| GP19CausesOfHardshipAndRemedies | |
| கருட புராண ரகசியங்கள்-19: நம்
கஷ்டங்களுக்கு காரணம் பாவ புண்ணியங்களா! ரகசியமான விளக்கம் இதோ! இல.சைலபதி 4 Min Read கருட புராண ரகசியங்கள்-19: நம் கஷ்டங்களுக்கு காரணம் பாவ புண்ணியங்களா! ரகசியமான விளக்கம் இதோ! Published:23 Dec 2024 3 PM Updated:23 Dec 2024 3 PM கருட புராண ரகசியங்கள் கருட புராண ரகசியங்கள் Join Our Channel 1 Comments Share 0 |
Garuda Purana Secrets-19: Are Our Troubles Caused By Sins and Virtues?
Here's the secret explanation! L. Shailapathy 4 Min Read Garuda Purana Secrets-19: Are Our Troubles Caused By Sins and Virtues? Here's the secret explanation! Published:23 Dec 2024 3 PM Updated:23 Dec 2024 3 PM கருட புராண ரகசியங்கள் Secrets of Garuda Purana Join Our Channel 1 Comments Share |
| கருட புராண ரகசியங்கள்-19: நம் கஷ்டங்களுக்கு காரணம் பாவ புண்ணியங்களா! ரகசியமான விளக்கம் இதோ!1 | 1. Garuda Purana Secrets-19:
Are Our Troubles Caused By Sins and Virtues? Here's the secret
explanation! |
| கருட புராண ரகசியங்கள் கருடனின் மூலம் இந்த உலகுக்கும் உயிர்களுக்கும் பகவான் மகாவிஷ்ணு அளித்த நல்லுபதேசங்களை விரிவாக விளக்குகிறது கருடபுராணம். வினைகளுக்கு ஏற்ப நிகழும் பிறவிகளின் தன்மைகள், தவறு களுக்கும் பாவங்களுக்குமான தண்டனை விளைவுகள் அனைத்தையும் பேசுகிறது கருட புராணம்!2 |
2. Secrets of Garuda Purana Garuda Purana explains in detail the teachings of Lord Vishnu to the world and the living beings through Garuda. Garuda Purana talks about the nature of births according to actions, the consequences of punishment for mistakes and sins. |
| இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
கணியன் பூங்குன்றன் எழுதிய வரிகளைப் பாருங்கள்... யாதும் ஊரே; யாவரும் கேளிர்; 1 தீதும் நன்றும் பிறர்தர வாரா; 2 நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; 3 சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் 4 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே 5 வாழ்வின் நிதர்சனம் இந்தப் பாடல். `இவ்வுலகில் உள்ள ஊர் எல்லாம் நம்முடைய ஊர். உலக மக்கள் அனைவரும் நம் உறவினர் கள்' என்ற பொருளோடு தொடங்கும் இந்தப் பாடல், அடுத்து மாபெரும் உண்மையைப் பேசுகிறது.3 |
3. Look at the lines written
by Kaniyan Poongundran two thousand years ago... Anything is my town; all are my kith and kin Good and bad are not done to you by others for us to get.2 Pain and releif are not ours;3 Death and resurrection are life anew.4 Sweetness as cause of Happyiness not to be happy5 This song is the reality of life. "All places in this world are ours. The song begins with the meaning 'All the people of the world are our relatives' and then speaks the great truth. |
| தீதும் நன்றும் பிறர்தர வாரா.' நன்மையோ, தீமையோ வேறு யாரும் நமக்குச் செய்ய முடியாது. அப்படியானால் அவை நம் வாழ்வில் எப்படி நிகழ்கின்றன? ஏன் நிகழ்கின்றன? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் பிற சமயங்கள் தவித்தபோது, சநாதன தர்மம், `கர்மா' என்னும் கோட்பாட்டை உறுதியாகப் பேசியது.4 | 4. No one else can do good or harm to us. So how do they happen in our lives? Why do they happen? While other religions struggled to answer this question, Sanatana Dharma spoke firmly of the concept of Karma. |
| இந்த உலகில் சாவு என்பது புதியது அன்று. மனிதன் பிறந்த காலம் முதல் மரணத்தை எதிர்கொண்டு வருகிறான். ஆனாலும் வாழ்வின் மீது பற்று விட்டபாடில்லை. வாழும் ஒவ்வொரு கணமும் இன்பத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறான். இன்பத்தைத் தேடுவதில் எந்த உயிரும் பேதம் உடையதல்ல.5 | 5. Death is not new in this
world. Man has been facing death since birth. But he did not lose
interest in life. Every moment of his life he is running towards
happiness. No being is distinguishable in the pursuit of happiness. |
| ஆனால் எல்லோருக்கும் இன்பம் வசமாவது இல்லை. சிலர் துன்பத்தில் உழல்கிறார்கள். சிலர் நோயால் துன்புறுகிறார்கள். சிலரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரின் ஆன்மாவும், `ஏன் தனக்கு இவை ஏற்படுகின்றன' என்பதை ஆராயாமல், அவற்றில் இருந்து விடுபடுவது குறித்தே சிந்திப்பதோடு, இன்பத்தை அனுபவிக்கப்போகும் தினத்தைக் குறித்தக் கற்பனையிலேயே நாளைக் கழிக்கிறார்கள்.6 | 6. But not everyone has
happiness. Some people are suffering. Some people suffer from illness.
Some are in the grip of poverty. But the soul of all these people,
without examining 'why they are happening to them', thinks only of
getting rid of them, and spends the day imagining the day when they will
enjoy happiness. |
| புலன்களின் பாதையில் செல்லும் அவர்களின் பயணம், மரணத்தை தரிசிக்கும் போது திடுக்கிடுகிறது. மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறியாததால்தான் மனிதன் தொடர்ந்து பாவங்களைச் செய்து, தீவினைகளை அடைந்து பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கிறான். அவனுக்கு மரணத்தின் ரகசியத்தைச் சொல்லிவிட்டால் அவன் ஞானம் அடைந்து அதிலிருந்து வெளிவந்துவிடுவான் என்று கருதினார் கருடபகவான்.7 | 7. Their journey on the path
of the senses is startling when they see death. It is because of not
knowing what happens after death that man continues to commit sins and
suffer evil deeds and get caught in the cycle of birth. Lord Garuda
thought that if he was told the secret of death, he would attain
enlightenment and come out of it. |
| அதன் பொருட்டு, அவர் பகவான் விஷ்ணு விடம் மரணத்துக்குப் பின்னான வாழ்க்கை குறித்த ரகசியங்களைக் கேள்வியாகக் கேட்டு, அதை ஒரு புராணமாக்கிக் கொடுத்தார். அவற்றை முனிவர்களும் ரிஷிகளும் தொகுத்து நமக்கு நல்லதொரு ஞான நூலாகத் தந்திருக்கிறார்கள்.8 | 8. For this purpose, he asked
Lord Vishnu the secrets of life after death and made it into a Purana.
The sages and rishis have compiled them and given us a book of
knowledge. |
| கருடபுராணத்தை மரண நூலாகவும் மரணத்துக்குப் பின் செய்ய வேண்டிய சடங்குகளைச் சொல்லும் நூலாகவும் பலர் கருதுகிறார்கள். ஆனால் கருடபுராணம், நாம் வாழும்போது அறிந்து நம் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள உதவும் தர்மநூல்.9 | 9. Many consider the Garuda Purana to be a book of death and a book of rituals to be performed after death. But Garuda Purana is a Dharma book that helps us to learn while we are alive and enrich our lives. |
| அதனால்தான் இந்த நூலின் நிறைவாக... கருடபகவான் விஷ்ணுவிடம் இந்தப் புராணத் தின் சாரமான ஒரு கேள்வியைக் கேட்கிறார்.10 | 10. That's why the end of
this book... Lord Garuda asks Vishnu a question which is the essence of
this Purana. |
| கருட புராண ரகசியங்கள் ஒருவன் வாழும்போதே, பாவ புண்ணியம் எது? எந்தப் பாவத்தைச் செய்தால் எப்படிப் பட்ட பிறவி வாய்க்கும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்துகொண்டால், அவற்றிலிருந்து வெளியே வருவது எளிது. எனவே, அந்த மேன்மையான ஞானத்தைத் தமக்கு அருளுமாறு பகவான் விஷ்ணுவின் கேட்டார் கருடன். அவருக்குப் பகவான் சொல்லும் பதில் மிகவும் முக்கியமானது.11 |
11. Secrets of Garuda Purana While one is alive, what is the virtue or the sin? It is easy to come out of them if we know what kind of sin will result in what kind of birth or punishment will be meted out. So Garuda asked Lord Vishnu to grant him that superior knowledge. Bhagavan's answer to him is very important. |
| ``காசியபரின் மகனே, இந்த உலகில் வாழும்போது ஒருவன் செய்யும் பாவங்களே அவனை வினைகளாகத் தொடர்கின்றன. இழிபிறவிக்கு ஆளாக்குகின்றன. அதுபற்றி விரிவாக ஏற்கெனவே சொல்லியிருந்தாலும், தற்போது அதன் சாரத்தைச் சொல்கிறேன்.12 | 12. "O son of Kāśyapa, the
sins one commits while living in this world pursue him as his actions.
They make his liable for low birth. I have already dealt with it in
detail, but now I will give you the gist of it. |
| ஒரு கிராமத்தில் பல புரோகிதர்கள் இருந்து அவர்களில் ஒருவன் பாவம் செய்தால் அந்தப் பாவம் அனைத்துப் புரோகிதர்களையும் சாரும். ஒரு கிராமத்தில் ஒரு புரோகிதன் மட்டுமே இருந்து, அவன் பாவம் செய்தால் அது அவனை மட்டுமே சாரும். அப்படிப் பாவம் செய்த புரோகிதன் மறு பிறவியில் கழுதையாகப் பிறப்பான்.13 | 13. If there are many priests
in a village and one of them commits a sin, the sin belongs to all the
priests. If there is only one priest in a village and he commits a sin,
it belongs to him alone. The priest who committed such a sin was reborn
as a donkey in the next birth. |
| ஸ்நானமும் சந்தியாவந்தனமும் தேவ ஆராதனமும் செய்யாமல் உணவை உட்கொள்பவன், மறு பிறவியில் காக்கையாகப் பிறப்பான்.14 | 14. One who eats food without bathing, sandhyavandanam and worshipping the gods, will be born as a crow in the next birth. |
| மனிதர்கள் அனைவரும் வீடு அல்லது பந்தல் அடியில் அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்ணா மல் வெட்டவெளியில் நின்றபடி ஒருவன் உணவு உட்கொண்டால், அவன் மறு பிறவியில் காட்டில் அலைந்து திரியும் குரங்காகப் பிறப்பான். எல்லோரும் அச்சமூட்டும்படிப் பேசுபவன், பூனை ஜன்மம் எடுப்பான். காட்டுக்குத் தீ வைத்தவன் மின்மினிப் பூச்சியாவான்.15 | 15. All human beings should sit under the house or pandal and eat food. If one eats food standing in the open air, he will be born in the next life as a monkey wandering in the forest. The one who talks to everyone, is frightening, will take the birth of a cat. He who set fire to the forest becomes a firefly. |
| ஒருவனை ஏமாற்றி அவன் புசிக்கக் கூடாத உணவைத் தந்து புசிக்க வைப்ப வன், மறுபிறப்பில் வண்டியை இழுக்கும் எருதுவாகப் பிறப்பான். பிறரின் ஆடைகளைத் திருடியவன் உடும்பு ஜன்மம் எடுப்பான்.16 | 16. He who deceives a man and makes him eat food which he should not eat, will be born in the next birth as an ox pulling a cart. He who steals other people's clothes will take birth as a lizard. |
| துறவியின் மனைவியைப் புணர்ந்தவன் பிசாசாக மாறுவான். குருவின் மனைவியை விரும்பியவன் ஓணானாகப் பிறப்பெடுப்பான். குளம், கிணறு வெட்டி, அதைப் பிறகு தூர்த்துப்போகச் செய்தவன் மீனாகப் பிறப்பான். கனி, காய்களுடன் இருக்கும் மரத்தை வெட்டுபவன் ஒரு தகுதியும் இல்லாத வனாகப் பிறப்பெடுப்பான்.17 | 17. He who consorts with the wife of a saint becomes a devil. One who desires the wife of the Guru will be born as lizard. He who dug a pond and a well and then desilted it will be born as a fish. He who cuts down a tree with unripe fruits and ripe fruits will be born without any merit. |
| மரணம் அடைந்தபின் யமலோகம் செல்லும் வழியில் உள்ள வைதரணி என்னும் நதியைக் குறித்து முன்பே சொல்லியிருக்கிறேன். அந்த நதியில் வீழ்ந்து யாரெல்லாம் துன்புறுவார்கள் என்பதை இப்போது மீண்டும் சொல்கிறேன்.18 | 18. I have already told you about the river Vaitarani on the way to Yamaloka after death. Now I will tell you again who will suffer by falling into that river. |
| தனக்கு இணையாக ஒருவனும் இல்லை என்று செருக்குற்றுத் திரிகிறவர், தாய் - தந்தையரையும், குருவையும், புரோகிதனையும் அவமதித்தவர், தன்னை நேசித்தவனுக்கும் தனக் குப் பிழைப்பதற்குரிய ஜீவன் உபாயத் தொழிலை ஏற்படுத்தித் தந்தவனுக்கும் துரோகம் செய்தவர் ஆகியோரும்...19 | 19. He who boasted that there was no one equal to him, who insulted his parents, his guru and his priest, who betrayed the one who loved him and the one who gave him a means of earning a living... |
| ஸ்திரிகளுக்கும் குழந்தைகளுக் கும் உடல் உறுப்புக் குறைவுள்ளவர் களுக்கும் தீங்கு செய்தவர், புரோகிதனின் மனைவியைக் கூடி அனுபவித்தவர், ஸ்ரீமந் நாராயண பாகவத புராணச் சொற்பொழிவுகளை ஆற்றும் இடத்தில் வீண் வார்த்தை களைப் பேசியவர், திருமண தருணத் தில் கன்னியர் குறித்துக் குறை சொன்ன வர், தோஷம் கற்பித்தவர் ஆகியோரும்...20 | 20. He who has harmed women,
children, and the disabled, who has enjoyed the wife of a priest, who
has spoken idle words at the place where discourses on the Mannarayana
Bhagavata Purana are delivered, who spoke ill of virgins at the time of
marriage, and who has taught dosha... |
| பசு முதலிய மிருகங்களுக்குத் தண்ணீர் தராமல் மறுத்தவர், பதவியில் இருந்துகொண்டு தனக்குரியவர்களுக்கு மிகுதியாகவும் பிறருக்குக் குறைவாகவும் கொடுத்தவர், ஒரு பொருளை ஒருவனுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு அதை அவனுக்குக் கொடுத்துவிட்டோமே என்று துக்கிப்பவர் ஆகியோரும்...21 | 21. He who refuses to give water to cows and other animals, one who gives more to his own people and less to others while in office, one who gives something to a man and then regrets that he has given it to him.. |
| தர்மானுஷ்டானங்களை விட்டுப் புலால் உணவை உண்ட பிராமணர்கள், பகவான் இல்லை என்று வீண் வாதம் செய்தவர், எப்போதும் பிறரைக் கோபித்துக் கொள்பவர் ஆகியோரும் வைதரணி நதியிலேயே மூழ்கி, மிருகங்களாலும் முதலைகளாலும் மிகவும் துன்பம் அடைவார்கள் என்பதை அறிந்துகொள்.22 | 22. Know that Brāhmaṇas who have given up their virtues and have eaten meat, who have vain argument that there is no God, and who are always angry with others, will also drown in the river Vaitarani and suffer greatly from beasts and crocodiles. |
| எனவே, மனிதர்கள் வாழும் காலத்தில் தாம் அடைந்த நிலையை அறிந்து நல்வழிக்குத் திரும்பி, மறுபிறப்பில் மோசமான நிலையை அடையாது இருக்கவேண்டும். அதற்காகவே இந்த அற்புதமான புராணத்தை உனக்கு நான் சொன்னேன். உன் மூலம் இந்த உலகம் முழுமையும் இதை அறிந்து பயன்பெறட்டும்.23 | 23. Therefore, human beings should know the state they have attained during their lifetime and return to the right path and not attain a bad state in the next birth. That is why I told you this wonderful legend. Let the whole world know this and benefit from you. |
| வைனதேயா, தீவினை செய்யாமல் நல்வினை செய்த ஜீவன், இறுதியை அடைந்த பிறகு சொர்க்கம் வாசம் செய்து, நல்ல கோத்திரத்தில் - உத்தமக் குலத்தில் சர்வசாஸ்திர சம்பன்னனாய், தர்ம சிந்தனை உடையவனாய்ப் பிறந்து நல்வாழ்வு வாழும். ஒருவனின் தந்தை மரித்தபோது அந்தத் தீட்டு நீங்குவதற்குள்ளாக, புத்திரனானவன் இந்தப் புராணத்தை கேட்பான் என்றால், அந்தத் தந்தை இன்ப வீடாகிய நமது நல்லுலகை அடைவார். அவரது பித்ருக்களும் நற்கதி அடைவார்கள்.24 | 24. O Vainadeya, the living
entity who has done good deeds without doing evil, after attaining the
end, will reside in heaven and will be born in a good gotra – the best
clan, with all the scriptures and righteous thoughts, and will live a
good life. When one's father died, before the pollution was removed, if
a son listens to this legend, that father will attain our good world,
the home of happiness. His ancestors will also attain good fortune. |
| சங்கராந்தி அன்றும், விசு என்னும் புண்ணிய தினத்திலும், கிரகணப் புண்ணிய காலத்திலும், சிராத்த தினத்திலும் இந்தப் புராணத்தைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், படிக்கச் செய்வோரும் தம் வாழ்வின் இறுதியில் நல்லதை அடைவார்கள்.25 | 25. Those who read, listen and have this Puranam read on Sankranti, Visu, Eclipse Punyakalam and Sraddha day will attain good results at the end of their lives. |
| கோடி கன்னிகா தானம் செய்வதாலும், 100 முறை ஷோடச மகாதானம் செய்வதாலும், கயா சிராத்தம் செய்வதாலும் வருகிற புண்ணியங்கள் அனைத்தும் இந்தப் புராணத்தைப் படிக்க வைத்துக் கேட்டாலும் படித்தாலும் உண்டாகும்.26 | 26. All the merits that come from donating crores of Kannikas, doing Shodasa Mahadaan 100 times, performing Gaya Sraddha will be attained by making one read this Puranam and listen to it. |
| ஜீவனுக்கு எமலோக பயத்தைப்
போக்குவதும் மோட்ச மார்க்கத்தைத் தெரிவிப்பதும் ஆகிய இந்தப் புராணத்தை உலக
நன்மையின் பொருட்டு உனக்கு நான் சொன்னேன்'' என்று கூறி கருடனுக்கு ஆசிகூறி
அருள்பாலித்தார் பகவான் விஷ்ணு!27 (கருட புராணம் நிறைவுற்றது) |
27. I have told you this
Puranam for the benefit of the world, which removes the fear of Yamaloka
to the living entity and to show the path of moksha," said Lord Vishnu
and blessed Garuda. (Garuda Purana completed) |