| GP07JusticeMinistersOfYama | |
| The machine translation was heavily edited for clarity. | |
|
கருட புராண ரகசியங்கள்:
12
சிரவணர்களை
வாழும் போதே
நினைத்து அவர்களின் பெயர்களைச் சொல்லி தானம் செய்யும் வழக்கமும் உண்டு.
அவ்வாறு செய்பவர்களுக்கு சகல புண்ணிய பலன்களும் உண்டாகும்.
Published:24 Jun 2024 3 PM |
Secrets of
Garuda Purana: It is customary to remember 12 Shravanas () while they
are alive and donate their names. Those who do so will get all the
meritorious benefits.Published:24 Jun 2024 3 PMUpdated:24 Jun 2024 3 PM |
|
கருட புராண ரகசியங்கள்: வாழும்போது அவசியம் வழிபட வேண்டிய 12 சிரவணர்கள்!
இல.சைலபதிஸ்யாம்
3
Min Read
தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க
கருட புராண ரகசியங்கள்: 12 சிரவணர்களை வாழும் போதே நினைத்து அவர்களின்
பெயர்களைச் சொல்லி தானம் செய்யும் வழக்கமும் உண்டு. அவ்வாறு
செய்பவர்களுக்கு சகல புண்ணிய பலன்களும் உண்டாகும்.
Published:24
Jun
2024 3
PMUpdated:24
Jun
2024 3
PM
கருட புராண ரகசியங்கள்
|
Garuda Purana Secrets: 12 Sravanas, one Must Worship While Living L.Shailapathisyam Read other episodes of the series Secrets of Garuda Purana: It is customary to remember 12 Shravanas while the seekers of merit are alive, and donate announcing the names of Shravanas. Those who do so will get all the meritorious benefits. Published:24 Jun 2024 3 PMUpdated:24 Jun 2024 3 PM Sravanas = Yama’s Administrators of justice. |
|
ப்ருவாகனன்
என்கிற அரசன் காட்டுவழியாகச் செல்கிறபோது,
பிரேத ஜன்மம்
எடுத்த ஓர் ஆன்மாவைச் சந்திக்கிறான். தனக்கு இறுதிக் காரியங்கள்
செய்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தால்,
தான் பிரேத ஜன்மம் எடுக்க வேண்டியதாயிற்று என்பதை விளக்கிச் சொல்லித்
தனக்குச் செய்ய வேண்டிய கர்மா காரியங்களைச் செய்யுமாறு அவனிடம் வேண்டியது
அந்த ஜீவன். 1 |
1. King Pruvāhana, while passing through the forest, met a soul who had taken a dead birth. Due to the absence of anyone to conduct his last rites, the entity explained that he was required to take a corpse birth (with a body composed of Air and Sky - space) and requested that the necessary rituals be performed on his behalf. |
|
பொதுவாக இறந்தவனுக்குச் செய்யப்பட வேண்டிய கர்மா காரியங்களை அவனின்
தாயாதிக்காரனே (பங்காளிகள்) செய்ய வேண்டும். இறந்தவனுக்கு மகன் இருந்தால்
அவன் செய்யலாம். மகள் வயிற்றுப் பேரன் இருந்தால் அவன் செய்யலாம். அப்படி
உறவுகள் யாரும் இல்லை என்றால் நல்லெண்ணம் கொண்ட யார் வேண்டுமானாலும் அந்த
கர்மா காரியங்களை இறந்தவனுக்காகச் செய்யலாம். அப்படி யாருமே செய்யவில்லை
என்றால் அந்த தேசத்தை ஆளும் ராஜா செய்யலாம். 2 |
2. Generally, the karma (funerary rites) to be performed for the deceased should be performed by his cousins. If the deceased has a son, he can do it. If the daughter has a grandson, he can do it. If there are no such relations, then anyone with good intentions can do those karma deeds for the deceased. If no one does that, the king who rules the land can. |
|
``மன்னா,
நீ அரசன். பிரஜைகளைக் காக்கவேண்டிய கடமை உனக்கு உண்டு. எனவே நீ எனக்குச்
செய்ய வேண்டிய கர்மா காரியங்களைச் செய்ய இயலும். மேலும்,
`நாராயண
பலி'
என்கிற சடங்கைச் செய்வதன் மூலம் எனக்கு நற்கதியும்
உனக்குப் புண்ணியமும் கிடைக்கும். நாராயணபலியை எப்படிச் செய்வது என்பது
குறித்துச் சொல்கிறேன் கேள்''
என்று கூறிய ஜீவன்,
அதுபற்றி விவரித்தது. 3 |
3. "King, you are the king. You have a duty to protect your subjects. So you can do the karma that you have to do for me. Moreover, by performing the ritual of 'Narayana Bali', I will get salvation and you, merit. Listen, I will tell you how to perform the Narayana Bali," said Jeevan (individual soul), and explained it. |
|
கிழக்கில் விஷ்ணுவையும்,
மேற்கில் பிரம்மனையும்,
வடக்கில் ருத்ரனையும்,
தெற்கில் யமனையும் கலச ரூபமாகவோ அல்லது பிரதிமை ரூபமாகவோ வைக்க வேண்டும்.
நடுவில் பிரேத ஜன்மம் எடுத்தவனுக்கு ஒரு ரூபம் செய்து வைக்க வேண்டும்.
பிறகு புருஷ சூக்த பாராயணம்,
ஹோமம் ஆகியன செய்ய வேண்டும். 4 |
4. Vishnu in the east, Brahma in the west, Rudra in the north and Yama in the south should be placed in the Kalasa form or idol. In the middle, a form should be made for the person who took a dead birth. Then the Purusha Sukta recital and Homa should be performed. |
|
மேலும் 10 பிண்டங்கள் வைத்து சங்கில் பால் கொண்டு அபிஷேகம் செய்து பஞ்சக
ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். மீண்டும் குளித்து
விருஷோர்சர்கம் செய்து,
வேதம் கற்றவர் களுக்குப் பாதபூஜை செய்து 33 விதமான தானங்கள் செய்ய
வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பிரேத ஜன்மம் எடுத்தவன் அந்த கோர
ரூபத்தை விடுத்து நற்கதியை அடைவான்''
என்றது அந்த ஜீவன். 5 |
5. Also, 10 pindas (Food balls) should be placed
in the conch shell with milk used for ceremonial ablution of the deity
(abishek). Again one should bathe, Vrishorsargam, perform Pada Puja
(Homage to the feet of Vedic Brahmin) to those who have studied the
Vedas and do 33 types of charity. By doing this, the person who took a
dead birth will leave that terrible form and attain salvation," said the
living entity. |
|
இதைக் கேட்ட பப்ருவாகனன் மனம் நெகிழ்ந்து,
தான் நிச்சயம் நாராயண பலியைச் செய்து அந்த ஆன்மாவுக்கு நற்கதி கிடைக்க வகை
செய்வதாக வாக்களித்தான். அடுத்த கணம் அந்த பிரேத
ஜன்மம் மறைந் தது. அதேவேளையில்,
அரசனைத் தேடிக்கொண்டு அவன் படைகள் அங்கே வந்தன.6A
மன்னனும் அவர்களோடு தன் நகருக்குச் சென்று அங்கே பிரேத ஜன்மம் சொல்லியபடி
அதற்குச் செய்ய வேண்டிய கர்மா காரியங்க ளைச் செய்தான். இதனால் அந்தப் பிரேத
ஜன்மம் நற்கதி அடைந்தது. இந்தக் கதையை மகாவிஷ்ணு கருடனுக்குக் கூறியதாகச்
சொல் கிறது கருடபுராணம். யமன், இந்த உலகத்தில் தோன்றும் உயிர்களைக் கவரும் பொறுப்பை ஏற்று அவர்களின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கும் அதிகாரத்தைப் பெற் றான். ஜைமினி என்கிற நகரத்தில் அமர்ந்து தர்ம பரிபாலனம் செய்யத் தொடங்கினான். 6C |
6A. Hearing this, Pabruvahana was deeply moved
and promised that he would definitely perform the Narayana sacrifice and
bring good fortune to that soul. The next moment the corpse was gone.
Meanwhile, his troops came there in search of the king. 6B. The king went with them to his own city and performed the karma as instructed by the dead body. Thus the corpse attained salvation. According to Garuda Purana, Lord Vishnu narrated this story to Garuda. 6C. Yama, the god of death assumes the responsibility of attracting the living beings in this world and acquires the power to punish them according to their sins and merits. He sat in a city called Jaimini and started administering dharma. |
|
ஆனால் யமனுக்கு சில நாள்களிலேயே அந்தப் பொறுப்பில் தடுமாற்றம் ஏற்பட்டது.
அவனால் முழுமையாக உயிர்களின் பாப புண்ணியங்களை அறியமுடியவில்லை. அப்போது
அவன் பிரம்ம தேவரை சந்தித்துத் தன் பிரச்னையை எடுத்துரைத்துத் தனக்கு
உதவுமாறு வேண்டிக்கொண்டான்.
7A
அப்போது பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து
அதைப் பன்னிரு துண்டுகளாக வெட்டிப்போட்டார். பிறகு அவற்றை நோக்கித் தன்
அருளை வழங்க,
நீண்ட கண்களை உடைய அழகான பன்னிரு குமாரர்கள் தோன்றினர். 7B
|
7A. But Yaman stumbled in that position within a
few days. He could not fully understand the sins and virtues of living
beings. He met Lord Brahma and requested him to help him by explaining
his problem. 7B. Then Brahma took a Darpa grass ( Desmostachya bipinnata) and cut it into twelve pieces. Then addressing them and bestowing His blessings, twelve beautiful sons with long eyes appeared. |
|
``யமதேவா,
இவர்கள் உயிர்களின் வாக்கு,
மனம்,
செயல் ஆகியவற்றால் புரியும் பாவங் கள் அனைத்தையும் அறிய வல்லவர்கள்.
உயிர்கள் வாழும் காலத்தில் செய்யும் பாவங்களை அறிந்து அவற்றை உனக்குத்
தெரிவிப்பார்கள். அதற்கேற்ப,
யமபுரிக்கு வரும் ஆன்மாக்களுக்குத் தண்டனையைக் கொடுப்பாயாக''
என்று கூறினார். அதுமுதல் 12
சிரவணர்களும்
யமனுடன் இருந்து நீதி பரிபாலனம் செய்ய உதவினர் என்கிறது கருடபுராணம். 8
|
8. "O Yamadeva, they are capable of knowing all the sins committed by living beings in speech, mind and deed. They will know the sins committed by living beings while they are alive and will tell you about them. Accordingly, punish the souls who come to Yamapuri.' From then on, the 12 Sravanas were with Yama and helped in the administration of justice, says Garuda Purana. |
|
இந்த 12 சிரவணர்களை வாழும் போதே நினைத்து அவர்களின் பெயர்களைச் சொல்லி
தானம் செய்யும் வழக்கமும் உண்டு. அவ்வாறு செய்பவர்களுக்கு சகல புண்ணிய
பலன்களும் உண்டாகும். அவ்வாறு சிரவணர்களை நினைத்து தானம் செய்தவர்கள்
பாவத்திலிருந்து விலகி இருப்பார் கள். அவர்களுக்கு யமபுரி அச்சம் தரும்
நகரமாக இருக்காது. 9 |
9. It is also customary to remember these 12 Sravanas while they are alive and donate in their names. Those who do so will get all the meritorious benefits. Those who donate in remembrance of Sravanas will be free from sin. For them, Yamapuri will not be a city of fear. |
|
மரணத்துக்குப் பின் கட்டை விரல் அளவே கொண்ட உயிரானது பிண்ட சரீரம் பெற்று
யம லோகம் செல்லும் என்பதை அறிந்தோம். பாவிகளாக இருக்கும்பட்சத்தில்
அவர்களின் ஆன்மா கொடுமையானதும் துயரங்கள் நிறைந்ததுமான வழியில் செல்லும்.
ஆனால் புண்ணியம் செய்த ஆன்மாக்கள் இந்தத் துன்பங்களை அனுபவிக்க
வேண்டியதில்லை. 10 |
10. We have learnt that after death, a life the size of a thumb will take up a body and go to Yama Loka. If they are sinners, their souls will follow a path full of hardship and misery. But pious souls need not suffer these miseries. |
|
வாழும் காலத்தில் அறம்,
பொருள்,
இன்பம்,
வீடு
ஆகிய நான்கு பொருள்களையும் அறிந்து தர்ம மார்க்கத்தில் வாழ்ந்து மறைந்த
ஒருவனின் ஆன்மாவை,
அவன் செய்த தர்மங்களே சுமந்து சென்று வைவஸ்வத பட்டணத்தில் கொண்டுபோய்ச்
சேர்க்கும். 11 |
11. The soul of a person who has lived in the path of righteousness and died knowing the four Dharmic paths of virtue, wealth, pleasure and liberation during his lifetime, will be carried to the city of Vaivasvata by the good Karmas ( good merits) he has done. |
|
பொன்,
பொருள் ஆகியவற்றைப் பெரியோர்களுக்கும் சான்றோர்களுக்கும்
தானமாகக் கொடுத்தவரை விமானம் வந்து அழைத்துச் செல்லும். 12 |
12. The plane will come and take away the person who has donated gold and wealth to the elders and the noble. |
|
பெரியோர்கள் கேட்டவற்றைக் கொடுத்து மதித்து நடத்தி அவர்களின் நியாயமான
ஆசைகளை நிறைவேற்றியவர்ளைப் பறக்கும் குதிரை ஒன்று வந்து அழைத்துச்
செல்லும். வேத சாஸ்திரங்களை அறிந்து அதன்படி வாழ்ந்த வர்களை தேவ விமானம்
வந்து அழைத்துச் செல்லும். அவர்கள் யமபுரிக்கு ஆனந்தமாகச் செல்வார்கள். 13 |
13. A flying horse will come and take away those who have given and respected what the elders asked for, and fulfilled their legitimate desires. The celestial plane will come and take those who know the scriptures and live according to them. They will go to Yamapuri happily. |
|
இவ்வாறு ஆன்மா யமபுரியை அடைந்ததும் தன் பிண்ட சரீரத்தை விடுத்து கட்டை
விரல் அளவுகொண்ட சரீரம் பெற்று யமபுரிக்கு வெளியே இருக்கும்
வன்னிமரத்தின் நிழலில் தங்கியிருக்கும். அந்த
ஆன்மா புண்ணியம் செய்த ஆன்மாவாக இருந்தால் யமகிங்கரர்கள்
அதன் வருகை குறித்து யமதருமனுக்கு விரைவாகச்
சொல்வார்கள். ஆன்மா கர்ம சரீரம் அடைந்து யமனின் அரண்மனைக்குச் செல்லும். 14
A
யமன்,
சித்திர குப்தன் மூலம் அதன் பாப புண்ணியக் கணக்குகளை அறிந்து ஆன்மா அடைய
வேண்டிய தண்டனை அல்லது பலன்களை வழங்குவான். |
14A. When the soul thus reaches Yamapuri, it
leaves its body and takes on a body the size of a thumb and stays under
the shade of the Vanni tree (Indian Mesquit) outside Yamapuri. If that
soul is a pious soul, the Yamakingaras (Yama's messengers) will quickly
inform Yamataruman (Yama) of its arrival. The soul attains the karmic
body and goes to the palace of Yama. 14B. Yama, through Chitragupta (Yama's officer who records the good and evil deeds of human beings), will know its accounts of sins and virtues and bestow upon the soul the punishment or rewards that the soul should attain. Yamapuri will be cruel to those who have sinned. It is a beautiful city with a pleasant breeze to the virtuous. In the middle of it will be the palace of Yama. |
|
யமபுரியில் நரகங்களும் உண்டு. பலவித மான நரகங்கள் இருந்தாலும் முக்கியமாக
இருபத்தெட்டு நகரங்கள் உள்ளன. பாவம் செய்த ஜீவன்கள்,
யமபுரியின் தெற்கு வழியாக வந்து அவரவர் சேர வேண்டிய நரகத்தை அடைகிறார்கள்.
15A
பிறர் மனைவி,
குழந்தைகள்,
பொருள் இவற்றை அபகரித்தவர்கள் சென்று வீழும் இடம்,
`தாமிஸ்ர
நரகம்.'
15B
|
15A. There are hells in Yamapuri. There are many
different kinds of hells, but importantly there are twenty-eight cities.
The sinful souls come through the southern gate (route) of Yamapuri and
reach the hell to which they are destined. 15.B .The place where those who have snatched the wives, children and property of others go and fall is called 'Thāmisra Narakam'. 15C. If the husband or the wife broke fidelity in marriage, their resident hell is Anthāmisram. The people who usurped property of others with force go to Rauravam hell. |
|
மகா ரௌரவம் என்கிற நரகம் ஒன்று உண்டு. அங்கே கொடூரமான மான்கள்
நிறைந்திருக்கும். பாவிகளை அவை தம் கொம்பினால் குத்தித் துன்புறுத்தும்.
தன் நாவின் சுவைக்காகப் பிற உயிர்களைத் துன்புறுத்துபவன் அடையும் நரகம்
கும்பீபாகம். பெரியோர்கள்,
பெற்றோர்,
ஆசிரியர் ஆகியோரை மதிக்காதவன் கால சூத்ரம் என்னும் நரகத்தில் வீழ்வான்.16 |
16. There is a hell called Great Rauravam. It is full of ferocious deer. They will stab sinners with their horns and persecute them. Kumbhībhāga is the hell for one who harms other beings for the palatal pleasure. One who does not respect elders, parents and teachers will fall into the hell of the Kāla Sūtram. |
|
இப்படிப் பல நரகங்கள் யமபுரியில் உள்ளன. அதை அடையும் ஜீவன்களின் நிலை என்ன?
யாரெல்லாம் மோசமான நரகத்தில் வீழ்வார்கள் என்பது குறித்து விரிவாகப்
பேசுகிறது கருடபுராணம். 17
- தொடரும்... |
17. There are many such hells in Yamapuri. What
is the condition of these living entities that attain them? Garuda
Purana talks in detail about who will fall into the worst hell. Continued |