| GP05HowToCrossTheDeadlyVaitaraniRiver | |
| Machine translation edited for clarity. | |
| கருட புராண ரகசியங்கள் - 5:
கொடூரமான வைதரணி ஆற்றை எளிதில் கடப்பது எப்படி? இல.சைலபதி 3 Min Read தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க கருட புராண ரகசியங்கள் - 5: மரணத்துக்குப் பின் ஆன்மா, ஆறு மாதங்கள் நடந்து க்ரௌஞ்சபுரம் என்னும் நகரை அடைந்து அங்கே பிண்டத்தைப் புசித்து 1/2 முகூர்த்த காலம் ஓய்வெடுக்கும். அதன்பின் யம கிங்கரர்கள் ஆன்மாவை ஓய்வெடுக்க அனுமதிக்காமல் வைதரணி நதிக்கரைக்குக் கூட்டிச் செல்வார்கள். Published:27 May 2024 5 PMUpdated:27 May 2024 5 PM |
Garuda Purana Secrets - 5: How To Cross The Deadly Vaitarani River
Easily? L. Shailapathy Read other episodes of the series Sakthi Vikatan Magazine Secrets of Garuda Purana - 5: After death, the soul walks for six months and reaches the town of Krounjapuram where it eats the pinda and rests for 1/2 muhurtham (1 ½ HOURS). Then the Yama Kinkaras would not allow the soul to rest and would take it to the banks of the river Vaitarani. Published: 27 May 2024 5 PMUpdated: 27 May 2024 5 PM Garuda Purana |
| கருடபுராணம் 1. கருடபுராணம், மரணத்துக்குப் பின் நிகழும் ஆன்மாவின் பயணம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது. ஆபத்தான, வலியும் வேதனையும் தரும் அந்தப் பயணம் குறித்து பகவான் வெளிப்படுத்துவது, அச்சுறுத்தும் நோக்கத்திற்காக அல்ல அறிவுறுத்தும் நோக்கத்தில்தான். இதைப் புரிந்துகொண்டால், கருடபுராணம் அற்புதமான வாழ்வியல் அறநூலாகக் கொண்டாடப்படும். 1 |
1.
The Garuda Purana describes the journey of the soul after death. The
Lord's revelation of that dangerous, painful and sorrowful journey is
not intended for intimidation but to instruct. If this is understood,
Garuda Purana will be celebrated as a wonderful book on life ethics. |
| 2. மரணத்துக்குப் பின் ஆன்மா, யமகிங்கரர்களுடன் ஆறு மாதங்கள் நடந்து க்ரௌஞ்சபுரம் என்னும் நகரை அடைந்து அங்கே அவன் சந்ததியினர் கொடுக்கும் மாத பிண்டத்தைப் புசித்து 1/2 முகூர்த்த காலம் ஓய்வெடுக்கும். அதன்பின் யம கிங்கரர்கள் ஆன்மாவை ஓய்வெடுக்க அனுமதிக்காமல் வைதரணி நதிக்கரைக்குக் கூட்டிச் செல்வார்கள். | 2. After death, the soul walks for six months with the Yamakingaras and reaches the town of Krounjapuram where he eats the monthly pinda given by his descendants and rests for 1/2 muhurtham. Then the Yama Kinkaras would not allow the soul to rest and would take it to the banks of the river Vaitarani. One Muhurtham = 1 ½ hrs. |
| 3. செந்நிறத்தில் ஓடும் அந்த நதி நூறு யோஜனை நீளம் உடையது. நெருங்கும்போதே அதிலிருந்து வீசும் துர்நாற்றம் ஆன்மாவை அச்சுறுத்தும். ஆன்மா நதியின் கரையை அடைந்ததும், ஆற்றில் படகுகளோடு படகோட்டிகள் பதினாராயிரம்பேர் தோன்றுவார்கள். அவர்கள் பார்க்க பயங்கரமான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களின் கண்களில் நெருப்புப் பொறி பறக்கும். கைகளில் கூர்மையான வேல் வைத்திருப்பார்கள். | 3. Flowing in red colour, the river is a hundred yojanas in length. The foul smell that emanates from it as you approach it frightens the soul. When the soul reaches the bank of the river, sixteen thousand rowers with boats appear on the river. They look terrible. Sparks of fire will fly in their eyes. They have sharp spears in their hands. Yojana = 8 miles. |
| 4. “ஆன்மாவே, இதுதான் வைதரணி நதி. நீ பூலோகத்தில் கண்ட நதிகளைப்போல அல்ல, இது சேறும், சகதியும், மாம்சமும், ரத்தமும், சீழும், கழிவுகளும் நிறைந்த நதி. இதில் கொடூரமான விலங்குகளும் உண்டு. இதைக் கடப்பது எளிதன்று. ஆனால் நீ வாழ்வில் ஒருமுறையாவது வைதரணிக் கோதானம் செய்திருந்தால், எளிமையாக நீ ஆற்றைக் கடக்கலாம். இந்த இடத்தில் புனிதமான பசு ஒன்று தோன்றும். அதன் வாலை நீ பற்றிக்கொண்டால் மறுகரையில் உன்னைப் பாதுகாப்பாக இறக்கிவிடும். இல்லை என்றால் நீ வைதரணி நதியில் தள்ளப்படுவாய்” என்று படகோட்டிகள் ஆன்மாவிடம் சொல்வார்கள். | 4. "O soul, this is the river Vaitarani. It is not like the rivers you saw on earth, it is a river of mud, slush, flesh, blood, pus and waste. There are also ferocious animals. It is not easy to overcome. But if you have done Vaitarani Godan (Cow donation) at least once in your life, you can easily cross the river. A sacred cow will appear at this place. If you grasp its tail, it will land you safely on the other side. Otherwise, you will be thrown into the river Vaitarani," the boatmen would say to the soul. |
| 5. இதைக் கேட்டுப் புண்ணியமே செய்யாத ஆன்மாக்கள் நடுங்கும். சில ஆன்மாக்களை யமகிங்கரர்கள் வைதரணி நதியில் தள்ளி விடுவார்கள். அப்படி யாரை எல்லாம் அவர்கள் தள்ளிவிடுவார்கள் என்று ஒரு பட்டியலை கருடபுராணம் சொல்கிறது. | 5. Hearing this, the unvirtuous souls will tremble. Some souls will be thrown into the Vaitarani river by the Yamakingaras. The Garuda Puranam gives a list of those who will be pushed away. |
| 6. யார் யார் எல்லாம் வைதரணி
நதியில் கட்டாயம் வீழ்வார்கள்? அஹங்காரம் பிடித்து தந்தை, தாய், குரு, புரோஹிதன் ஆகியோரை அவமதித்தவன், தனக்கு உதவி செய்தவனுக்குத் தீங்கு செய்தவன், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோருக்குத் தீங்கு செய்தவன், திருமணத்தைத் தடுத்து நிறுத்தி மணப் பெண் ணைப் பற்றிய அவதூறு பேசியவன், தான தர்மங்களை யாரேனும் செய்யும்போது அதைத் தடுத்தவன், சமய சொற்பொழிவுகளில் வீண் பேச்சுக்களைப் பேசுகிறவன், பிராமண தர்மத்தைக் கைவிட்டு மது மாமிசம் அருந்துபவன், நாத்திகம் பேசுகிறவன், பசுவை அடித்துக் கொன்றவன், பெற்றோருக்குக் கர்மா காரியங்கள் செய்யாமல் விட்டவன் ஆகியோர் கட்டாயம் வைதரணி ஆற்றுக்குள் தள்ளிவிடப்படுவார்கள் என்கிறது கருட புராணம். |
6.
Who all will definitely fall into the Vaitarani river? He who has insulted his father, mother, guru and priest by arrogance, who has harmed those who helped him, who has wronged women, children and the physically handicapped, who has stopping the marriage by slandering the bride, who has prevented anyone from doing charity, who has spoken idle talk in religious discourses, who has abandoned the Brahmin dharma and drinks meat and wine, who speaks atheism, who has killed a cow, who has not done karma for his parents. According to Garuda Purana, they will be thrown into the Vaitarani river. |
| 7. இவர்கள், தாங்கள் செய்ததைத் தவறென்று வாழும் காலத்திலேயே உணர்ந்து கோதானமும் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவம் மன்னிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைதரணி நதியைக் கடந்து செல்ல இயலும். இல்லையென் றால் நாற்றம் மிக்கதும் கொடூரமான விலங்குகள் வாழ்வதுமான அந்த நதியை அந்த ஆன்மா நீந்தித்தான் கடக்கவேண்டும். |
7. If they had realized what they had done
wrong in their lifetime and had done Godana, their sins would have been
forgiven and they would be able to cross the river Vaitarani safely.
Otherwise, the soul would have to swim across that foul and ferocious
river. |
| 8.கோதானம் செய்வது எப்படி? கருடபுராணம் பூவுலகில் வாழும் காலத்தில் செய்ய வேண்டிய தானங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறது. அவற்றில் கோதானத் துக்குத் தரப்படும் முக்கியத்துவம் மிகுதியானது. `கோ' என்றால் பசு. அந்தக் காலத்தில் பசுதான் செல்வம். தமிழில், ‘மாடு’ என்ற சொல்லுக்கு ‘செல்வம்’ என்றுதான் பொருள். சங்க காலத்தில் பசுக்களைக் கவர்வதில்தான் போர் தொடங்கும். அதற்கு, ‘வெட்சி’ என்று பெயர். எவ்வளவு மாடுகள் ஒருவனிடம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் செல்வந்தனாகத் திகழ் கிறான் என்பது அக்கால வழக்கம். எனவே செல்வங்களில் உயர்ந்த செல்வமான பசுவை தானம் செய்யச் சொல்கிறது புராணம். |
8.
How to make Godanam? The Garuda Purana talks in detail about the charity to be done while living on earth. Of these, the importance given to Godana is the greatest. 'Go' means cow. In those days, the cow was wealth. In Tamil, the word 'Mādu' means 'wealth'. In the Sangam age, the war would begin with the capture of cows. It is called 'Vetchi'. It was the custom of those days that the richer a man had great cattle wealth. Therefore, the Purana tells us to donate the highest of wealth, the cow. |
| 9. ஹோமம், யாகம் என எது
செய்தாலும் ஆரம்பத்திலும் முடிவிலும் கோதானம் செய்ய வேண்டும். எவருக்குக்
கோதானம் கொடுத்தோமோ, அவரின் வீட்டுக்குப் போனால் அங்கு பாலோ அல்லது
பாலினால் செய்யப்பட்ட உணவு, பானம் என எதையும் அருந்தக்கூடாது. தானம் கொடுக்கும் முன்பு பசுமாட்டை நல்ல முறையில் ரக்ஷிக்க வேண்டும். அதற்குத் தீவன வகைகளைக் கொடுத்து அது நன்றாகப் பால் சுரக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பற்கள் சரியாக உள்ளதா, ஏதேனும் வியாதி உள்ளதா என்பதை சோதித்து அதன்பின் தானம் கொடுக்க வேண்டும். |
9. Be it homa or yagna, one should do Godanam at the beginning and at the end. If you go to the house of the person to whom you have given Godana, you should not drink milk or any food or drink made of milk.Before giving alms, the cow should be taken care of well. It should be fed with fodder to ensure that it secretes milk well. The teeth should be checked to see if they are in good condition and then donate. |
| 10. தானம் கொடுக்கும் நாளில் கோமாதாவைக் குளிப்பாட்டி, தூபம் காட்டி, புதிய உடைகளை அதன் மேல் சாத்தி அலங்கரித்து, அதன் கொம்புக்கு வெள்ளிப்பூண் சாத்தி கிங்கிணிகள், சலங்கைகள் போன்றவற்றை அணிவித்துப் புதிய கயிற்றால் கட்டி அதற்கு வயிறார உணவு தந்து தானம் செய்ய வேண்டும். | 10. On the day of almsgiving, the gomata (cow-mother) should be bathed, and incense, and new clothes should be adorn the cow with silver threads, anklets. Anklets should be tied with a new rope and food should be given to it. |
| 11. தானம் பெறுகிறவருக்கும் புதிய ஆடைகள் வாங்கிக்கொடுத்து, அவருக்கு வெற்றிலை பாக்கு தக்ஷிணை வைத்துக் கொடுக்கவேண்டும். பசுவின் வால் பகுதியைப் பிடித்து அதில் மனைவியைத் தண்ணீர் ஊற்றச் சொல்லி தானம் கொடுக்க வேண்டும். | 11. The recipient should be given new clothes and betel leaves, areca nut as Dakshina (gifts). Catch the tail of the cow and ask the wife to pour water on it and donate it. |
| 12. தானம் கொடுத்தபின்
பசுவுக்குத் தேவையான ஒரு மாதத்துக்கான உணவையும் சேர்த்து தானம் செய்ய
வேண்டும். பால் கறக்கப் பாத்திரம் கொடுத்து இரண்டு தீபங்களை ஏற்றி தானமாகத்
தர வேண்டும். இவ்வாறு கோதானம் செய்தால் வாழும்போதும் வாழ்க்கைக்குப்
பிறகும் துன்பம் என்பது ஏற்படவே ஏற்படாது. மேலும் செல்வம் பல வகையிலும்
சேர்ந்த வண்ணம் இருக்கும். |
12. After donating the cow, the donor should give the receiver cow feed for a month. Give a milking vessel and light two lamps and donate it. If you do Godan in this way, there will be no suffering during and after life. And wealth will accumulate in many ways. |
| 13. ஆனால் இவ்வாறெல்லாம்
கோதானம் செய்வது அனைவருக்கும் எளிதா? கோதானம் செய்யவில்லை என்றால்
வைதரணியில் வீழ்வார்கள் என்றால், செல்வம் இல்லாதவர்களின் நிலை என்ன? இன்றைக்கு உலகம் நவீனமாக மாறிவிட்டதால், மாடு வளர்ப்பு எல்லோருக்குமானதாக இல்லை. எனவே எல்லோர் வீடுகளிலும் மாடு இல்லை. வசதியில்லாதவர்கள் இந்தச் சடங்கை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது. |
13. But is it easy for everyone to do such Godan? If they don't do Godana, they will fall into Vaitarani, what about those who don't have wealth? Today, the world has become modern and cattle rearing is not for everyone. So not everyone has a cow in their house. The scriptures give guidance on how the less fortunate can perform this ritual. |
| 14. பசுமாட்டைத் தானம் செய்ய இயலாதவர்கள், பசு மாடுபோன்ற உலோகத்தில் செய்த பிரதிமை ஒன்றை தானம் கொடுக்கலாம். அதற்கும் வசதி இல்லாதவர்கள், அரிசி மாவில் பசுமாடுபோல் செய்து அதை தானமாகக் கொடுக்கலாம். வேதம் அறிந்த அந்தணர் அதை கோதான மந்திரங்களைச் சொல்லிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் வசதி இல்லை என்பவர்கள், மட்டைத் தேங்காய் ஒன்றை அந்தணருக்குத் தானம் கொடுக்க வேண்டும். இதில் முக்கியம் செல்வம் அல்ல. சிரத்தையே. | 14. Those who are unable to donate a cow can donate a metal cow. Those who do not have the means can make a cow out of rice flour and donate it. A Brahmin, conversant with the Vedas, should receive it by reciting the Godana mantras. Those who do not have the means for that should donate a unsheared coconut to a Brahmin. It is not wealth that matters, but sincerity. |
| 15. முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கும் சாஸ்திரத்தை நம்புகிறோம். அதையே கடைப் பிடிக்கிறோம் என்கிற வைராக்கியம்தான் முக்கியம். அந்த வைராக்கியத்தோடு செய்யும் மட்டைத் தேங்காய் தானமே வைதரணிக் கோதானமாகவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறார்கள் பெரியோர்கள். | 15.
We believe in the scriptures of the ancients. What matters is the zeal
to follow it. The elders say that the donation of unsheared coconuts
done with that zeal will also be accepted as Vaitarani Godana. |
| 16. வைதரணி கோதானத்தை வாழும்போதே ஒருவர் செய்ய இயலும். அவ்வாறு அவர் செய்யத் தவறியிருந்தால் அவரின் வாரிசுகள் கர்மா காரியங்கள் செய்யும்போது செய்ய லாம். பொதுவாக இந்தக் கர்மா காரியங்கள் செய்வது குறித்து விசாரிக்க வருபவர்கள் முதலில், எவ்வளவு செலவாகும் என்றுதான் கேட்கிறார்கள். இது தவறு. மாறாக எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, தன்னிடம் இருக்கும் பணத்துக்கு ஏற்ப செய்துவைக்க முடியுமா என்பதைக் கேட்க வேண்டும். | 16. One can perform Vaitarani Godana while one is alive. If he fails to do so, his heirs can do it while performing karma rites. Generally, people who come to inquire about these karma activities first ask how much it will cost. This is wrong. Instead, he should know how to do it and ask if he could do it with the money he had. |
| 17. கோதானம் செய்த ஆன்மாக்கள்
வைதரணி நதிக்கரையை அடைந்ததும் ஒரு பசு தோன்றி அவர்களை மறுகரையில்
கொண்டுபோய்ச் சேர்க்கும். அங்கிருந்து மீண்டும் ஆன்மாவின் நடைப்பயணம். - தொடரும்... |
17.
When the Godayan souls reach the banks of the river Vaitarani, a cow
will appear and take them to the other bank. From there the walk of the
soul will continue again. -Continue... |