| GP09PastLifeKarma | |
| The machine translation was edited for clarity. | |
| கருட புராண ரகசியங்கள் - 9
கருவில் பூர்வ ஜன்ம கர்மா இணைவது எப்போது தெரியுமா! இல.சைலபதி கருட புராண ரகசியங்கள்: ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்கிற நாபியின் மூலத்திலிருந்து பூர்வ ஜன்ம கர்மாக்கள் வந்து சேரும். பத்தாவது மாதத்தில் பிறப்பு நிகழும். Published:22 Jul 2024 2 PMUpdated:22 Jul 2024 2 PM கருட புராண ரகசியங்கள் Join Our Channel 3Comments Share |
Secrets of Garuda Purana - 9 Do you know when Purva Janma (Past life)
Karma joins the embryo in the womb? L. Shailapathy 4 Min Read Sakthi Vikatan Garuda Purana Secrets: In the ninth month, the karmas of the previous birth will come from the source of the navel called Suzhimunai (Whorl Point). Birth occurs in the tenth month. Published:22 Jul 2024 2 PMUpdated:22 Jul 2024 2 PM Secrets of Garuda Purana Join Our Channel 3Comments Share |
| 1. கருட புராண ரகசியங்கள்: குரு நம் இல்லம்தேடி வரும்போது அவரை வரவேற்க வேண்டியதும் அவருக்கு மரியாதை செய்ய வேண்டியதும் அவசியம். இந்த உலகில் நம் குரு யார்? நமக்கு ஏதேனும் கற்பித்தவராக இருக்கலாம். நற் கருத்துகளைச் சொல்பவராக இருக்கலாம். | 1. Secrets of the Garuda Purana: When the Guru comes to our home, it is important to welcome and respect him. Who is our Guru in this world? It may be someone who taught us something or one who imparts good ideas. |
| 2. கருட புராண ரகசியங்கள். நம் வீட்டுக்கு வந்து சடங்குகளைச் செய்துகொடுக்கும் வேதியராகவும் இருக்கலாம். இந்த வாழ்வில் கடைத்தேற ஆன்மிக வழியைக் காட்டி நம்மை அதில் அழைத்துச் செல்பவராகவும் இருக்கலாம். அப்படி நமக்கு குருவாக அமைந்தவரை வணங்க வேண்டியது, நம் அனைவரின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறும்போது நம்மைப் பாவம் பீடிக்கிறது. | 2. Garuda Purana Secrets: A Vedic scholar may come to our house to perform rituals, or it may be someone who guides us on the spiritual path to salvation at the end of this life. It is our duty to worship the one who is our Guru. When we neglect this duty, we invite sin upon ourselves. |
| 3. இந்திரன், சபையில் ஆடல்-பாடல் கண்டு மயங்கி இருந்தபோது, அந்த அவைக்கு பிரகஸ்பதி வந்தார். தேவகுருவை வணங்கி அவருக்கு உபசாரம் செய்து வரவேற்காமலும், ஓரிருமுறை அவர் அழைத்தும் அதைக் கேட்காமலும் அவமதித்தான் இந்திரன். மனம் வருந்தினார் குருபகவான். உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்த சில நாள்களில் இந்திரன் பதவிக்கு ஆபத்து வந்தது. அசுரர்கள் அவன் மேல் போர் தொடுத்தனர். இந்திரனின் செல்வாக்கும் சொல்வாக்கும் சரிந்தன. உடனே, இதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள பிரம்மாவை அணுகினான். பிரம்மா நடந்தவற்றைத் தன் ஞான திருஷ்டியால் கண்டு சொன்னார் |
3. Indra was captivated by the assembly’s
dance and song when Brihaspati arrived. Indra insulted Brihaspati by not
welcoming him, despite being called out twice. Distressed, Brihaspati
left. Soon after, the Asuras waged war on Indra, weakening his power and
influence. Seeking answers, Indra approached Brahma, who explained the
consequences through his spiritual perception. ஞான திருஷ்டி = ஞானதிருட்டி = Spiritual perception. |
| 4. “குருவை நீ அவமதித்ததால்தான் உனக்கு இந்த நிலை. எனவே நீ முதலில் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் ஆசிபெற்றால் உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றார். ஆனால் இந்திரனால் பிரகஸ்பதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மனவருத்தத்தில் இந்திரன் பார்வையில் படாதபடி மறைந்திருந்தார். | 4. "You are in this predicament because you insulted the Guru. If you find him and seek his blessings, you will receive absolution (விமோசனம்)." But Indra could not find Brihaspati, who was in deep anguish and had hidden himself from Indra’s sight. |
| 5. தேவர்களுக்கு குரு இல்லாத நிலை வருத்தத்தைத் தந்தது. தங்களுக்குரிய கிரியைகளைச் செய்ய, ஆசி வழங்க ஒரு குரு வேண்டும் என்று நினைத்தனர். மீண்டும் பிரம்மனை நாடித் தங்களுக்கு குரு மீண்டும் கிடைக்க ஆசி வழங்குமாறு வேண்டினர். | 5. The Devas were saddened that they no longer had a Guru. They believed they needed a Guru to perform rites and rituals and to receive blessings. They once again prayed to Lord Brahma to bless them with a Guru. |
| 6. அப்போது பிரம்மா, “தேவர் தலைவனே... உனக்கும் பிற தேவர்களுக்கும் குரு என்று ஒருவர் வேண்டும். பிரகஸ்பதி இல்லாத இந்தச் சூழலில் நான் உங்களுக்கு குருவாகும் தகுதி உடையவரைக் காட்டுகிறேன். அவரைப் பணிந்து குருவாக ஏற்று வழிபட்டு வாருங்கள். விரைவில் நலம் பெறுவீர்கள்” என்றார். | 6. Then Brahma said, "O Lord of the celestials... You and the other demigods need a Guru. In the absence of Brihaspati, I will show you someone qualified to be your Guru. Worship him as your Guru, and you will recover your wellness." |
| 7. பிரம்மாவால் புதிய குருவாக அடையாளம் காட்டப்பட்டவன், ஓர் அசுரன். த்வஷ்ட்டா என்பவரின் மகனான விஸ்வரூபன். மூன்று தலைகளை உடையவன். தவ வலிமையிலும் ஞானத்திலும் தேவர்களையும் மிஞ்சக் கூடியவன். தேவேந்திரன், `ஓர் அசுரனை குருவாக ஏற்பது எப்படி' என்று ஒருகணம் தயங்கினாலும் பிரம்மனே அடையாளம் காட்டியவர் என்பதால் வேறு வழியின்றி அவரைச் சென்று தரிசித்து தங்களுக்கு குருவாக இருக்குமாறு வேண்டிக்கொண்டான். | 7. The new Guru identified and recommended by Brahma was an Asura (demon) named Viswaroopan, the son of Tvashtā. He had three heads and possessed ascetic prowess and knowledge greater than even the gods. Devendra (Indra) hesitated briefly at accepting a demon as his Guru, but since Brahma had recommended him, he had no choice but to worship and pray to him. |
| 8. விஸ்வரூபனும் அதற்கு இசைந்தான். அன்றுமுதல் தேவர்களுக்கு குருவாக இருந்து நல்வழி காட்டினான். ஹோமங்களைச் செய்து தேவ லோகம் வளம்பெற வகை செய்தான். அப்போது ஒருசிலர் அவன் மேல் வெறுப்பு கொண்டனர். காரணம், அவன் ஹோமம் செய்யும்போது அசுர குலமும் சிறப்புற்று வாழ வேண்டி ஆகுதி கொடுத்தான் என்பதுதான். | 8. Viswaroopan agreed. From that day forward, he became the Guru of the Devas and guided them along the right path. He performed homas (oblations through fire) and brought prosperity to the celestial world. However, some people began to hate him because, while performing the homam, he offered Āguthi for the prosperity of the Asura tribe. Āguthi = oblation offered to a deity in consecrated fire with ghee, accompanied by incantations. |
| 9. இந்திரனுக்கு இந்தச் செய்தி எட்டியதும் கோபம் கொண்டான். கோபமே மோசமான விரோதி. விஸ்வரூபனே தனக்கு குருவாகத் திகழ்பவன் என்பதை மறந்தான் இந்திரன். தன்னிடம் இருந்த வஜ்ராயுதத்தை அவன் மீது ஏவினான். விஸ்வரூபனின் மூன்று தலைகளும் துண்டாயின. ஒருதலை காடையாக மாறியது. மற்றொரு தலை குருவியாக மாறியது. மூன்றாம் தலையோ கிச்சிலிப் பறவையாக மாறியது. | 9. When this news reached Indra, he became angry. Anger is the worst enemy. Indra forgot that Viswaroopa was his Guru and struck him with his thunderbolt. Viswaroopan's three heads were severed—one turned into a quail, another into a sparrow, and the third into a rattlebird. |
| 10. குருவைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாகி இந்திரனைப் பீடித்தது. இந்திரனின் சகல செல்வங்களும் நீங்கின. அவன் உடல் மெலிந்தது. நோய் பற்றியது. தன் இருப்பிடத்தை நீங்கி நிம்மதியின்றி அலையத் தொடங்கினான். தேவேந்திரனின் நிலை கண்ட தேவர்கள் வருந்தி பிரம்மாவை அணுகி இதற்கு விமோசனம் தருமாறு வேண்டினர். | 10. The sin of killing a Guru became Brahmahathi dosha (the sin of killing Brahma) and afflicted Indra. He lost all his wealth, his body grew thin, and he became diseased. He left his palace and wandered restlessly. Seeing Devendra’s plight, the Devas felt compassion and approached Lord Brahma, praying for salvation. |
| 11. “தேவேந்திரனைப் பிடித்த தோஷத்தைப் போக்க மூவரால் முடியும். மண், நீர் மற்றும் பெண்கள்... இந்த மூவரும் இந்திரனின் பாவத்தை ஏற்றுக்கொண்டால், அவனால் இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அடைய முடியும்” என்றார் பிரம்மா. | 11. Brahma said, "Three entities can remove the dosha (sin) that has afflicted Devendra—soil, water, and women. If these three accept Indra’s sins, he will be freed from this dosha." |
| 12. இந்திரனும் தேவர்களும்
மண், நீர், பெண் பூவரையும் நாடி இந்திரனின் பாவத்தைப் போக்குமாறு
வேண்டிக்கொண்டனர். அவர்கள் மூவரும் இதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர்.
“பாவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்களுக்கு என்ன கிடைக் கும்?” என்று
கேட்டனர். அதற்கு தேவேந்திரன், “எனக்கு நல்வழி காட்ட இருக்கும் உங்கள் மூவரிடமும் சேரும் தோஷம் மூன்று விதங்களில் கழியும். தண்ணீரில் பொங்கும் நுரையாகவும் மண்ணில் ஏற்படும் உவரா கவும் பெண்களுக்குப் பூப்பாகவும் தோஷம் கழியும். இந்த தோஷத்தை ஏற்பதால், பூமியில் வெட்டப்படும் மண் தானாக நிரம்பவும், எவ்வளவு நீர் இறைக்கப்பட்டாலும் தானாக சுரக்கவும், பெண்கள் பூப்பெய்தும் நாள் முதல் உண்டாகிக் கரு உருவாகும் தன்மை இருக்கும்வரை அவர்கள் கணவருடன் கூடிக் களிக்கவும் வரம் தருகிறேன்” என்றான் இந்திரன். |
12. Indra and the Devas prayed to the Earth,
water, and the female flower to wash away Indra’s sins. All three were
reluctant to accept them. "What will we gain by accepting sin?" they asked. Devendra replied, "The doshas you bear by helping me will be offset in three ways: the foam in the water, the salinity of the soil, and the flower of women. By accepting this dosha, I grant you a boon: soil dug from the Earth will automatically refill, water will be inexhaustible, and women may enjoy union with their husbands from the day they attain puberty until they are capable of bearing a child." पुष्प (puṣpa) = flower, blossom = menses. |
| 13.மூவரும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று தோஷத்தைப் பங்கிட்டுக்கொண்டனர்.
இந்திரன் தான் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றான். அதுமுதலே பெண்கள் ஒரு
கருவைத் தாங்கிப் பிள்ளைப் பேறு நிகழக் காரணமானார்கள். இவ்வாறு முன்பு நிகழ்ந்த நிகழ்வினை கருடனுக்கு எடுத்துரைத்தார் பகவான் விஷ்ணு. மேலும் பிறப்பின் ரகசியத்தையும் தொடர்ந்து விவரித்தார் பகவான். கருட புராண ரகசியங்கள். |
13. All three agreed to Indra’s request and
shared his dosha. Indra regained everything he had lost. Since then,
women have been able to conceive and give birth. Thus, Lord Vishnu narrated these past events to Garuda and continued to explain the secret of birth. |
| 14. “ஒரு பெண் மாதவிலக்காகி மூன்று நாள்கள் ஓய்வெடுத்து, நான்காம் நாள் தூய நீராடி அவள் குடும்பப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகிறாள். அன்றிலிருந்து ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரை அதாவது ஆகிய இரட்டைப்படை நாள்களில் தன் கணவனோடு அவள் கூடினால், ஆண் குழந்தை பிறக்கும். என ஒற்றைப்படை நாள்களில் கூடினால் பெண் குழந்தை பிறக்கும். மேலும் ஆணின் சுக்லமும் பெண்ணில் ஸ்ரோணிதமும் கலக்கும்போது எவரின் தன்மை வீரியமாக இருக்கிறதோ அவரின் பாலினத்திலேயே குழந்தை பிறக்கும். ஒருவேளை இரண்டும் சமமாக இருக்க நேர்ந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்ததாக அமையும். |
14. "A woman menstruates and rests for three
days. On the fourth day, she takes a purifying bath and resumes her
household duties. From the sixth to the eighteenth day—specifically the
6th, 8th, 10th, 12th, 14th, 16th, and 18th days—if she cohabits with her
husband, a male child will be born. On the odd days—7th, 9th, 11th,
13th, 15th, and 17th—a girl child will be born. Furthermore, when the Sukla (semen) of the man and the Sronita (menstrual blood) of the woman mix, the gender of the child will follow the one with the stronger character. If both are equal, the child will belong to the third gender." |
| 15. கரித்தரிக்கும் நாளில் இருந்து ஐந்தாம் நாள் கருப்பைக்குள் ஒரு குமிழ் தோன்றும். அதுவே பதினான்காம் நாளில் சிறு தசையாக வளரும். ஒரு மாத காலத்தில் அது வளர்ந்து பஞ்ச பூதத்தின் சேர்க்கை நிகழ்வும். இரண்டாவது மாதத்தில் கருவில் தோல் உண்டாகும். மூன்றாவது மாதத்தில் நரம்புகளும் நான்காவது மாதத்தில் ரோமங்களும் உள் வடிவமும் உண்டாகும். | 15. On the fifth day after conception, a bubble appears in the uterus. By the fourteenth day, it grows into a small muscle. Within a month, it develops through the union of the Pancha Bhuta (the five elements: Earth, Water, Fire, Air, and Space). In the second month, the fetus's skin forms. In the third month, nerves develop. In the fourth month, hair and internal organs begin to take shape. |
| 16ஐந்தாவது மாதத்தில் காது, மூக்கு, மார்பு ஆகியன தோன் றும். ஆறாவது மாதத்தில் அந்தக் கருவிற்குக் கழுத்து, தலை, பற்கள் உண்டாகும். ஏழாவது மாதத்தில் குழந்தையின் பிறப்புறுப்புகள் உண்டாகும் எட்டாவது மாதத்தில் அனைத்து அவயவங்களும் உண்டாகும். ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்கிற நாபியின் மூலத்திலிருந்து பூர்வ ஜன்ம கர்மாக்கள் வந்து சேரும். பத்தாவது மாதத்தில் பிறப்பு நிகழும். | 16. In the fifth month, ears, nose, and chest appear. In the sixth month, the fetus develops the neck, head, and teeth. In the seventh month, the genitals form. In the eighth month, all organs are completed. In the ninth month, past life karma enters the fetus through the suṣumnā Nāḍi from the navel. Birth occurs in the tenth month. |
| 17. இவை அனைத்தும் பஞ்சபூத சம்பந்தத் தினாலேயே உண்டாகின்றன. தோலும், எலும்பும், ரோமமும், சதையும், நகமும் மண் அம்சமாகவும்; உமிழ்நீர், சிறுநீர், சுக்லம் ஆகியன நீரின் அம்சத்தோடும்; பசி, தாகம், துக்கம், சோம்பல் ஆகியன நெருப்பின் அம்சத்திலும்; விருப்பம், கோபம், பயம், வெட்கம், மோகம் ஆகியன வாயுவின் அம்சத்திலும்; சப்தம், எண்ணம், கேள்வி ஆகியன ஆகாய சம்பந்தத்திலும் உண்டாகின்றன. |
17. All of this results from the interaction
of the five elements: . Saliva, urine, and Suklam (vital fluid) are of Water; . Hunger, thirst, sorrow, and sloth belong to Fire; . Desire, anger, fear, shame, and infatuation are of Air; . Sound, thought, and questioning arise from Ether. |
| 18. மனித உடம்பில் இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, கஜசிம்மஹி, பூஜை, யச்சு, அலாபு, குடு, விசாகினி ஆகிய பத்து நரம்புகளும் உடலின் முக்கிய நாடிகளகத் திகழ்கின்றன. இவையே நாம் உண்ணும் உணவை அந்தந்தப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று உடலை இயங்கச் செய்கின்றன. |
18. The ten Nāḍis of the human body are: Ida (left), Pingala (right), Suṣumnā, Gandhari, Gajasimhahi, Pooja, Yachu, Alapu, Kudu, and Visakhini. These channels carry nourishment and maintain bodily functions. |
| 19. வைணதேயா... ஓர் உயிர் கர்ப்பத்தில் இருக்கும்போதே அவனின் ஆயுள், அறிவு, புகழ், செல்வம், கல்வி, வேலை என அனைத்தும் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. அதுவே விதியாகி அவனோடு சேர்ந்து ஜனனம் கொள்கிறது. எனவே, ஒருவன் தான் மறுபிறவியில் நல்ல வாழ்வை அடையவேண்டும் என்று விரும்பினால் வாழும்போதே அதற்குரிய நற்காரியங்களைச் செய்து வாழவேண்டும். | 19. Vaishnadeya: When a soul is in the womb, its life, knowledge, fame, wealth, education, and karma are all determined—this becomes its destiny. Therefore, if one desires a good life in the next birth, one must perform good deeds in the present life. |
| 20 பாவத்தில் இருந்து விலகி யிருக்க வேண்டும். நல்ல செயல்களைச் செய்து அறத்தின் வழி நிற்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அவன் மறுபிறப்பில் அடையும் நிலை மோசமானதாக இருக்கும். | 20. One must abstain from sin, perform righteous acts, and walk the path of Dharma. Failing to do so results in unfavorable conditions in the next birth. |
| 21. எனவே, வாழும்போதே ஒருவன்
நல்லவனாக இருப்பதன் மூலம், அப்பிறவியில் நல்ல சிந்தனையும் அமைதியும்
வாய்ப்பதோடு, மறுபிறவியில் உயர்ந்த பிறவியையும் நல்ல வினையையும் அடையலாம்.
எனவே மனிதர்கள் மாயையில் மயங்கிவிடாது. புலனிச்சையில் மனதைச் செலுத்தாது,
தெய்வச் சிந்தனையிலும் தர்மத்தின் வழியிலும் செல்லவேண்டும்” என்றார் பகவான்
விஷ்ணு. - தொடரும்... |
21. "Therefore, by living righteously, one
attains clarity and peace in this life and is born into a higher state
in the next. Human beings should not be deceived by Maya (illusion). One
should not dwell on sense pleasures but instead follow the path of
divine contemplation and Dharma," said Lord Viṣṇu. -Will Continue... |