could. Among those present were the Vālakhilya sages.

14.வாலகில்யர்கள் என்போர் கட்டை விரல் அளவேயுள்ள சிறிய உருவம் உடையவர்கள். ஆனால் தவ வலிமை மிக்கவர்கள். அவர்கள் கஸ்யபரின் யாகத்துக்குத் தாங்கள் ஒரு சமித்தேனும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில், ஒரு சமித்தை ஏழு வாலகில்யர்கள் சுமந்து கொண்டு சென்றனர்.

அப்போது அந்த வழியிலே இந்திரன் தேரில் வந்தான். இந்திரன் கஸ்யபருக்கும் அதிதிக்கும் பிறந்தவன். தேரில் யாகத்துக்கான பொருள்களைச் சுமந்து கொண்டு வந்தான்.

வரும் வழியில் வாலகில் யர்கள் எழுவர் ஒரு சமித்தைச் சுமந்துவருவதைப் பார்த்த தும் சிரித்துவிட்டான்.

இவ்வளவு சிறிய உருவம் கொண்ட இவர்களுக்கு இதெல்லாம் தேவையா?” என்று கிண்டலாகச் சொன்னான்.

இதை வாலகில்யர்கள் கேட்டாலும் பொறுத்துக்கொண்டு அமைதியாக நடந்தனர்.

வழியில் ஒரு சிறு பள்ளம். நமக்குப் பள்ளம் என்றால் அவர்களுக்கு அது குழி. தெரியாமல் அதில் கால்வைத்து எழுவரும் சறுக்கி அதில் விழுந்தனர். இதைக் கண்ட இந்திரன் தன்னை மறந்து சிரித்துவிட்டான்.

தவ வலிமை கொண்டோரைக் கண்டதும் அவன் வணங்கியிருக்க வேண்டும். கேலி பேசியிருக்கக் கூடாது. இந்திரனோ வாலகில்யர்களை வணங்கவும் இல்லை; கேலியும் பேசினான்.

ஆனால், இவற்றை எல்லாம் மன்னித்த முனிவர்கள், அவன் அகங்காரத்தில் சிரித்ததும் கோபம் கொண்டனர். அங்கேயே அமர்ந்து ஒரு தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அந்தத் தவத்தில் தங்களின் தவ வலிமை எல்லாம் ஆகுதி ஆக்கினர்.

தவத்தின் முடிவில் `இந்திரனின் ஆணவம் அடங்க வேண்டும். வேறு ஒரு இந்திரன் தோன்ற வேண்டும். அவன் இந்த இந்திரனை வெல்ல வேண்டும்' என்று பிரார்த்தனை வைத்தனர்.

தவவலிமை மிக்க அவர்களின் தவமும் பிரார்த்தனையும் பலிக்காமல் போகுமா என்ன? யாகத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் தவ வலிமை சென்று சேர்ந்த இடம் எது தெரியுமா?

- தொடரும்...

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.

14. The Vālakhilyas were tiny, no bigger than a thumb, but they were extraordinarily powerful ascetics.

Seven of these sages, eager to contribute, carried a samitam (sacrificial twig) to Kasyapa’s yagna.

At that moment, Indra, the son of Kasyapa and Aditi, arrived in his chariot, carrying materials for the sacrifice.

As he passed by, he saw the seven sages carrying the small bundle of twigs. Mockingly, he said, "Do such tiny people really need to bother with all this?"

The Vālakhilyas heard him but remained silent, tolerating his arrogance.

On their path lay a small ditch. For ordinary people, it was nothing, but for the tiny sages, it was a pit. As they crossed it, they stumbled and fell.

Indra burst into laughter, forgetting himself.

He should have bowed before those who possessed such great ascetic power. Instead, he ridiculed them.

But the rishis, who had overlooked his earlier insult, could not ignore his outright laughter. Anger filled their hearts. Right then and there, they sat down and began a penance.

They poured all their spiritual energy into their prayers.

At the conclusion of their penance, they declared, "May Indra’s arrogance be humbled! May a new Indra arise, one who will conquer the present, arrogant Indra!"

Will their penance bear fruit?

Do you know where the power of their yagna reached?

To continue.