GP11YourSonIsYourself
  Machine translation has been edited for clarity.
கருட புராணம்: உங்கள் மகனாகப் பிறப்பதும் நீங்களே!
இல.சைலபதி
தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க
கருட புராணம்: இறந்த மனிதனின் உயிர் எங்கே செல்கிறது என்பதுதான் இந்த உலகில் சிந்திக்கத் தொடங் கிய மனிதனின் ஆதிக்கேள்வியாக இருந்திருக்கும். மனிதர்களின் அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக உருவானதே கருட புராணம்.
Published:19 Aug 2024 6 PM
Updated:19 Aug 2024 6 PM
கருட புராணம்
கருட புராணம்
Join Our Channel
1
Comments
Share
Garuda Purana: You are the one who is born as your son!
L. Shailapathy
Read other episodes of the series
Garuda Purana: Where does the life of a dead man go was the first question of man who started thinking in this world. Garuda Purana was created to clear that doubt of human beings.
Published:19 Aug 2024 6 PM
Updated:19 Aug 2024 6 PM
கருட புராணம்
Garuda Purana
Join Our Channel
1
Comments
Share
இறந்த மனிதனின் உயிர் எங்கே செல்கிறது என்பதுதான் இந்த உலகில் சிந்திக்கத் தொடங்கிய மனிதனின் ஆதிக்கேள்வியாக இருந்திருக்கும். மனிதர்களின் அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக உருவானதே கருட புராணம். 1 1. Where does the life of a dead man go must have been the primordial question of man who began to think in this world. Garuda Purana was created to clear that doubt of human beings.
கருட புராணம்
கருடன் பகவான், விஷ்ணுவிடம் மரணம் குறித்தும், அதற்குப் பின்னான வாழ்க்கை குறித்துமான பல கேள்விகளை முன்வைக் கிறான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பகவான் விஷ்ணு விரிவாக விடை சொல்கிறார். அவ்வாறு அவர் கூறிய விடைகளின் தொகுப்பே கருடபுராணம். 2
2. Garuda Purana
Lord Garuda poses many questions to Lord Vishnu about death and life after physical death on earth. Lord Viṣṇu answers all these questions in detail. The Garuda Purana is a compilation of his answers.
“வைனதேயா, இந்த உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் மரிக்கும். அவ்வாறு மரிக்கும் உயிர்களைக் கவர்பவன் காலன். உயிர்கள் தாங்கள் வாழும் காலத்தில் செய்யும் தோஷத்துக்கு ஏற்பவும் பூர்வ ஜன்ம பாவத்துக்கு ஏற்பவும் ஆயுளை அடைகிறார்கள். 3 3. "Vainadeya, all beings born in this world die. Kāla (Lord Time) is the one who attracts such beings. Living beings attain life according to the dosha (sin) they do during their lifetime and according to the sins of their previous births.
வைனதேயன் vaiṉatēyaṉ , n. Vainatēya. Garuḍa, as the son of Viṉatā;
மரித்தவன் வீட்டில் உணவு அருந்துபவனும், பிறன் மனைவியை இச்சிப்பவனும், தகாத இழி தொழில்களைச் செய்பவனும் தன் வாழ்நாளை இழப்பார்கள். வாழும் காலத்தில் நல்வினை களைச் செய்யாதவனும், பெரியோர்களை பூஜித்து மரியாதையோடு நடத்தாதவனும், தூய்மையில்லாதவனும், தெய்வ பக்தி இல்லாத வனும், பாவம் என்று அறிந்தே செய்பவர்களும் யமலோகத்தில் எப்போதும் நரகத்தையே அடைவார்கள்.4 4. He who eats in the house of the dead, who covets his neighbor's wife, and who does immoral work, will lose his life. Those who do not do good deeds during their lifetime, who do not worship and treat elders with respect, who are not pure, who do not have devotion to God, and who do it knowing that it is a sin, will always go to hell in Yamaloka (the world of Yama).
பிறருக்குக் கேடு நினைப்பவனும், பொய் பேசுபவனும், கருணையில்லாதவனும், சாஸ்திரப்படி வாழாதவனும், தனக்குரிய தர்மத்தை விடுத்துப் பிறருக்குரிய தர்மங்களைச் செய்பவனும் நரகத்தில் வீழ்வார்கள். 5 5. He who thinks ill of others, who speaks lies, who has no mercy, who does not live according to the scriptures, who does the dharma of others instead of his own dharma, will fall into hell.
கருடா! மனித தேகம் என்ன... உடலோடு சஞ்சரிக்கும் எந்த உயிரின் தேகமும் நிரந்தர மானதல்ல. உடல், சுக்கில சுரோணிதத்தால் உண்டாவது. அன்னபானாதிகளால் விருத்தி அடைவது. காலையில் உண்டால் மாலையில் பசிக்கும். மீண்டும் உணவு உட்கொள்ளவில்லை என்றால், உடல் சோர்வடையும். எனவே, இந்த உடல் நிரந்தரமானதல்ல என்பதை முதலில் ஒருவன் உணரவேண்டும். மீண்டும் இந்த பூமியில் உடல் கொண்டு பிறக்காதிருக்க நற்காரியங்களைச் செய்யவேண்டும். 6 6. Garuda! What is the human body... The body of any living being that moves with the body is not permanent. The body is formed by the vita fluid. Growth by food and drink. If you eat in the morning, you will be hungry in the evening. If you do not eat again, the body will get tired. Therefore, one must first realize that this body is not permanent. We have to do good deeds to not be born on this earth again with a body.
வைனதேயா... பூர்வஜன்ம கர்மத்தால் வருகிற உடலை யாருடையது என்று சொல்ல முடியும்? அதைச் சுமந்து திரியும் ஜீவனுக்கு அது சொந்தமா? அதை உண்டாக்கிய தந்தை யுடையது எனலாமா? அல்லது பத்துமாதம் சுமந்துபெற்ற தாயுடையதா? அந்த உடல் ஒரு நாள் அக்னிக்கு இரையாகிவிடும் என்பதால் அது அக்னிக்கு உரியதா? உடலைப் பிய்த்துத் தின்னும் நாய் நரிகளுக்கு உரிமையானதா? 7 7. Vainadeya... Whose body can be said to belong to the karma of previous births? Does it belong to the creature that carries it? Is it the father who made it? Or of a mother who bore her for ten months? Does that body belong to Agni because one day it will be a prey to Agni? Does a dog that tears and eats a body belong to foxes?
உடல் யாருக்கும் உரியதல்ல. இதை உணர்ந்து, அதை அடையாது இருக்கும் வழியை நாட வேண்டும். கர்ம வினைகளால்தான் ஓர் உயிர் பிறந்து பிறந்து மரிக்கிறது. இப்படிப் பிறப்பதும் இறப்பதும் கணக்கில்லாதன. அதை உடைக்க, அவன் வாழும் காலத்தில் நற்காரியங்கள் செய்ய வேண்டும். தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவன், பிறவியில்லாப் பெருவாழ்வை அடைவான்.8 8. The body does not belong to anyone. You have to realize this and seek the path of not attaining it (taking another borth). It is because of karma that a being is born, born and dies. Birth and death are innumerable. To break it, he must do good deeds while he lives. He who lives by observing the Dharma attains to the birthless great life.
ஒரு குழந்தையானது கர்ப்பவாசம் செய்யும் காலத்திலேயே ஆறு மாதத்துக்குள் கரைந்து விழுந்ததாயின்... கர்ப்ப மாதம் ஒன்று என்றால் ஒரு நாளும், இரண்டு என்றால் இரண்டு நாளும்... இப்படி ஆறு மாத காலம் என்றால் ஆறு நாள்களும் தீட்டு உண்டாகும். இது தாய்க்கு மட்டுமே பொருந்தும். தந்தைக்குத் தீட்டு இல்லை. குழந்தை பத்தாவது மாதத்தில் பிறந்து மூன்று வயதுக்குள் மரித்தால், அந்தக் குழந்தையை உத்தேசித்து ஊரில் உள்ள குழந்தைகளுக்குப் பால்சோறும் தயிர்சோறும் கொடுக்க வேண்டும். 5 வயதுக்குள் குழந்தை இறந்தால் ஊர்க்குழந்தைகளுக்குப் பால் பாயாசம் செய்து தானம் கொடுக்க வேண்டும். 9 9. If a baby dissolves (miscarriage) within six months of pregnancy, the woman is polluting... One month of pregnancy and two months of pregnancy within the first six months of pregnancy termination amount to one or two days of pollution.. If this is the period of six months, there will be pollution for all six days. This only applies to the mother. The father is not polluted. If the child is born in the tenth month and dies before the age of three, milk rice and curd rice should be given to the children in the village. If the child dies before the age of 5 years, the children of the village should be given milk payasam (sweet porridge made of rice, milk and sugar) and donation.
ஐந்து வயதுக்குள் குழந்தைகள் இறந்தால் அவரவர் வழக்கப்படிக் கர்மங்கள் செய்ய வேண்டும். ஆனால், விருஷோற்சனமும் விசேஷ தானங்களும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்று வயதிற்குள் ஒரு குழந்தை மரித்தால் பூமியில் புதைக்க வேண்டும்.10
10. f a child dies before the age of five, he should perform his duties according to his custom. But there is no need to do Vrishotsana and special donations. But you definitely have to do Kumbha Daan. If a child dies before the age of three, he should be buried in the earth.
பிறந்து ஆறு மாதங்கள் வரை சிசுவென்றும், மூன்று வயதுவரை பாலகன் என்றும், ஆறு வயதுவரை குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்றும், பதினாறு வயது வரை கைசோரன் என்றும் குறிப்பிட வேண்டும் என்று சாஸ்திரம் குறிப்பிடு கிறது.11 11. According to the scriptures, up to the age of six months he should be called Sisu, up to the age of three he should be called Balaka, up to the age of six he should be called Kumara, up to the age of nine he should be called Paundaka and up to the age of sixteen he should be called Kaisoran.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கிரியைகள் செய்யும்போது மந்திரங்கள் குறைவாகச் சொல்லிப் பிண்டம் போட வேண்டும். காரணம், அந்தக் குழந்தைக்கும் பெற்றோருக் கும் சிநேகமும் உடன்பாடும் சிறிதுகாலமாக இருந்தமை யால் கிரியைகளும் குறைவாகவே உண்டு. 12 12. Children (demised) below the age of five should be given less Pindam (ceremonial Ball of boiled rice) by chanting mantras while performing rituals. The reason is that the child and the parent had known each other only for a while, and thus less ceremonial rites.
ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயதுக்குள் ஒருவன் மரித்துவிட்டால் அவன் குறித்து விருஷோற்சனம் செய்ய வேண்டும். ஆனால் சபிண்டீகரணம் செய்யத் தேவை யில்லை. பால், தயிர், வெல்லம் போன்றவற்றைச் சேர்த்துப் பிண்டம் இட வேண்டும். குடம், குடை, தீபம் ஆகியவற்றைத் தானம் செய்ய வேண்டும்.13 13. If a person dies between the ages of five and twelve, Vrishorsana should be performed on him. But there is no need to do sapindikaranam. Milk, curd and jaggery should be added to the pindam. Donate pots, umbrellas and lamps.
மரித்தவன் குறித்து தர்ப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிராத்தங்கள் செய்தால், மரித்தவன் மறுஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறப்பான். தீர்க்க ஆயுள் அவனுக்கு வாய்க்கும். நல்ல புத்திரர்கள் அவனுக்கு வாய்ப்பார்கள். 14 14. If one performs Sraddha like Ekodhishti on the deceased with Tarpa, the deceased will be born in a good family in the next birth. He will have a long life. Good sons will give him a chance.
இதில் ஓர் ரகசியம் சொல்கிறேன். ஒருவனுக்கு அவன் ஆன்மாவே புத்திரனாகப் பிறக்கிறது. ‘ஒருவன் தனக்குத்தானே புத்திரன் ஆகிறான்’ என்று வேதம் சொல்கிறது. 15 15. Let me tell you a secret. A man's soul is born as a son. The Veda says, "A man becomes a son to himself."
சூரியன் ஒருவனே உளன். சந்திரனும் ஒருவனே. தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து அவற்றின் உள்ளே பார்த் தால் ஒவ்வொரு குடத்திலும் பகற்பொழுதில் சூரியனும் பௌர்ணமி இரவுகளில் சந்திரனும் தோன்றும் 16 16. There is only one sun. The moon is one. If you keep a row of pots filled with water and look inside, the sun will appear in each pot during the day and the moon on full moon nights
அதுபோல, ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாகப் பிறக்கிறான். ஆகையால்தான் பெரும்பாலான பிள்ளைகள் தன் தந்தையைப் போலவே உருவத்திலும் அறிவிலும் ஒழுக்கமும் உடையவர்களாகத் திகழ்கிறார்கள். 17 17. Similarly, one person is born to himself with many sons. That is why most children are like their fathers in stature, intelligence, and discipline.
ஆயினும், பார்வை இல்லாதவனுக்குப் பிறந்த குழந்தை பார்வையற்றவனாகப் பிறப்பதில்லை. அதேவேளையில் வாய்பேச இயலாதவனுக்குப் பிறக்கும் குழந்தை பேச முடியாதவனாக இருப்பதில்லை. ஆனாலும், தந்தையின் சிறப்பான குணாதிசயத்தில் ஏதேனும் ஒன்று மகனுக்கு நிச்சயம் இருக்கும்” என்று பகவான் விஷ்ணு கருடனுக்கு எடுத்துக்கூறினார். 18 18. However, a child born of a blind man is not born blind. On the other hand, a child born to a dumb person is not unable to speak. However, the son is sure to have one of the best qualities of the father," Lord Vishnu explained to Garuda.
கருடன் பகவானின் விளக்கங் களால் திருப்தி அடைந்தவனாக மேலும் பல சந்தேகங்களை அவர் முன் வைத்தான். 19 19. Garuda was satisfied with the Lord's explanations and posed many more doubts to him.
“ஜகந்நாதா! தன் புத்திரன் என்றும் தன் மனைவியின் வயிற்றில் பிறந்த புத்திரன் என்றும் புத்திரர்களில் பத்து வகையினர் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. இவர்களில் யாருக்கு, கர்மங்கள் செய்யத் தகுதி உண்டு? எல்லோரும் ஈமக் காரியங்களைச் செய்யலாமா?” என்று கேட்டான் கருடன்.20 20. "Jagannath! The scriptures say that there are ten kinds of sons, namely his son and the son born of his wife. Who among them is qualified to perform karmas? Shall we all perform the last rites?" asked Garuda.
பகவான் விரிவாக பதில் உரைக்கத் தொடங் கினார். 21 21. The Lord began to answer at length.
“பறவைகளின் அரசனே, ஒருவன் தனக்குத் தன் இல்லாள் மூலம் பிறந்த மகனின் முகத்தைப் பார்த்துவிட்டாலே, அவன் ‘புத்’ என்கிற நரகத்தை அந்த ஜன்மத்தின் இறுதியில் காண மாட்டான். மணம் செய்துகொண்ட இருவருக்கு மகன் பிறந்தால் அந்தக் குலத்தின் பிதிர் தேவர்கள் எல்லோரும் மகிழ்வார்கள். 22 22. "O king of birds, if a man beholds the face of his son born of his housewife, he will not see the hell called 'puth' at the end of that life. If a son is born to two married couples, all the Pitir (dead ancestors) Devas of that tribe will rejoice.
ஒருவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தாலும் முதல் மகனே ஈமக்கிரியைகள் செய்யக் கடமைப்பட்டவன். அவனே பிற கர்மா காரியங்களையும் செய்ய வேண்டும். 23 23. Even if a man has ten sons, the first son is bound to perform the last rites. He has to perform other karma activities as well.
மற்றவர்கள் தந்தை வாழும் காலத்தில் அவரின் இகலோக வாழ்க்கைக்கு உதவலாமே தவிர பரலோகக் காரியங்களைச் செய்ய இயலாது. ஈமக் கிரியைகளில் மூத்தவன் தவிர்த்த பிற மகன்கள், சிறிது காரியங்களைச் செய்ய இயலும். அதன்பின் சிராத்த காரியங்களைத் தனியாகச் செய்யலாம்.24 24. Others can help the father in his earthly life but they cannot do heavenly things. Sons other than the eldest can do some things at funerals. After that, the Sraddha activities can be done separately.
ஒருவனுக்குப் பேரன் பிறந்து அவனைப் பார்த்துவிட்டால் அவன் மரணத்துக்குப் பின் நல்லுலகை அடைவான். கொள்ளுப்பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான். பெண் குழந்தைகளைப் பெற்றவன், அவளுக்கு முறையாகத் திருமணம் செய்துவைத்து அவர்களுக்குப் புத்திரன் பிறந்தால், அவன் தன் 21 தலைமுறையினரையும் கரையேற்றுவான். 25 25. If a man has a grandson and sees him, he will attain the good world after death. He who has seen his great-grandson will attain a better world. If a man who has daughters, marries her properly and has a son from them, he will bring his 21 generations to the shore (liberation).
ஒருவன் மரிக்கும்போது, அவனின் காதல் கிழத்திக்குப் பிறந்த மகன் ஈமக் காரியங்கள் அனைத்தையும் செய்ய அனுமதியில்லை. மாறாக அவன் சிராத்தக் காரியங்களைச் செய்யலாம். தானங்கள் கொடுக்கலாம். அவன் தன் தந்தைக்கு மட்டுமே சிராத்தம் செய்ய முடியுமே தவிர, அவரின் தலைமுறையினருக்கு எந்த கர்மாவும் செய்ய முடியாது. முழு அதிகாரமும் மரித்தவனின் சத்புத்திரனுக்கே உண்டு. 26 26. When a man dies, the son born to his beloved old woman is not allowed to perform all the funeral rites. Instead, he may perform sraddha ceremonies) Donations can be made. He can perform Sraddha (funeral ceremonies) only for his father and not for his generation. All authority belongs to the righteous son of the dead.
சத்புத்திரன் தீர்த்தயாத்திரை செய்யலாம். தன் பித்ருகள் குறித்து அன்ன ரூபமாகவும் ஆம ரூபமாகவும் ஹிரண்ய ரூபமாகவும் சிரார்த்தங்கள் செய்யலாம்” என்று விரிவாக விளக்கம் அளித்தார். 27 27. Satputra (good, virtuous, dutiful son.) can go on a pilgrimage. He explained in detail that he can perform Sraddhas on his ancestors in the form of food, tortoise and Hiranya."
இவற்றை எல்லாம் கருடன் ஏன் கேட்க வேண்டும்?28 28. Why should Garuda ask all this?
கர்மா காரியங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் உலகத்தில் நற்சிந்தனையோடு வாழ வேண்டியதன் அவசியத்தையும் கலியுகத்தில் வாழும் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கேட்டான் கருடன். அவனின் நோக்கம் நிறைவேறும் விதமாக பகவான் விஷ்ணுவும் பதில் அளித்தார். 29 29. Garuda asked so that the people living in Kaliyuga should understand the necessity of doing karma and living in the world with good thoughts. Lord Vishnu replied in fulfillment of his purpose. continue