GP03MandatoryDonationsOn12thDay
The passage of the soul after physical death

கருட புராண ரகசியங்கள்-3: 12-ம் நாள் கொடுக்க வேண்டிய 10 வகை தானங்கள்!

இல.சைலபதிஸ்யாம்

4 Min Read

தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க

கருட புராணம்: 12-ம் நாள் கொடுக்க வேண்டிய 10 வகை தானங்கள்!கோதானம், பூ(மி)தானம், எள், தங்கம், நெய், பருத்தி, நெல், வெல்லம், வெள்ளி, உப்பு ஆகியவையே தச தானங்கள்.

Published:29 Apr 2024 2 PMUpdated:29 Apr 2024 2 PM

 

Garuda Purana Secrets-3: 10 Types of Donations To Give On Day 12
L.Shailapathisyam
Read other episodes of the series
Garuda Purana: The 10 types of donations to be given on the 12th day of death are Godanam -Cow donation, Bhoodanam -earth donation, Sesame, Gold, Ghee, Cotton, Paddy, Jaggery, Silver and Salt.
Published: 29 Apr 2024 2 PMUpdated: 29 Apr 2024 2 PM

1. ‘நசிகேதா, மரணத்தை எதிர்கொள்வது எளிமையானது. ஆனால், பெரும்பாலானவர்கள் அதைச் சந்திப்பதே இல்லை. மரணம் நிகழப்போகிறது என்கிற பயத்திலேயே உயிரை விட்டு விடுகிறார்கள். ஆனால் வாழ்க்கையை முறையாக வாழ்பவன் மரணத்தை அச்சமின்றி எதிர்கொள்வான்.’ - யமன்

1. 'Nasiketa, facing death is simple. But most people don't go through it. They die from fear of imminence of death. But he who lives life properly will face death fearlessly.' - Yaman  (The Lord of Death)

2. ஒருவன் மரணம் அடைந்து முதல் 13 நாள்கள் செய்யப்படும் கிரியைகள் மிகவும் முக்கியமானவை. அவனுக்குக் கர்மா காரியங் களைச் செய்ய வேண்டியவர் அவற்றை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும். அவ்வாறு அவர் செய்வதைக் காணும் மரணம் அடைந்தவனின் ஆன்மா கொஞ்சம் சமாதானம் கொள்ளும்.

2. The rituals performed during the first 13 days after a person's death are very important. He who has to perform rites and rituals for him should do them very responsibly. Seeing him do so, the soul of the deceased will be at peace.
3. பதினொன்று, பன்னிரண்டாம் நாளில் வழங்கவேண்டிய தானங்களை முறைப்படி வழங்க, அந்த ஆன்மா திருப்தியாகி மேலுலகம் நோக்கிப் புறப்படத் தயாராகும். 3. On the eleventh and twelfth day, when the gifts to be made are duly offered, the soul will be satisfied and ready to leave for the next  upper world.
4. பன்னிரண்டாம் நாள் செய்ய வேண்டிய சடங்கிற்கு, ‘ச பிண்டி கரணம்’ என்று பெயர். இறந்தவரை அவரின் தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் பிண்டத்துடன் சேப்பதால், அதற்கு அந்தப் பெயர் உண்டானது. அப்போது தச தானங்கள் கொடுக்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். 4. The ritual to be performed on the twelfth day is called 'Sapindi Karanam'. It got its name from the fact that the deceased was joined by his mother, father, grandfather and great-grandfather. At that time, the scriptures say that Dasadhānas (Ten materials donation- see below) should be given.
5. கோதானம், பூ(மி)தானம், எள், தங்கம், நெய், பருத்தி, நெல், வெல்லம், வெள்ளி, உப்பு ஆகியவையே தச தானங்கள் ஆகும். இவற்றைக் கொடுப்பது அனைவருக்கும் சாத்தியம் அல்ல. எனவே அவற்றுக்கு மாற்றாக எளிய முறையில் தானங்கள் கொடுக்க, அந்தச் சடங்கை நடத்திவைக்கும் அந்தணர் வழிகாட்டுவார். 5. Godanam (Donation of a cow), Bhoodanam (Earth), Sesame, Gold, Ghee, Cotton, Paddy, Jaggery (unrefined caked brown sugar), Silver and Salt are Dasadhanas (10 donations). It is not possible for everyone to give these. Therefore, the Brahmin who conducts the ritual will recommend simple way of giving gifts in lieu of them.
6. உதாரணமாக கோ தானம் செய்ய வேண்டியது மிகவும் அவசி யம். கோ தானத்தின் சிறப்பை வைதரணி நதி பற்றிய பகுதியில் கருடபுராணம் எடுத்துரைக்கிறது. ஆனால் கோ தானம் செய்ய வசதியில்லாதவர்கள், பசு மாட்டின் பிரதிமையை (உலோக பொம்மை) தானம் கொடுக்கலாம். அதற்கும் வழியில்லாதவர்கள் அரிசி மாவு முதலிய மாவு கொண்டு மாடுபோன்று செய்து அதைச் சிறு தட்சிணையோடு சேர்த்துக் கொடுக்கலாம். அதற்கும் கஷ்டப்படுபவர்கள், மட்டைத் தேங்காயை கோதானம் செய்வதாக நினைத்துச் சமர்ப்பிக்கலாம் என்கிறது சாஸ்திரம். 6. For example, it is very important to donate cows. The Garuda Purana deals with the significance of Godana in the section on the river Vaitarani. But those who cannot afford cow donation can donate an image of a cow (metal doll). Those who do not have the means to do that can make a cow out of rice flour and give it along with a small dakshina (fee). Those who are struggling for that can offer a whole unhusked coconut thinking that it is Godhanam.
7. இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும் எழலாம். `மட்டைத் தேங்காயைத் தந்தாலே கோதானம் என்றால், அதையே எல்லோரும் கொடுத்துவிடலாமே... ஏன் ஒரு பசுவை தானம் செய்ய வேண்டும்?’ இப்படிக் கேட்பவர்களுக்கு சாஸ்திரம் மிகவும் தெளிவாக அறிவுறுத்துவது, ‘யாருக்கு கோ தானம் செய்யும் சக்தி இல்லையோ அவர்கள்தான் தேங்காய் தானம் செய்யலாம்’ என்கிறது. 7. A question may arise for everyone at this point. 'If a unhusked coconut is Godhanam, why don't you give it to everyone? Why donate a cow?' The scriptures clearly advise those who ask, 'Only those who do not have the means to donate cow can donate coconuts'.
8. கோ தானம் செய்யும் அளவுக்கு ஒருவருக்கு வசதி வாய்ப்பிருந்து, அவர் கஞ்சத்தனமாக வெறும் தேங்காயை தானம் கொடுத்தால், அது பாவம். அதேபோல் தானம் பெறுகிறவர் தானம் கொடுப்பவருக்கு உறவினராக இருக்கக் கூடாது. தானம் பெறுபவர் வேதம் அறிந்த அந்தணராக இருக்க வேண்டும். அவருக்குத் தகுதியான பசுவையோ பொருள்களையோ தானம் செய்ய வேண்டும். 8. If a person has the means to donate a cow and he is miserly donating just a coconut, it is a sin. Similarly, the recipient should not be related to the donor. The recipient should be a Brahmin conversant with the Vedas. He should donate a cow or anything of value.

9. நசிகேதனின் தந்தை வாஜசிரவஸ். யாகம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்தவர். எனவே, இந்த உலகின் சுகங்களை எல்லாம் அடைய யாகம் செய்யத் தொடங்கினார். அந்த யாகத்தில் கொடுக்க வேண்டிய தானங்களையும் கொடுத்தார். 9. Vājasiravas, father of Nasikēta, knows that if he performs a yagna, he will be rewarded. Therefore, he began to perform yajna to attain all the pleasures of this world. He also gave the donations to be given in that yajna.
10. ஆனால் கொடுத்த தானங்கள் அனைத்தும் பயன்படுத்த உதவாதவை. தன்னிடம் தேவையில்லாமல் இருக்கும் பொருள்களை அல்லது சுமையை அவர் தானமாகக் கொடுத்தார். பால் வற்றிய மெலிந்த வயதான பசுவை ஓர் அந்தணருக்குத் தானம் கொடுத்தார். இதைக் கண்ட நசிகேதன் மனம் வருந்தினான். 10. But all the gifts given were unusable. He gave away things or burdens that he did not need. He gave away a lean old cow to a Brahmin. Seeing this, Nashiketan felt sad.

11. யாகங்களை உலக நன்மைக்காகச் செய்வதுவே உயர்ந்த லட்சியம். அவற்றைச் சுயபலன் கருதி யாகம் செய்வது சரியல்ல. அதிலும் தகுதியில்லாத தானங்களைத் தருவது மென்மேலும் பாவத்தைச் சேர்க்கும். இதை அறிந்து வருந்தினான் நசிகேதன். தன் தந்தையிடம் சென்று எடுத்துச் சொல்ல முயன்றான். ஆனால் அவரோ அதைக் கேட்கும் நிலையில்லை.

11. The highest aim is to perform sacrifices for the good of the world. It is not right to sacrifice them for self-benefit. Giving gifts that are not worthy of it will only add to sin. Nasikethan was sorry to know this. He went to his father and tried to tell him. But he was in no mood to listen.


12. உடனே நசிகேதன், “தந்தையே, என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். ஒருமுறை அல்ல மூன்று முறை கேட்டான். அதில் எரிச்சல் அடைந்த வாஜசிரவஸ், “உன்னை யமனுக்குக் கொடுக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டதும் நசிகேதன் சந்தோஷம் அடைந்தான்.

12. Nashiketa asked, "Father, to whom are you going to give me away?" He asked not once, but three times. Irritated, Vajasiravas said, "I am going to give you to Yama, (the Lord of Death)." Nashiketan was happy to hear that.
13. ஒருவனின் உடமைகளில் மிகவும் உயர்ந்தது அவன் பிள்ளைகளே. மேலும் நசிகேதன் போன்ற ஒழுக்கமும் ஞானமும் பக்தியும் நிறைந்த ஒருவனைத் தானமாகக் கொடுப்பது எவ்வளவு சிறந்த ஒன்று?! ஆனால் அவனை மரணத்தின் தலைவனிடம் அனுப்புவதாகச் சொல்லிவிட்டதை வாஜசிரவஸ் உணரவில்லை. ஆனால் சொன்ன வாக்கு சொன்னதுதான். 13. The greatest possessions of a man are his children. And how excellent it is to give away as charity an individual as virtuous, wise and devout as Nasikēta?! But Vājasiravas did not realize that he had promised to send him to the Lord of Death. But, the spoken word, thus uttered, is a promise.


14. நசிகேதன், தன் ஒழுக்க நெறியால் உண்டான சக்தியைக் கொண்டு யமபுரிக்குச் சென்றான். அங்கே யமனை சந்தித்து உரை யாடி சில வரங்களையும் பெற்றான். அப்போது அவன் யமனிட மிருந்த பெற்ற ஞானப்பொக்கிஷமே, ‘கடோபநிஷத்.’ 14. Nasikēta, by means of the power of his virtuous conduct, proceeded to Yamapuri. There he met Yama, conversed with him and obtained some boons. The treasure of knowledge he received from Yama at that time was 'Kadōpanishad'.
15. மரணத்துக்குப் பின் 13 நாள்கள் முடிந்ததும் ஆன்மா மேலுலகம் நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும். யம கிங்கரர்கள் அந்த ஆன்மாவை ஒரு குரங்கினைக் கட்டி இழுத்துச்செல்வதுபோல் இழுத்துச் செல்வார்கள். 15. At the end of 13 days after death, the soul begins its journey to the higher world. The Yama Kinkaras will drag the soul like a monkey.
16. மரணம் அடைந்த முதல் நாள், அந்த ஆன்மாவை 80 ஆயிரம் காத தூரத்தில் உள்ள யமலோகத்துக்கு ஒரு நொடிப்பொழுதில் அழைத்துச் சென்று மீண்டும் மண்ணுலகத்துக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டனர் யமகிங்கரர்கள். ஆனால் இப்போது தினமும் 27 காததூரம் அந்த ஆன்மாவை நடத்தியே அழைத்துச் செல்வார்கள். 16. On the first day of his death, the Yamakingaras took that soul to Yamaloka, which is 80,000 kātams away, in a moment and brought it back to earth. But now that soul is taken 27 leagues every day by walk.
காதம்¹ kātam = 1 on Kātasm is about ten miles. Gāvuda, Indian league, is about 10 miles.


17. இரவும் பகலும் அந்த ஆன்மா மோசமான பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும். தொடர்நடையினால் அது களைப்புற்று பசியினாலும், தாகத்தினாலும் நடை சுணங்கும். அப்போது யமகிங்கரர்கள் அதைத் தாக்குவார்கள். அந்த அடிகளைத் தாங்க முடியாமல் ஆன்மா அலறியபடி அவர்கள் இழுத்த இழுப்புக்கு ஓடும். அவர்கள் செல்லும் பாதை அடர் வனங்களாக இருக்கும். அங்குள்ள மரங்களின் இலைகள் மிகுந்த வாள்போன்ற கூர்மை உடையன. யமகிங்கரர்கள் ஆன்மாவைக் கட்டியிருக்கும் கயிரை இழுக்கும்போது, ஆன்மா அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படும். அப்போது கூரான இலைகள் ஆன்மாவைக் குத்தும். அப்போது வலி தாங்காமல் அழும் அந்த ஆன்மா. 17. Day and night that soul will have to tread the bad path. It gets tired of walking and walks with hunger and thirst. Then the Yamakingaras will attack it. Unable to bear the blows, the soul would scream and run to the pull of the Yamakingaras. Their path will be dense forests. The leaves of the trees there are sharp like swords. When the Yama kingaras pull the rope that binds the soul, the soul will be tossed hither and thither. Then the sharp leaves pierce the soul. Then the soul cries out in pain.
18. ஒரு நிமிடம்... ஆன்மாவுக்கு ஏது தாகம்... பசி... மற்றும் வலி. ஆன்மாவுக்கு உணர்வு உண்டா? இதெல்லாம் வெறும் கற்பனை தானோ என்று கேட்கிறீர்களா... 18. Wait a minute... What is thirst for the soul... Hunger... And pain. Does the soul have consciousness? Are you wondering if all this is just a fantasy?



19. உங்களுக்கு ஒரு சிறு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதைக் குளிரூட்டுங்கள். அப்போது அதில் நிரப்பிய நீர், ஐஸ்கட்டியாக மாறிவிடும். பின்பு பாத்திரத்தைத் தனியாக எடுத்து விடுங்கள். அப்போது அதில் வைக்கப்பட்ட நீர் அந்தப் பாத்திரத்தின் வடிவிலேயே உறைந்திருக்கும். 19. Let me give you a small example. Fill a vessel with water and freeze it. Then the water filled in it will turn into an ice cube. Then remove the vessel aside. Then the water kept in it is frozen in the shape of that vessel.
20. உண்மையில் நீர் பாத்திரத்தின் வடிவு கொண்டதல்ல. ஆனால் பாத்திரத்தில் தங்கியிருந்த கொஞ்ச நேரத்தில் பாத்திரத்தின் வடிவத்தைப் பெற்றுவிட்டது. சில நிமிடங்கள் அல்லது மணி நேரங்கள் அப்படியே உறைந்திருக்கும். பின்பு வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அது தன் சுயத்தை அடையும். 20. In reality, water does not have the shape of a vessel. But the water assumed the shape of the vessel, once frozen. It would stay frozen as appropriate conditions exist. As the heat rises, the water assumes its innate quality.
21. அப்படித்தான் ஆன்மாவும். வடிவமற்ற ஆன்மா ஓர் உடலுக்குள் வாழ்கிறது. அதுவே தன் வடிவம் என்று நினைக்கிறது. அப்போது உடலின் பசியையும், தாகத்தையும், துக்கத்தையும், மகிழ்ச்சியையும் தனக்கானதாக நினைக்கிறது. அப்படியே சில காலம் பயணிக்கிறது சூட்சும சரீரத்துக்கும் பசி, தாகம் உண்டு என்கிறது சாஸ்திரம். உண்மையில் ஆன்மாவுக்கு நாம் வைக்கும் பிண்டத்தை ஆன்மா நேரிடையாக உண்பதில்லை. ஆனால் உண்ட திருப்தியை அடைகிறது. அதன் மூலம் பலமும் பெறுகிறது என்கிறது சாஸ்திரம்.

21. So is the soul: a formless entity living in the body. It thinks that's its form. Then the soul thinks of body's hunger, thirst, sorrow and happiness as its own. In that state, the soul makes the journey.The shastra says that the subtle body also has hunger and thirst.
In fact, the soul does not directly eat the pinda, which we offer to the soul. It attains the sense of appeasement of having eaten the Pinda.  Shastra says that it also gains strength through it.
22 . கண்ணுக்குத் தெரியாத அரூபமான விஷயங்களில் நாம் சாஸ்திரத்தை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அது அனுபவத்தின் வழியும் ஞானத்தினாலும் பெறப்பட்ட பல ஆயிரம் ஆண்டு ஞானப் பொக்கிஷம். கருடபுராணம் அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டி என்றால் மிகையில்லை. 22 . We have no choice but to believe in the scriptures when it comes to the invisible, formless, and abstract. It is a treasure trove of thousands of years of wisdom acquired through experience and wisdom. It is no exaggeration to say that Garuda Purana is such a wonderful guide.