GP10DimensionsOfIndividualSoul
Machine translation was edited for clarity.
கருட புராண ரகசியங்கள் - 10: ஜீவாத்மாவின் அளவு என்ன தெரியுமா
இல.சைலபதி
4 Min Read
கருட புராண ரகசியங்கள்: உயிர் உடலை விட்டு நீங்கும்போது நவதுவாரங்கள் வழியாகவோ ரோமத் துவாரங்கள் வழியாகவோ வெளியேறும். ஆனால் ஞானிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் ப்ரம்மரந்திரம் எனப்படும் கபாலப் பகுதி உடைந்து அதன் வழியாக உயிர் பிரியும்.

Published:05 Aug 2024 2 PM
Updated:05 Aug 2024 2 PM
கருட புராண ரகசியங்கள்
Join Our Channel
கருட புராண ரகசியங்கள்
Share
Garuda Purana Secrets:

When the individual The DimensionsOfIndividualSoulsoul leaves the body, it exits through the nine orifices or the hair follicle pores. However, for saints and sannyasis, the skull—called the Brahmarandram—breaks, and life passes through it.
Note: Brahmarandram corresponds to the anterior fontanel, or the soft spot on the head of a newborn infant.

Published: 05 Aug 2024, 2 PM | Updated: 05 Aug 2024, 2 PM
Secrets of Garuda Purana
Join Our Channel
0 Comments
Share
கருட புராண ரகசியங்கள்: மகாபாரதத்தில், ‘யக்ஷப் பிரஸ்னம்’ என்ற ஒரு பாகம் உண்டு. வனவாசத்தின்போது யக்ஷனுக்கும் தர்மருக்கும் நடந்த உரையாடலே அது. யக்ஷப் பிரஸ்னத்தை ஒரு தர்ம நூல் என்றே சொல்லலாம். சகல தர்ம சாஸ்திரங்களின் சாரமாகவும் உலக இயக்கம் குறித்த அறிவுப் பொக்கிஷமாகவும் அது திகழ்கிறது. 1 1. Secrets of Garuda Purana: In the Mahabharata, there is a section called Yaksha Prasnam, a dialogue between Yaksha and Dharma during the exile of Pandavas. Yaksha Prasna can be considered a book of Dharma. It encapsulates the essence of all Dharma Shastras and is a treasure trove of knowledge about the movement of the world. end of 1
Notes: Yaksha = A class of demi-gods / tree spirits. Dharmaśāstras are Sanskrit Puranic Smriti texts on law and conduct. Smriti = written text. Śruti = oral tradition.
Yaksha Prasnam is the story of a question-and-answer dialogue between Yudhishthira and a Yaksha in the Hindu epic Mahabharata.
https://en.wikipedia.org/wiki/Yaksha_Prashna
யக்ஷன் தர்மனிடம் மொத்தம் 124 கேள்விகளைக் கேட்டார். அனைத்துக்கும் தர்மர் பொறுமையாக பதில் சொன்னார். அவற்றில் முக்கியமான கேள்வி 120 வது கேள்வி. யக்ஷன், “இந்த உலகத்தில் அதிசயமானது எது?” என்று கேட்டான. 2 2. Yaksha asked Dharma a total of 124 questions. Dharma patiently answered each one. The most significant question is number 120. Yaksha asked, "What is wonderful in this world?" End of 2.
அதற்கு தர்மர், “இந்த உலகத்தில் தினம் தினம் எண்ணிலடங்கா உயிரினங்கள் மாண்டு, யமனின் வசிப்பிடம் நோக்கிச் செல்கின்றன. ஆனால், மீதமிருக்கும் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் தாங்கள் எப்போதும் வாழப்போகிறவர்கள். தங்களுக்கு மரணம் ஏற்படாது என்று நினைத்துக் கொள்கின்றனர். இதைவிட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்?” என்று பதில் சொன்னான்.3 3. Dharma replied, "Day after day, innumerable creatures die in this world and proceed toward the abode of Yama, the god of death. Yet all beings, including the rest of humanity, believe they are going to live forever. They think death will not happen to them. What could be more miraculous than this?" End of 3.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வோர் உயிரும் மரணத்தை எதிர்கொண்டே ஆகவேண்டும். சொல்லப்போனால் உயிர் இயக்கத்தில் அதுவும் ஓர் நிலை. ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்பதுதானே ஆதிசங்கரர் உபதேசித்த தத்துவம் 4 4. Every living being born into this world must face death. In fact, death is one of the states of life. Punarabi Jananam, Punarabi Maranam is the philosophy preached by Adi Shankara.
Notes: Punarabhi = again and again; Jananam = birth; Maranam = death.
End of 4.
அப்படியிருக்கையில் மரணத்தைக் கண்டு அஞ்சுவது தேவையற்றது. மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்கிற அச்சம்தான் மனிதனைத் தடுமாறச் செய்கிறது. அதனால் தான் அந்த பயத்தை நீக்கி, உயிர்களுக்குத் தெளிவு உண்டாகும்படிக்கு கருடன், உயிர்கள் அனைத்தின் சார்பாகவும் மரணத்தின் ரகசியத்தை விளக்கும்படி பகவான் விஷ்ணுவிடம் கேட்கிறான்.5 5. That being the case, it is unnecessary to fear death. It is the fear of what happens after death that causes man to stumble. That is why Garuda asks Lord Vishnu to reveal the secrets of death on behalf of all living beings—to dispel that fear and enlighten them. End of 5.
அப்படி கருடன் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக அமைவதுதான் கருடபுராணம். 6 6. The Garuda Purana is the answer to the questions posed by Garuda.
End of 6.
பகவான், வாழும்போது ஒருவன் அறத்தோடும் நற்குணத்தோடும் வாழ்வான் என்று சொன்னால் அவன் மரணம் குறித்துக் கவலை அடைய வேண்டியதே இல்லை என்கிறார். மரணம் அவனுக்கு விடுதலை போன்று இருக்கும். பாவ ஆத்மாக்களைப் போல் அவன் ஓர் ஆண்டு முழுவதும் நடந்து சென்று துன்பப்பட வேண்டியிருக்காது. அந்த ஆன்மாவுக்கு மறுபிறப்பும் மிகவும் நல்ல முறையில் செல்வச் செழிப்போடும் சுகபோகங்களை அனுபவிக்கும் ஒரு பிறவியாகவும் அமையும். எனவே, ‘நன்றே செய்... அதுவும் இன்றே செய்’ என்று அறிவுறுத்துவதுதான் கருடபுராணம் உணர்த்தும் கருத்து. 7 7. The Lord explains that if one lives righteously and virtuously, there is no need to fear death. Death will be like liberation. Such a soul will not have to suffer and wander for a whole year like sinful souls. It will be reborn into a good and prosperous life. Therefore, the advice of the Garuda Purana is: “Do good... Do that today.”
End of 7.

எவ்வளவு தத்துவங்களைச் சொன்னாலும் சாதாரண மனிதனின் மனத்தில் மரணம் குறித்த அச்சம் எப்போதும் இருக்கும். அந்தத் தருணம் எப்படிப்பட்டது என்கிற பயமே அனைத்து உயிர்களிடமும் எஞ்சி நிற்கிறது. 8
8. No matter how many philosophical truths are taught, the fear of death remains in the minds of common people. The uncertainty of that moment haunts all living beings. End of 8.
எனவேதான் கருடன் அந்தத் தருணத்தின் ரகசியத்தை விஷ்ணுவிடம் கேட்கிறான். 9 9. That is why Garuda asks Vishnu to reveal the secret of that final moment.
End of 9.
. “நாராயணா, மனிதனின் உயிர் மரணித்தபின் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்துச் சொன்னீர்கள். அதேவேளை, மனிதனின் தேகத்திலிருந்து உயிர் எப்படிப் பிரிந்து செல்கிறது என்பது குறித்தும் விளக்குங்கள்” என்று கேட்டார் கருடன். 10 10. "Narayana, you spoke of the journey of a human being after death. At the same time, please explain how the soul separates from the human body," Garuda requested.
End of 10.
பொதுவாக நம் உடலில் தச வாயுக்கள் உள்ளன. உடல் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் தருணம் அந்த வாயுக்கள் நம் உடலில் இருந்து வெளியேறிவிடும். குறிப்பாக, ‘தனஞ்செயன்’ என்கிற வாயு வெளியேறுகிறபோது, மரணம் உறுதியாகிறது. அப்போது உடலில் இருந்து சிறு சங்கநாதம் போன்ற ஓசை பிறக்கும் என்று கூறுவார்கள்.11 11. Generally, there are dasa vayu (ten vital airs) in the body. The moment the body ceases to function, these airs are released. Specifically, when the air called Dhananjaya is released, death is certain. It is said that a faint conch-like sound may emanate from the body.
End of 11.
சுபலோபநிஷத், பிரகதாரண்யக உபநிஷத் போன்ற உபநிடதங் களில் உயிர் பிரியும் தருணம் குறித்து சில தகவல்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றின்படி ஜீவாத்மா என்பது ஹிருதய கமலத்தில் உள்ளது. அந்த ஹிருதய கமலத்தின் மத்தியில் ஜீவாத்மா உள்ளது. ஜீவாத்மாவின்
அளவு எவ்வளவு தெரியுமா? 12
12. The Subala Upanishad and the Brihadaranyaka Upanishad mention details about the moment of death. According to them, the living entity resides in the Hridaya Kamalam (Heart Lotus), at its center. Do you know the size of this living entity?
End of 12.
பசுவின் வாலில் இருக்கும் ஒரு முடியினை நூறு பாகங்களாக்கி அந்த நூற்றில் ஒரு பாகத்தை எடுத்து நூறு பாகங்கள் ஆக்கிக் கூறிட, அந்த நூறு பாகங்களில் ஒன்றினை எடுத்து மேலும் அதை நூறு பங்காக ஆக்கினால் கிடைக்கும் அளவுதான் ஜீவாத்மா என்கிறது. ‘ஷததா ஷததா ஷததா’ என்று உபநிடதம் விளக்குவது இதைத்தான்.13 13. If you divide a single hair from a cow’s tail into one hundred parts, then take one of those parts and divide it again into one hundred, and repeat this process one more time—this is how the Upanishads define the size of the soul. It is described as "shadada, shadada, shadada."
End of 13.
இதைத் திருமூலர், ‘மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு ஆவியின் கூறு நூறாயிரத் தொன்றாமே’ என்கிறார். மயிரை ஆயிரமாகப் பகுக்க வேண்டும் என்பது திருமூலர் கோட்பாடு.14 14. Thirumoolar says, "Mevya Jeevan Vadivuthu Sollidil," meaning that the soul is as subtle as dividing a hair into a hundred thousand parts. According to his theory, the soul is finer than even the finest fragment of hair.
End of 14.
எப்படியோ ஆன்மா என்பது மிக நுண்ணிய வடிவில் இருக்கக் கூடியது. இந்த உடலை இயக்குவதும் அதுதான். உடல் இந்திரியங்களின் வலிமை குறைந்து செயலற்றதாகும்போது, கர்மாவின் மூலம் ஜீவாத்மா, இந்த உடலை விட்டு வெளியேற வேண்டிய தருணம் இது என்பதை அறிந்து வெளியேறத் தொடங்கும் என்கிறார்கள். 15 15. The soul exists in a very subtle form and powers the body. When the senses weaken and become inactive, the soul—through the force of karma—realizes it is time to leave the body and begins its departure.
End of 15.
உடலில் முதுகு பாகத்தில் த்ரிஸ்தூன ஷோபனம் என்கிற மூன்று கோடுகள் உண்டு. உயிர் பிரியும் தருணத்தில் அந்த மூன்றுகோடுகளும் தயிர் கடைவதைப் போல் கடைந்து, ஜீவாத்மா நவ துவாரங்களில் ஏதேனும் ஒன்றின் வழியாக வெளியேற உதவி செய்யும். அப்போது நிஜமாகவே தயிர் கடைவதைப்போன்ற மெல்லிய சிறு சத்தம் உடலில் கேட்கும் என்றும் சிலர் சொல்வார்கள்.
கருடபுராணத்தில் பகவான் விஷ்ணு இதற்கு விளக்கம் கொடுக்கிறார். 16
16. On the back of the body are three lines known as Tristhuna Shopanam. At the moment of death, these three lines churn like curd and assist the soul in exiting through one of the nine openings. Some say a faint sound is heard during this process. Lord Vishnu explains this in the Garuda Purana.
End of 16.
“கருடா, உயிர் உடலை விட்டு நீங்கும்போது நவதுவாரங்கள் வழியாகவோ ரோமத் துவாரங்கள் வழியாகவோ வெளியேறும். ஆனால் ஞானிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் ப்ரம்மரந்திரம் எனப்படும் கபாலப் பகுதி உடைந்து அதன் வழியாக உயிர் பிரியும்.
உயிர் பிரிவது என்பது அனைவருக்கும் ஒரே அனுபவமாக இருப்பதில்லை. பாவிகளுக்கு உயிரானது உடலிலிருந்து எளிதில் விடுபடாது. பல தொல்லைகளை அடைந்து அதன்பின் அபானன் வழியாக வெளியேறும். ஆனால் புண்ணியம் செய்தவரின் ஆன்மா மிகவும் இயல்பாக இலகுவாக உடலில் இருந்து வெளியேறும்” என்றார் பகவான் விஷ்ணு. 17
17. "Garuda, when the soul leaves the body, it exits through the nine openings or the hair pores. But for saints and sannyasis, the vertex of the skull, called the Brahmarandram (corresponding to the soft spot in an infant’s skull), breaks and life passes through it. The soul’s departure is not the same for everyone. For sinners, it is difficult for life to exit the body. The soul undergoes many struggles and eventually leaves through the Apana (anus). In contrast, the soul of a virtuous person exits easily and peacefully," said Lord Vishnu.
End of 17.
பொதுவாக உடலில் இருந்து தனஞ்செயன் என்கிற வாயு வெளியானதும் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. ஒருவர் மரணம் அடைந்துவிட்டார் என்கிறதை உறுதிப் படுத்தியதும் அவரின் நவ துவாரங்களையும் அடைத்துவிடுவது வழக்கம். கால் பெருவிரல்களை சேர்த்துக் கட்டுவதன் மூலம் கீழே இருக்கும் இரு துவாரங்களும் மூடப்படுகின்றன. அவ்வாறு செய்யாவிட்டால் ஏதேனும் ஒரு துர் ஆத்மா அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலை எச்சில் படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கை உண்டு.18 18. Death typically occurs when Dhananjaya vayu is released from the body. Upon confirmation of death, it is customary to seal all nine exit points. The bottom two are closed by tying the toes together. It is believed that if this is not done, an evil soul may enter the body and defile it.
End of 18.
உடலானது பஞ்ச பூத சேர்க்கையினால் ஆனது. உயிர் வெளியேறியதும் உடலானது விரைத்துப் போய்விடும். அவ்வாறு மரத்துப் போன உடலை உடனடியாக எரிக்கவோ புதைக்கவோ செய்வதன் மூலம் அதை பஞ்ச பூதத்தோடு ஐக்கியப்படுத்தி விடுவார்கள். உடலானது அக்னி தேவனுக்கோ அல்லது பூமிக்கோ சமர்ப்பணம் செய்யப்படுவதால், அதை நீராட்டித் தூய்மைப் படுத்தி சமர்ப்பிப்பது வழக்கம்.
மேலும் அந்த உடலுக்குச் செய்யப்படும் சகல காரியங்களையும் அந்த ஆன்மா பார்த்துக்கொண்டே இருக்கும். எனவே உரிய மரியாதையோடு அதைக் கையாளுவது நல்லது. அதனால்தான் இறந்த வீட்டில் இறந்தவர் குறித்து அவதூறு பேசக்கூடாது என்கிறார்கள். 19
19. The body, composed of five elements, becomes stiff once life departs. Burning or burying the body reunites it with the elements. Since the body is offered to Agni Deva (Fire God) or to the earth, it is customary to bathe and purify it. The soul observes all that is done to its former body. Therefore, it must be treated with respect. That is why it is said that the deceased should not be slandered in the house of mourning.
End of 19.
தன் மரணத்துக்கு வந்தவர்களில் யாரெல்லாம் தன் மரணத்தில் மகிழ்கிறார் கள், யார் உண்மையிலேயே துக்கம் கொண்டிருக் கிறார்கள் என்பதை உணர்வுகளின் மூலம் அந்த ஆன்மா அறிந்துகொள்ளுமாம். அதனால்தான் துக்க வீடுகளில் தேவையற்ற விஷயங்களைப் பேசக்கூடாது என்பார்கள். துக்கம் நிகழ்ந்த வீட்டில் தாம்பூலம் போடக்கூடாது. சுப காரியங்கள் குறித்த விமர்சனங்களைப் பேசக்கூடாது என்கிறார்கள். 20

20. The soul can sense who among the mourners is genuinely grieving and who is secretly rejoicing. Therefore, inappropriate or insensitive comments should not be made in mourning houses. Betel leaves should not be offered, and criticism of auspicious matters should be avoided.
End of 20.

ஆன்மாவானது தன் உடலுக்கு நிகழும் சடங்குகளைக் கண்டு ஒருபுறம் வருந்தினாலும் மறுபுறம் இதுதான் விதி என்பதையும் அது உணர்ந்துகொள்ளும் என்கிறர்கள். 21 21. The soul, while grieving over the rituals performed on its body, also comes to terms with the fact that this is its destiny.
End of 21.
உயிரானது உடலில் இருந்து வெளியாகும்போது உடல் மிகுந்த வலியை உணரும் என்கிறார்கள். அது உடலை நீங்கியபிறகு மிகுந்த துக்கம் கொள்ளும். நீண்ட காலம் வாழ்ந்த வீட்டைப் பிரியும்போது நமக்கு ஏற்படும் துக்கம் போன்றதுதான் அதுவும். 22 22. It is said that the body experiences immense pain when the soul departs. The soul feels a deep sorrow—similar to the grief one feels when leaving a home they have lived in for a long time.
End of 22.
சூட்சும சரீரம் அடைந்த அந்த ஆன்மாவுக்கு முதல் 10 நாள்கள் கல் ஊன்றிக் கர்மா காரியங்கள் செய்வது வழக்கம். உடலில் இருந்த பிரிந்த துக்கமும் அக்னியில் உடல் இடப்பட்டதால் உண்டான வெப்பமும் சூட்சுமமாக அந்த ஆன்மாவைப் பீடிக்கும். எனவே அந்த நாள்களில் தாராளமாகத் தண்ணீர் ஊற்றி அதன் தாகத்தைத் தணிக்க வேண்டும். முதல் நாள் ஊன்றிய கல்லை பத்து நாள்களும் அசைக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு அசைக்க நேர்ந்தால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
இப்படி கருடபுராணம் நம்மை எச்சரித்து வழிகாட்டுகிறது. சரி, இறந்தவருக்கு யார் கர்மா காரியங்களைச் செய்ய வேண்டும்? அதையும் சொல்கிறது கருடபுராணம். 23
- தொடரும்...
23. For the soul, the first ten days after death mark the beginning of its subtle existence. A stone is placed to perform karma during this period. The grief of separation from the body and the heat from cremation torment the soul. Hence, water is liberally offered to quench its thirst. The stone laid on the first day should remain untouched for ten days; if disturbed, a ritual remedy is required.
Thus, the Garuda Purana warns and guides us.
Who, then, must perform the karma for the deceased? The Garuda Purana also addresses this.
End of 23.
Continue...