| GP08TheSoulsDestinedToHell | |
| Machine translation was edited for clarity. | |
|
கருட புராண ரகசியங்கள் 8: யமலோகமும் சொர்க்கமாக மாறும்! இல.சைலபதி 3 Min Read தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க கருட புராண ரகசியங்கள்: யமதர்மனின் அரண்மனைக்குத் தென் திசையில் சில நரகங்கள் உண்டு. யம கிங்கரர்கள் பாவம் செய்த ஆன்மாக்களை அங்கே வைத்துத் துன்புறுத்துவார்கள். Published:08 Jul 2024 4 PMUpdated:08 Jul 2024 4 PM கருட புராண ரகசியங்கள் Join Our Channel 0Comments Share |
Garuda Purana Secrets 8: Yamaloka will also become
heaven! L. Shailapathy Sakthi Vikatan Read other episodes of the series Secrets of Garuda Purana: There are some hells in the south of Yamadharma's palace. The Yama Kinkaras will place sinful souls there and persecute them. Published: 08 Jul 2024 4 PMUpdated:08 Jul 2024 4 PM Secrets of Garuda Purana Join Our Channel 0Comments Share |
| 1. கருட புராண ரகசியங்கள்:
பொதுவாக திசைகளில் தென்திசை யமதிசை. தென்திசைக்கும் நிருதி திசைக்கும்
நடுவில் அமைந்துள்ளது யமலோகம் என்கிறார் பகவான் விஷ்ணு. தேவர்கள், அசுரர்
என யாராலும் அழிக்கப்பட முடியாத சிறப்பினை உடையது அந்த லோகம். சுமார் நூறு
யோஜனை பரப்பளவு கொண்ட யமலோகம் இருபத்தைந்து யோஜனை உயரம் உள்ளது. 1 |
1. Secrets of Garuda Purana: Generally the southern direction of the directions is Yama. Lord Vishnu says that Yamaloka is situated between the south and the direction of Niruti (the S.W. quarter). That world has the distinction of being destroyed by Devas and Asuras. Yamaloka has an area of about 100 yojanas ( One Yojana = four krosas; 1 krosa = two miles and a quarter) and is 25 yojanas in height. |
| 2. கருட புராண ரகசியங்கள் பாவிகள் கண்டு நடுங்கத்தக்க அந்த யமலோகம், புண்ணியாத் மாக்களுக்கு ஆனந்தமயமாகக் காட்சி கொடுக்கும். மெல்லிய நறுமணப் பூங்காற்று வீசும். யமனின் அரண்மனையின் ஒரு மண்டபத்தில் எப்போதும் ஆடலும் பாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அங்கே யமதூதர்கள் பணி வுடன் நிற்பார்கள். 2 |
2.
Secrets of Garuda Purana That Yamaloka (The World of Yama), which the sinners tremble at the sight of it, will appear blissful to the pious. There will be a gentle fragrant breeze. In one of the halls of Yama's palace there was always dancing and singing. The Yamadutas (Yama's messengers) will stand there humbly. |
| 3. அரண்மனையின் நடுவில் யமனின் தர்பார் அமைந்திருக்கும். அந்த தர்பாரின் நடுவில் மிகப்பெரிய சிம்மாசனம் ஒன்றில் கம்பீரமாக அமர்ந்திருப்பார் தர்மராஜன். அருகிலேயே சித்ரகுப்தனின் அரண்மனை உண்டு. அவர்தான் ஆன்மாக்களின் பாவ புண்ணியக் கணக்குகளைத் தொகுத்து எழுதி யமனுக்குத் தெரிவிப்பார். இதில் எள்ளளவும் பிழை இருக்காது. 3 | 3. Yama's durbar (Royal court) is located in the middle of the palace. Dharmarajan (Yama) will be seated majestically on a huge throne in the middle of the durbar. Chitragupta's palace is nearby. It is he who compiles the accounts of sins and virtues of souls and informs Yama. There will be no error in this. |
| 4. சித்ரகுப்தனின் அரண்மனைக்குக் கிழக்கே சில கோட்டைகள் அமைந்திருக்கும். அந்தக் கோட்டைகள் அனைத்திலும் சகல விதமான நோய்களும் வாசம் செய்யும். கிழக்கு திசையில் உள்ள கோட்டையில் ஜுரம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கும். மேற்கு திசையில் சூலை தொடர்புடைய நோய்கள் குவிந்திருக்கும். 4 | 4. Some forts are located to the east of Chitragupta's palace. All kinds of diseases will reside in all those fortresses. The fort in the easterly direction will have diseases related to fever. Diseases related to joint diseases are concentrated in the west direction. |
| 5. மேற்கே அஜீரணம் தொடர்பான நோய்கள் வாசம் செய்யும். வடக்குக் கோட்டையில் கடுமையான வயிற்றுவலி குடியிருக்கும். இப்படி சகல விதமான வியாதிகளுக்கும் அங்கே கோட்டைகள் உண்டு. தற்காலத்தில் புதிய புதிய நோய்கள் உருவாகின்றன. அவற்றுக்கும் யமபுரியில் கோட்டைகள் உருவாக்கியிருக்கலாம். அல்லது ஏற்கெனவே இருக்கும் பிரிவுகளில் சேர்ந்திருக்கலாம். 5 | 5. Indigestion related diseases will reside in the west. In the Northern Fortress harbors severe stomachache. There are fortresses for all kinds of diseases. Nowadays new diseases are emerging. They may also have built forts in Yamapuri. Or join an existing category. |
| 6. இந்த வியாதிகள் எல்லாம் யமதர்ம ராஜனின் உத்தரவுக்காகக் காத்திருக்கும். ஓர் உயிர் மரணம் அடையும் தருணம் அடையும் போது அது எப்படிப்பட்ட வியாதியால் மரணமடைய வேண்டும் என்பது அதன் விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி யமன் அந்தக் குறிப்பிட்ட வியாதியை ஏவ, அது சென்று அந்த மனிதனைத் தாக்கி மரணம் சம்பவிக்கக் காரணமாக அமையும். 6 | 6. All these diseases will wait for the orders of King Yamadharma. When a soul is about to die, the disease from which it should die is specified in its destiny. Accordingly, Yama invokes that particular disease, which will go and attack that person and cause death. |
| 7. மரணம் அடையும் ஜீவன்கள் ஓர் ஆண்டு காலம் பயணம் செய்தி யமபுரியை அடையும். அவர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப யமன் நரகத்துக்கோ சொர்க்கத்துக்கோ அதை அனுப்புவார். 7 | 7. Living beings who die will travel for a year to reach Yamapuri. Yama will send it to hell or heaven according to their sins and merits. |
| 8. யமதர்மனின் அரண்மனைக்குத்
தென் திசையில் சில நரகங்கள் உண்டு. யம கிங்கரர்கள் பாவம் செய்த ஆன்மாக்களை
அங்கே வைத்துத் துன்புறுத்துவார்கள். அவற்றைக் கடுமையாக அடிப்பார்கள்.
இரும்பாலான சில ஆயுதங்களைக் கொண்டு சித்திர வதை செய்வார்கள். நெருப்பில்
இட்டு வாட்டுவார்கள். 8 |
8. There are some hells (here, Torture Chambers) to the south of Yamadharma's palace. The Yama’s Kinkaras ( atttendants) will place sinful souls there and persecute them. They beat them hard. They would torture them with some iron weapons. They will burn them with hot-iron rods. |
| 9. மானுட சரீரமாக இருந்தால் அதற்கு அழிவு உண்டு, மரணம் நிகழ்ந்து விடும். நரக வாதையும் தீர்ந்துவிடும். ஆனால் நரகத்தில் ஜீவன்கள் பெற்றிருப்பது கர்ம சரீரம். அது, தான் செய்த கர்மாக்களை அனுபவிப் பதற்காகக் கொடுக்கப்பட்டது. எனவே வலியும் கூச்சலும்தான் அங்கே எஞ்சியிருக்குமே தவிர, அதற்கு முடிவே இருக்காது. 9 | 9. If it is a human body, it will be destroyed and ends in death. The plague of hell will be over. But in hell the living entities have a karmic body, which was given to enjoy or suffer the karma he had committed. So, there will be only pain and screaming, and there will be no end to it. |
| 10. சிலர் கடன் வாங்கும்போது, சந்தோஷமாக வாங்குவார்கள். ஆனால் திருப்பிச் செலுத்தும்போது வருந்துவார்கள். சிலரோ திருப்பிச் செலுத் தாமல் எப்படி ஏமாற்றலாம் என்று பார்ப்பார்கள். வசதி இருந்தும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது பாவம். அப்படிப் பட்டவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். பிறர் பொருளைத் திருட்டுத் தனமாக அனுபவிப்பவர், அபகரிப்பவர் நிச்சயம் நரகத்தில் வீழ்வார்கள். 10 | 10. When some people borrow money, they are happy to borrow. But they will regret it when it comes to repayment. Some people will see how they can cheat without paying back. It is a sin not to repay a loan despite having the means to repay. Such people will fall into hell. Whoever enjoys the property of others stealthily and grabs it will surely fall into hell. |
| 11. இந்த உடல் உயிருடன் இருக்கும்போது யாரும் பாவம் குறித்துச் சிந்திப்பதில்லை. புலன் இன்பங்களை மட்டுமே எண்ணிப் பாவம் செய்யத் துணிவார்கள். அதிலும் அடுத்தவர் மனைவியை, கணவனை இச்சித்து அனுபவிப்பவர்கள் நரகத்தில் அடையும் தண்டனை மிகவும் பயங்கரமானது. 11 | 11. When this body is alive, no one thinks of sin. They dare to commit sin thinking of immoral pleasures. Those who enjoy illicit sexual pleasures with another man's wife or woman's husband will suffer terribly in hell. |
| 12. செப்பு போன்ற உலோகத்தால் ஆண் பெண் பதுமைகளைச் செய்து அவற்றை நெருப்பில் இட்டு பழுக்க வைத்திருப்பார்கள். யாரெல்லாம் மோகம் கொண்டு அடுத்தவர் மனைவியை கணவரை அனுபவித்தார்களோ அவர்கள் அந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள். 12 | 12. In that hell, male and female copper idols are fired up to a molten state. Whosoever either a man or a woman who consorted illicitly and lasciviously with the spouses of others, will be pushed into that hell. |
| 13. பெண் மோகம் கொண்ட ஆன்மாவோடு பழுக்கக் காய்ச்சிய பெண் பதுமையையும் ஆண் மோகம் கொண்டு தவறு செய்த ஆன்மாவோடு பழுக்கக் காய்ச்சிய ஆண் பதுமையையும் சேர்ப்பார். அப்போது அந்த வெப்பம் தாங்காமல் ஆன்மாக்கள் அலறும். அந்த அலறல் முடிவற்றதாக இருக்கும். 13 | 13. The soul with female infatuation will be joined to a red-hot female idol. The soul with male infatuation will be joined to a red-hot male idol. The erring souls holler and cry endlessly, unable to tolerate the fiery heat in this hell. |
| 14. எந்த உடலை சுகம் என்று நினைத்துத் தவறு செய்தேனோ அதேபோன்ற உடல் இப்படிப்பட்ட வேதனைக்குக் காரணமாகி விட்டதே’ என்று அந்த ஆன்மாக்கள் அழுது புலம்பும். பூமியில் வாழும் காலத்தில் இதுகுறித்து யாரும் எடுத்துச் சொல்லவில்லையே என்று வருந்தும். ஆனால் அது உண்மையில்லை. எல்லா அற நூல்களும் இதுகுறித்து எச்சரித்திருக்கின்றன. 14 | 14. Those souls will cry and lament, ‘’the body that was the mistaken source of pleasure has become the cause and source of torture.' It is a pity that no one has told you about this during your life on earth. But that's not true. All the scriptures have warned about this. |
| 15. எனினும், இன்ப வேட்கையில் அவற்றை மறந்து, ‘அவை எல்லாம் கட்டுக்கதைகள்’ என்று சொல்லிப் பலரும் தவறு செய்கிறார்கள். எனவேதான் பகவான் விஷ்ணு கருடனுக்கு இதை எடுத்துச் சொல்லி இதைக் கேட்கும் அல்லது வாசிக்கும் யாரும் இத்தகைய பாவத்தைச் செய்யாமல் வாழ்ந்து மரணத்துக்குப் பின் நல்ல நிலையை அடைய வேண்டும் என்று சொல்கிறார். 15 | 15. However, many people make the mistake of forgetting them in their lust for pleasure and saying, 'They are all myths'. That is why Lord Vishnu explains this to Garuda and tells him that anyone who hears or reads this should refrain from committing such a sin and attain a good state after death. |
| 16. இந்த உலகில் பிறக்கும்
முன்பாக கர்ப்பத்தில் வசிக்கும்போதே ஒருவனின் ஆயுள் நிர்ணயம்
செய்யப்பட்டுவிடுகிறது. அவன் தன் வாழ்வில் என்ன படிப்பான்... யாரைத்
திருமணம் செய்து கொள்வான், அவனுக்கு எத்தனை குழந்தைகள்... அவை எப்படி
வாழும்... எதை எதை எல்லாம் அவன் அனுபவிப்பான்... எப்படிப்பட்ட யோக வாழ்வு
அவனுக்கு வாய்க்கும்... அவன் எப்படி மரணம் அடைவான்... என்று அவனின்
ஒட்டுமொத்த வாழ்வும் நிர்ணயமாகி அவன் விதியை பிரம்மா எழுதிவிடுவார். அதன்பிறகுதான் அந்த ஆன்மா இந்த பூமியிலேயே பிறக்கிறது. எனவே ஒருவன் அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கவும், நல்ல வாழ்க்கை வாழவும், தீர்க்காயுளுடன் இருக்கவும், நல்ல சுகங்களை அனுபவிக்கவும் விரும்பினால், அதற்கேற்ப நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். நல்ல கர்மாக்களைச் செய்ய வேண்டும். அவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லும் நூலாகவே கருடபுராணம் திகழ்கிறது. 16 |
16.
A person's life span is fixed while living in the womb before he is born
into this world. What will he study in his life... Who will he marry,
how many children will he have? How will they live... What will he
enjoy... What kind of yogic life will he get? How will he die... His
whole life will be decided, and his destiny will be written by Brahma. Only then is that soul born on this earth. Therefore, if one desires to be born into a good family in the next birth, to lead a good life, to live a long life, and to enjoy good pleasures, one should accordingly practice virtues. One should stay away from sins. You must perform good karmas. Garuda Purana is a book that explains all of them. |
| 17. கருடன் தன் பல்வேறு
சந்தேகங்களை பகவான் விஷ்ணு முன் வைக்கிறார். அப்படி அவர் வைக்கும்
கேள்விகளில் முக்கியமானது, “பகவானே! இந்த உடல் எப்படி உருவாகிறது என்பது
குறித்து எனக்குச் சொல்ல வேண்டும்” என்பதாகும். பகவான் இந்தக் கேள்விக்கு விரிவான விடை சொன்னார். 17 |
17. Garuda puts forth his various doubts before Lord Vishnu. One of the most important questions he puts is, "Bhagavan! Tell me about how this body is formed." |
| 18. “கஸ்யபரின் மகனே! நீ கேட்ட விஷயத்தை விரிவாகச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்பு சில ரகசியங்களை உனக்குச் சொல்ல விரும்பு கிறேன். அதைத் தெரிந்து கொள்ள நீ ஒரு கதையைக் கேட்க வேண்டும். இதில் மாபெரும் உபதேசம் ஒன்று உள்ளது. 18 | 18.
The Lord gave a detailed answer to this question. "O son of Kasyapa! I will tell you in detail what you asked. But first, I would like to tell you some secrets. You'll have to listen to a story to find out. There is a great sermon in this. |
| 19. இந்தப் பிரபஞ்சத்தில் அனைவருக் கும் முக்கியமானவர் குரு. பரமாத்மாவை அடைய குருவே வழிகாட்டுவார். குருவின் அனுகிரகம் இல்லாமல் ஒருவர் எது செய்தாலும் அது வெற்றிபெறாது, முழுமை பெறாது. 19 | 19. Guru is the most important person in the universe. The Guru will guide you to the Supreme Soul. Whatever one does without the grace of the Guru will not be successful or complete. |
| 20. மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர் களுக்கும் குருவே பிரதானமானவர். தேவர்களின் குரு பிரகஸ்பதி. தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்பட வேண்டிய குருவை அவமதித்தால் உண்டாகும் சாபம் பயங்கர மானது. அப்படி ஒரு சாபத்துக்கு ஆளானான் இந்திரன். 20 | 20. The Guru is the most eminent person not only of human beings but also of the demigods. Brihaspati is the Guru of the Devas. The curse of insulting a guru who is to be revered equal to a deity is terrible. Indra was cursed like that. |
| 21. இந்திரன் தேவர்களின் தலைவன். பதவி தரும் ஆணவத்தில் அவன் பல நேரங்களில் தவறிழைப்பது உண்டு. 21 | 21. Indra is the lord of the gods. He often erred in the arrogance of his position. |
| 22. ஒரு நாள் அவன் தேவ சபையில் அமர்ந்திருந்த தருணம், தேவ கன்னிகைகளான ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். கந்தவர்களின் கானம் அந்த சபையை நிறைத் திருந்தது. அதைத் தன்னை மறந்து ரசித்துக் கொணடிருந்தான் இந்திரன். 22 | 22. One day when he was sitting in the assembly of the gods, the celestial virgins Rambha, Urvashi and Menaka were dancing. The song of the Gandharvas filled the assembly. Indra was enjoying it forgetting himself. |
| 23. அப்போது அவன் சபைக்கு பிரகஸ்பதி வந்தார். எப்போதும் குரு நம் இருப்பிடம் தேடி வந்தால் முதலில் அவருக்குப் பாத பூஜை செய்து அவரை நம் இருப்பிடத்துக்குள் அழைக்க வேண்டும். 23... | 23. At that time Brihaspati came to his assembly. If the Guru comes to our abode, we should always worship His feet first and invite Him to our abode. |
| 24. அவருக்கு உயரிய ஆசனம் அளித்து ஆசமனம் முதலான உபசாரங்கள் செய்ய வேண்டும். பிறகு அவருக்கு உண்ண உணவு அளித்து, அதன் பிறகு அவர் வரவின் நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் மரபு. 24 | 24. He should be given a high seat and given Ācamaṉam (offering water) etc. Then feed him and then know the purpose of his visit. This is the tradition. |
| 25. இந்திரனோ பிரகஸ்பதி வந்ததையே கவனிக்கவில்லை. அவர் ஓரிரு முறை அவனை அழைத்தும் திரும்பிக்கூடப் பார்க்காமல் இன்பத்தில் மூழ்கியிருந் தான். அதனால் குரு பகவானுக்குக் கோபம் உண்டானது. 25 | 25. Indra did not notice Brihaspati's arrival. Brihaspati called out to him a couple of times and Indira did not even look at him. This made Guru Bhagavan angry. |
| 26. ஆனால் இந்திரனோ
நிகழப்போகும் ஆபத்துகளை உணராமல் ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான்! 26 - தொடரும் |
26.
But Indra was so immersed in dance and music, unaware of the impending
dangers! -Continue. |