|
Garuda
Purana Secrets 13 |
|
|
|
Machine
translation was edited for clarity. |
|
கருட புராண ரகசியங்கள்
13:
இளநீரையும் பாலையும் எப்படி அருந்த வேண்டும் தெரியுமா?
இல.சைலபதி
4 Min Read
கருட புராண ரகசியங்கள்: இந்த உலகத்தில் பிறந்த உயிர்கள் அனைத்துக்கும்
நிச்சயமான ஒன்று மரணம். அதை மாற்ற நினைத்தவர்கள் தோல்வி
அடைந்திருக்கிறார்கள்.
Published:16
Sep 2024 3 PM
Updated:16
Sep 2024 3 PM
கருட புராண ரகசியங்கள்
கருட புராண ரகசியங்கள்
Join Our
Channel
0
Comments
Share |
Garuda
Purana Secrets 13:
Coconut Water And Milk How to drink? Did
you know?
L.
Shailapathy
4 Min Read
Secrets of
Garuda Purana: Death is a sure thing for all beings born in this world.
Those who tried to change it have failed.
Published:16
Sep 2024 3 PM
Updated:16
Sep 2024 3 PM
Secrets of
Garuda Purana
Secrets of
Garuda Purana
Join Our
Channel
0
Comments
Share |
|
கருட புராண ரகசியங்கள்: இந்த உலகத்தில் பிறந்த உயிர்கள் அனைத்துக்கும்
நிச்சயமான ஒன்று மரணம். அதை மாற்ற நினைத்தவர்கள் தோல்வி
அடைந்திருக்கிறார்கள். அசுரர்கள் தவம் இருந்து மரணமில்லாப் பெருவாழ்வை
வரமாகக் கேட்டபோதெல்லாம் இறைவன்,
‘அதைத்
தவிர வேறு கேளுங்கள்’ என்று சொல்வதுண்டு. இதை விளக்க ஒரு கதை உண்டு.
1 |
1.
Secrets of
Garuda Purana: Death is a sure thing for all beings born in this world.
Those who tried to change it have failed. Whenever the demons performed
penance and asked for a boon of immortal life, the Lord used to say,
"Ask for something else." There is a story to illustrate this. |
|
கருட புராண ரகசியங்கள்
ஓர் அரசனுக்கு,
‘மரணம்
இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்’ என்கிற ஆசை வந்தது. அதற்கு என்ன வழி
என்று தேடி அலைந்தான். ஊரில் இருக்கும் ஞானிகள்,
சந்நியாசிகள் அனைவரையும் அழைத்து விசாரித்தான். அவர்கள் யாருக்கும் விடை
தெரியவில்லை.
2 |
2.
Secrets of
Garuda Purana
A king
wanted to live a great life without death. He searched for a way out. He
called all the saints and sannyasis in the town and enquired. None of
them knew the answer. |
|
“காட்டுக்குள்
தவம் செய்யும் முனிவர் ஒருவர் பல நூறு ஆண்டுகள் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.
ஒருவேளை அவருக்கு மரணத்தை வெல்லும் ரகசியம் தெரிந்திருக்கலாம்” என்று
சொன்னார்கள். 3 |
3.
"It is said
that a sage who performs penance in the forest lives for hundreds of
years. Perhaps he knows the secret of conquering death." |
|
மன்னன் உடனே காட்டை நோக்கிப் புறப்பட்டான். முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.
முனிவர் அப்போது நிஷ்டையில் இருந்தார். மன்னன்
பொறுமையாக அவர் கண் விழிக்கும் வரை,
அவர் முன்பாக அமர்ந்திருந்தான். கண் திறந்த ரிஷி மன்னரைக் கண்டதும்
அவருக்கு ஆசி வழங்கினார். ‘என்ன வேண்டும்’ என்று கேட்டார்.
4 |
4.
The king at
once started towards the forest. He reached the hermitage of the sage.
The sage was in Nishta (niṣṭai
= meditation) at that time. The
king patiently sat before him until he woke up. The sage opened his eyes
and blessed the king on seeing him. "What do you want?" he asked. |
|
அதற்கு மன்னன்,
“எனக்கு
மரணம் இல்லாத வாழ்வு வேண்டும்” என்றான். முனிவர் ஒரு கணம் யோசித்தார்.
பிறகு,
“இந்தக்
காட்டின் நடுவில் ஒரு குளம் உள்ளது. அது அமிர்தக் குளம். அந்த நீரை
அருந்தினால் உனக்கு மரணம் நேராது” என்றார்.
5 |
5.
The king
said, "I want life without death." The sage thought for a moment. Then
he said, "There is a pond in the middle of this forest. It is the nectar
lake. If you drink that water, you will not die. |
|
மன்னன் இனியும் தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து அங்கிருந்து
புறப்பட்டு அந்தக் குளக்கரைக்குச் சென்றான். அங்கே ஒரு பெரிய பறவை மட்டுமே
இருந்தது. மன்னன் குளத்துக்கு அருகே சென்றான். அப்போது அந்தப் பறவை அந்தக்
கானகமே அதிரும்பட்டி ஒரு சத்தம் எழுப்பியது. மன்னன் அதைத் திரும்பிப்
பார்த்துவிட்டு,
குனிந்து அந்தக் குளத்து நீரைக் கையில் அள்ளினான்.6 |
6.
The king
decided not to delay any longer and went to the lakeside. There was only
one big bird. The king went near the lake. Then the bird made a noise
and shook the whole forest. The
king looked back at it, bent down and took the water from the tank in
his hand. |
|
அதை வாய் அருகே கொண்டு வரும்போது அந்தப் பறவை பறந்துவந்து அவன் கைகளைக்
கொத்தியது. கையில் இருந்த நீரெல்லாம் சிந்தியது.
7 |
7.
As he
brought it to his mouth, the bird flew up and pecked at his hands. All
the water in his hand spilled. |
|
மன்னனுக்குக் கோபம் வந்தது. “முட்டாள் பறவையே என்னை ஏன் தடுக்கிறாய்?”
என்று கத்தினான். அப்போது அந்தப் பறவை பேசியது. “நீ ஏன் இந்த நீரைப் பருக
வந்தாய்?”
என்று கேட்டது.
8 |
8.
The king was
angry. "Why are you stopping me, you stupid bird?" he shouted. Then the
bird spoke. "Why did you come to drink this water?" |
|
பறவைப் பேசுவதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த மன்னன்,
“முனிவர்தான்
இந்தக் குளத்து நீரைப் பருகினால் மரணம் நேராது என்றார். அதனால்தான் இதைப்
பருக முயன்றேன்” என்றான்.
9 |
9.
The king was
surprised to hear the bird speak and said, "It is the sage who said one
will not die if he drinks the water of this lake. That's why I tried to
drink it." |
|
“சரிதான்.
நீ சொன்னபடி இந்த நீரைப் பருகினால் மரணம் ஏற்படாதுதான்” என்றது பறவை.
10 |
10.
"That's
right. If you drink this water as you said, you will not die," said the
bird. |
|
“முட்டாள்
பறவையே... அப்படியானால் ஏன் தடுத்தாய்?”
என்று கேட்டான் மன்னன்.
11 |
11.
"Stupid
bird... Then why did you stop it?" asked the king. |
|
“சொல்கிறேன்
மன்னா! இந்தக் குளத்து நீரை முதலில் பருகியவன் நான். நூறு ஆண்டுகளுக்கு
ஒருமுறை இந்தக் குளத்தில் அமிர்தம் உண்டாகும். அப்படி உண்டான அமிர்தத்தை
ஒருவர்தான் அருந்த முடியும். நூறாண்டுக்கு முன்பு நான் அருந்தினேன்.
மரணமில்லாத வாழ்வு கிடைத்துவிட்டது.
12 |
12.
"I will tell
you, King! I was the first to drink the water of this tank. Nectar is
produced in this tank once in 100 years. Only one can drink the nectar
thus produced. A hundred years ago I drank. I have attained immortal
life. |
|
ஆனால் எனக்குப் பிள்ளைகள் பிறந்தன. அவற்றுக்கும் பிள்ளைகள் பிறந்தன. ஆனால்
அவை எல்லாம் சீக்கிரமே மடிந்துவிட்டன. என் பிள்ளைகளும் அவர்களின்
பிள்ளைகளும் சாவதைக் கண்கொண்டு பார்த்தேன்.
13 |
13.
But I had
children. They also had children. But they all died out early. I watched
my children and their children die. |
|
அதைவிட வலியும் வேதனையும் நிறைந்தவை வேறு இல்லை. மரணம் கூட இந்த வலியைத்
தராது. மரணித்திருந்தால் மீண்டும் பிறந்து வாழத் தொடங்கியிருப்போம்.
இப்போதோ நான்,
வயதில் என்னைவிட இளையவர்கள் இறப்பதைக் கண்டு வருந்திக் கொண்டிருக்கிறேன்.
இப்போது சொல் உனக்கும் இந்தக் கொடுமையான நிலை வேண்டுமா... நீ ஒருவன்
சாகாமல் வாழ்ந்து மற்றவர்களின் மரணத்தைக் காணப்போகிறாயா... நீயே முடிவு
செய்துகொள்” என்றது பறவை.
14 |
14.
There is
nothing more painful than that. Even death does not cause this pain. If
we had died, we would have been born again and started living. Now I am
grieving the death of those younger than me. Now tell me, do you want
this terrible condition too? Are you going to live without dying and see
the death of others? You decide for yourself," said the bird. |
|
மன்னனுக்கு ஞானம் பிறந்தது. பறவைக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டான்.15 |
15.
The king
became wise. He thanked the bird and left. |
|
கருட புராண ரகசியங்கள்
இதுபோன்ற கதைகள் எளிமையாக விளக்கும் உண்மை ஒன்றுதான்,
மரணம் மாற்றவியலாதது என்பதுதான் அது. எனவே,
இளமையும் அழகும் நிரந்தரமானது என்று எண்ணி இன்பத்தில் மூழ்கி இருக்காமல்,
வாழ்வில் நல்லனவற்றைச் செய்து மறு வாழ்வில் நன்மையை அடைய வேண்டும் என்று
வலியுறுத்துகிறது கருட புராணம்.
16 |
16.
Secrets of
Garuda Purana
The only
truth that such stories simply explain is that death is unchangeable.
Therefore, Garuda Purana emphasizes that thinking youth and beauty are
eternal and not indulge in pleasure, but should do good things in life
and get good in the next life. |
|
அன்றாடம் செய்யும் பலவற்றை நாம் பாவம் என்றே அறிவதில்லை. உதாரணமாக காலையில்
எழுந்ததும் நீராடாமல் இருப்பது பாவம். நீராடாமல் உணவு உட்கொள்வதும் பாவம்
என்கிறது கருடபுராணம். ஆனால் நம்மில் பலர்,
நாள் முழுவதும் குளிக்காமல்தான் பல வேலைகளைச் செய்கிறோம்.
17 |
17.
Many of the
things we do every day are not known to be sin. For example, it is a sin
not to take a bath after waking up in the morning. According to Garuda
Purana, it is a sin to eat food without taking a bath. But many of us do
a lot of work without taking a bath all day. |
|
இளநீர் எப்படி அருந்த வேண்டும் என்றுகூட சாஸ்திரம் சொல்கிறது. இளநீரை வேறு
பாத்திரத்துக்கு மாற்றி அருந்தக் கூடாது. அப்படி அருந்தினால் அது மதுபானம்
அருந்து வதற்கு சமம் என்கிறது சாஸ்திரம். பிறகு எப்படி இளநீர் அருந்துவது?
18.
|
18.
Shastra also
tells us how to drink coconut water. Do not transfer coconut water to
another vessel. According to the scriptures, if you drink it, it is
equivalent to drinking alcohol. Then how to drink coconut water? |
|
தேங்காயில் ஓட்டை இட்டு நேரடியாக அருந்தவேண்டும். அல்லது தாமரைத் தண்டு
கொண்டு உறிஞ்சி அருந்தலாம். இந்தக் காலத்தில் ஸ்டரா
கிடைக்கிறது. அந்தக் காலத்து
ஸ்டரா தாமரைத் தண்டுதான். இன்றும்
வேதம் அறிந்தவர்கள் தாமரைத் தண்டைப் பயன்படுத்தித்தான் இளநீர்
அருந்துவார்கள்.
19 |
19.
Make a hole
in the coconut and drink it directly. Or you can suck it with a lotus
stem. Starw is available during this period. The straw of those days was
the lotus stem. Even today, those who know the Vedas drink coconut water
using lotus stem. |
|
தாமிரப் பாத்திரத்தில் பால் அருந்தக் கூடாது. பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன்
கொண்டு எடுத்துக் குடிக்கவும் கூடாது என்கிறது கருடபுராணம்.
20 |
20.
Do not drink
milk from a copper vessel. Garuda Purana says that milk should not be
taken little by little with a spoon. |
|
வீட்டில் நாம் வளர்க்கும் மரங்களே என்றா லும் அதற்குப் பிராயச்சித்தம்
செய்யாமல் அதை வெட்டக் கூடாது. உப்பு,
சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்கக் கூடாது. சந்தனம்
போன்ற வாசனை திரவியங்களைத் திருடக் கூடாது. ஒருவரிடம் தானமாகப் பெற்ற
பொருளை வேறு ஒருவருக்குக் கொடுக்கக் கூடாது.
21 |
21.
Even if they
are the trees we grow at home, we should not cut them down without doing
penance. Food items like salt and sugar should not be sold at high
prices. Do not steal perfumes like sandalwood. What is donated from one
person should not be given to another. |
|
இதிகாச,
புராண நூல்களை அவ்வப்போது வாசிக்கவேண்டும். கிரகணக் காலத்தில் சாப்பிடுவது,
கிரகணக் காலத்தில் மந்திர ஜபம் செய்யாமல் இருப்பது,
கிரகண நேரத்தில் சிறு தானமேனும் செய்யாமல் இருப்பது இவை அனைத்தும் பாவம்.22 |
22.
Epic and
Puranic books should be read from time to time. Eating during the
eclipse period, not chanting mantras during the eclipse period, not
doing even small charity during the eclipse time are all sinful. |
|
ஆ,
கா,
மா,
வை என்று தொடங்கும் மாதங்களில் ஒருமுறையேனும் நதியில் நீராட வேண்டும்.
அப்படிச் செய்யாமல் இருப்பதும் பாவமே என்கிறது கருடபுராணம்.
23 |
23.
Bathe in the
river at least once in the months beginning with
Āh, Kā,
Mā,
Wai. Not doing so is also a sin, says Garuda Purana.
|
|
இவற்றுக்கெல்லாம் வாழும் காலத்திலேயே நாம் பிராயச்சித்தம் செய்தால் போதும்.
நம் பாவங்கள் விலகும். ஆனால்,
சில பாவங்கள் அப்படியல்ல. மிகவும் கடுமையானவை. அவற்றால் உண்டாகும்
விளைவுகளும் மோச மாக இருக்கும். எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று
எச்சரிக்கிறது கருடபுராணம்.
24 |
24.
It is enough
for us to atone for all these things in our lifetime. Our sins will be
removed. But some sins are not removed. Very harsh. The consequences
will be dire. Therefore, the Garuda Purana warns that they should be
avoided. |
|
வேதம் கற்ற புரோகிதர் ஒருவர்,
ஒழுக்கம் தவறிய பாவி ஒருவனுக்கு புரோகிதம் செய்துவைத்தால் பெரும்பாவம்
பீடிக்கும். மறுபிறவியில் அந்த புரோகிதர் பன்றியாகப் பிறக்க நேரும்.
25 |
25.
If a priest
who has studied the Vedas performs an initiation into priesthood for a
sinner who has lost his conduct, a great sin will afflict him. In the
next life the priest will be born as a pig. |
|
ஓர் ஊரில் பல புரோகிதர்கள் வாழும்போது,
ஒருவர் மட்டும் பாவியாக இருந்தால் அவரின் பாவம் அவர்கள் கூட்டத்தையே
பற்றிக்கொள்ளும். அவர்கள் மறுபிறவியில் கழுதைகளாகப் பிறப்பார்கள். 26 |
26.
When
there are many priests living in a city, if only one is a sinner, his
sin will take hold of their group. They will be reborn as donkeys. |
|
ஒரு நாளில் ஒருமுறைகூட மனத்தால் இறை வனை வணங்காமல் உணவு சாப்பிடுபவன்
மறுபிறவியில் குரங்காகப் பிறப்பான். பிறரைத் துன்புறுத்தி வயிறு வளர்ப்பவன்
பூனையாகப் பிறப்பான். 27 |
27.
One who eats
food without worshipping God even once a day will be born as a monkey in
the next life. He who pleases his palate by hurting others will be born
as a cat. |
|
செடி,
கொடிகளை அழித்து மரங்களை எரித்தவன்,
மறுபிறப்பில் மின்மினிப் பூச்சியாகப் பிறப்பான்.28 |
28.
He who
destroys plants and creepers and burns trees will be born as a firefly
in the next birth. |
|
ஒருவன் உண்ணக்கூடாத உண்ண விரும்பாத உணவை அவனை ஏமாற்றி உண்ணக் கொடுப்பது
பெரும்பாவம். அந்தப் பாவத்தைச் செய்தவர்கள் மறுபிறவியில் வண்டியிழுக்கும்
மாடாகப் பிறப்பார்கள்.29 |
29.
It is a
great sin to deceive a person into eating food that he should not eat or
does not want to eat. Those who have committed that sin will be reborn
as oxen pulling carts. |
|
ஒரு குடும்பத்தைக் கெடுத்தவனுக்கும்,
சாப்பிட அமர்ந்தவனை,
‘எழுந்து
போ’ என்று விரட்டியவனுக்கும் புத்திரப் பாக்கியம் கிடையாது.30 |
30.
One who
spoils a family and chases away the one who sits down to eat and says,
'Get up and go' is not blessed with a son. |
|
வீட்டுக்கு வந்த விருந்தினருக்குப் பழைய சோற்றைப் போடுவது (வேறு உணவு
இருக்கும்போது) நல்ல இலை இருக்கும்போது கிழிந்த இலையைப் போடுவது ஆகியன
பெரும்பாவமாகும். இதைச் செய்தவன் மறுபிறப்பில் கருங்குரங்காகப் பிறப்பான்.
31 |
31.
Throwing old
rice to a guest (when there is other food) and serving food in
a torn leaf when there is a good
leaf is a great sin. He who has done this will be born as a black monkey
in the next birth. |
|
ஆடைகளைத் திருடியவன் உடும்பாகப் பிறப்பான். பிறரைக் கொல்ல விஷம் கொடுத்த
வன் பாம்பாகப் பிறப்பான். கிணறு,
குளம் ஆகியவற்றை மூடி மக்களுக்குப் பயன்படாமல் செய்பவன் மீனாகப் பிறப்பான்.
32 |
32.
He who
steals clothes will be born as a lizard. He who gives poison to kill
others will be born as a snake. One who covers a well and a pond and
makes it useless for people will be born as a fish. |
|
நீதிக்கு எதிராகச் செயல்பட்டவன்,
தவறான நீதியைச் சொன்னவன் ஆகியோர் கோட்டானாகப் பிறப்பார்கள். 33 |
33.
The one who
acted against justice and the one who said wrong justice will be born as
an owl. |
|
பூ,
பிஞ்சு,
காய்,
கனி என செழித்திருக்கும் மரங்களை வெட்டுபவன் அடுத்த ஜன்மத்தில் எதற்கும்
தகுதியில்லாதவனாகப் பிறப்பான்.34 |
34.
One who cuts
down trees that flourish as flowers, shoots, fruits and ripe fruits will
be born in the next birth unworthy of anything. |
|
இப்படிப் பாவ புண்ணியங்களைப் பட்டியலிட்டு எச்சரிக்கிறது கருடபுராணம்.
காரணம்,
பாவங்கள் செய்யாமல் மனிதர்கள் வாழ வேண்டும் என்பதுதான். அப்போதுதான் இந்த
உலகம் சுபிட்சமாக இருக்கும்.
35
|
35.
Garuda
Puranam warns of such sins and virtues. The reason is that human beings
should live without committing sins. Only then will this world be
prosperous. |
|
பிற உயிர்கள்மீது கருணையும் அன்பும் கொண்டு வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை. சகல
உயிர்களிலும் அந்த இறைவன் இருக் கிறான் என்பதை உணர்ந்து அவற்றின் மீது
அன்பு செலுத்தும்போது அந்த வாழ்க்கையே சொர்க்கமாக மாறும். 36 |
36.
A good life
is to live with compassion and love for other beings. When we realize
that God is present in all beings and love them, that life itself
becomes heaven. |
|
இதை நோக்கித்தான் புராணங்களும் இதிகாசங்களும் வழிகாட்டுகின்றன. மகான்களும்
இறைத்தூதர்களும் அதைத்தான் போதிக்கிறார்கள்.
37
|
37.
This is how
the Puranas and Epics show the ways. That is what the saints and
prophets teach. |
|
அப்படிபட்ட நல்ல போதனைகளின் தொகுப்பே கருடபுராணம். இவற்றை எல்லாம்
மக்களுக்குத் தொகுத்துக்கூற கருடன் முற்படுகிறான். 38 |
38.
Garuda
Purana is a collection of such good teachings. Garuda tries to summarize
all this to the people. |
|
சரி,
யார் இந்த கருடன்?
தெரிந்துகொள்வோம் வாருங்கள்.39
- தொடரும்... |
39. Well,
who is this Garuda? Let's find out.
-Continue... |