| HanumanTemplesOfferRemedialBenefits | |
| Machine translation was edited for clarity. | |
| விழாக்கள் /
விசேஷங்கள் spiritual temples வெற்றிகள் அருளும் நெற்றிக் கண் ஆஞ்சநேயர்! பரிகாரப் பலன்கள் தரும் அனுமன் ஆலயங்கள்! சக்தி விகடன் டீம் 4 Min Read அமாவாசை நாளில், இவருக்கு வெற்றிலை மாலை சாத்தி வேண்டிக்கொண்டால், வாழ்வில் நல்ல திருப்பங்களும் முன்னேற்றமும் உண்டாகும். சனிக்கிழமைகளில் விளக்கேற்றி, வடை மாலை சாத்தி வணங்கினால் சனிக்கிரக தோஷங்கள் நீங்கும். Published:23 Dec 2024 3 PM Updated:23 Dec 2024 3 PM அனுமன் ஆலயங்கள் அனுமன் ஆலயங்கள் Join Our Channel 2 Comments Share |
Anjaneya has
the forehead eye that bestows success! Hanuman Temples Offer Remedial
Benefits! Shakthi Vikatan Team 4 Min Read On the new moon day, offering a betel leaf garland to the deity will bring good turns and progress in life. Devotees light lamps on Saturdays and offer vada garlands to get relief from adverse effects of Saturn. Published:23 Dec 2024 3 PM Sakthi Vikatan Updated:23 Dec 2024 3 PM Hanuman Temples Join Our Channel 2 Comments Share |
| வெற்றிகள் அருளும் நெற்றிக் கண் ஆஞ்சநேயர்! பரிகாரப் பலன்கள் தரும் அனுமன் ஆலயங்கள்! வரும் 30.12.24 திங்களன்று ஸ்ரீஅனுமத் ஜயந்தி. இந்தத் திருநாளில், அபூர்வ பலன்களை அள்ளி வழங்கும் - அனுமன் அருளோச்சும் ஆலயங்களின் மகிமையைப் படித்து மகிழ்வோம். 1 | 1. Anjaneya's forehead third eye that bestows success! Hanuman Temples Offer Remedial Benefits! Sri Hanuman Jayanthi will be celebrated on Monday, 30.12.24. On this day, let us read about the magnificence of the temples blessed by Hanuman – which yield rare benefits. |
| அனுமன் ஆலயங்கள் அஞ்சனை மைந்தனாம் அனுமன், சீதாபிராட்டியால் `சிரஞ்ஜீவி' என்று ஆசிர்வதிக்கப்பட்டவர். அவரை வழிபடும் அன்பர்களை எவ்வித துயரங்களும் அணுகாது என்கின்றன ஞானநூல்கள். அதுமட்டுமா? நம் மனதில் உள்ள ராட்சஸ குணங்களையும் அனுமனின் சக்தி அழித்து விடுமாம். அற்புதமான ஒரு ஸ்லோகம் உண்டு. 2 |
2. Hanuman Temples Anjani's son Hanuman was blessed by Sita as 'Chiranjeevi' (Long-lived person). The scriptures say that no sorrow will approach the devotees who worship him. Is that all? Hanuman's power destroys all the demonic qualities in our minds. There is a wonderful sloka. |
| யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் =
यत्र यत्र रघुनाथकीर्तनं தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் तत्र तत्र कृतमस्तकांजलिम् பாஷ்பவாரி பரிபூரண லோசனம் वाष्पवारिपरिपूर्णालोचनं மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் मारुतिं नमत राक्षसान्तकम् ॥ |
3.
Yatra Yatra Raghunatha Keerthanam,
Tatra Tatra Krutamastha Kanchalim Bhaashpavari Paripoorna Lochanam, Maruthim Namatha Rakshasanthakam Wherever the Glories of Raghunatha are Sung, there, with Hands held over His Bowed Head in Salutation, ... .. and Eyes Filled with Tears, Maruti (Bhakta Hanuman) is Present;I Salute Maruti Who puts an End to the Rakshasas - here demonic qualities. |
| "Wherever Sri Rama's name is chanted, know that Hanuman is the one who appears with tears in his eyes with devotional ecstasy." The last line 'Rakshasanthakam' refers to 'He is the destroyer of the demonic qualities like arrogance, ego, anger and hatred that are stagnant in our hearts'. | |
| ‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் கருத்து. கடைசி வரியில் உள்ள ‘ராக்ஷஸாந்தகம்’ என்பது, ‘அவர் நம் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், துவேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும். 4 | 4. "Wherever Sri Rama's name is chanted, know that Hanuman is the one who appears with tears in his eyes with devotional ecstasy." The last line 'Rakshasanthakam' refers to 'He is the destroyer of the demonic qualities like arrogance, ego, anger and hatred that are stagnant in our hearts'. |
| மேற்குறிப்பிட்ட அகப் பகைகளை மட்டுமல்ல... வறுமை, கடன், பிணிப்பாதிப்புகள், தோஷங்கள், தடைகள், துரோகங்கள், சூழ்ச்சி, சத்ரு தொல்லைகள் போன்ற வெளிப் பகைகளையும் விரட்டி நம்மைக் காப்பவர் ராமதுதனான அனுமன்! 5 | 5. Not only the above internal enmies... Hanuman
protects us from poverty, debts, diseases, doshas, obstacles, betrayals,
intrigue and enemies. |
| வாயு புத்திரனான ஆஞ்சநேயரின் அருளால் நம் புத்தி பலமாகும்; சிந்தனை தெளிவாகும்; நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஜயமாகும். வரும் 30.12.24 திங்களன்று ஸ்ரீஅனுமத் ஜயந்தி. இந்தத் திருநாளில், அபூர்வ பலன்களை அள்ளி வழங்கும் - அனுமன் அருளோச்சும் ஆலயங்களின் மகிமையைப் படித்து மகிழ்வோம். 6 | 6. With the grace of Anjaneya, the son of Vayu,
our intellect will be strengthenedand sharpened: Thinking becomes clear;
Every effort we make will be successful. Sri Hanuman Jayanthi will be
celebrated on Monday, December 30, 2024. On this day, let us read about
the magnificence of the temples blessed by Hanuman – which confer rare
benefits. |
| வெற்றிகள் அருளும் நெற்றிக்கண் ஆஞ்சநேயர்! சிவபெருமானைப் போன்று மூன்று கண்களுடனும், பத்து திருக்கரங்களுடனும் ‘திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்’ கோயில் கொண்டிருக்கும் தலம்தான், அனந்தமங்கலம். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ளது இவ்வூர். பிரசித்திபெற்ற திருக்கடவூரிலிருந்து 3 கி.மீ. தொலைவு. 7 |
7. Three-eyed Anjaneya blesses you with success! Ananthamangalam is the location of a temple dedicated to Veera Anjaneyar in the likeness of Lord Shiva with three eyes and ten hands. It is located near Tharangambadi in Nagapattinam district. It is 3 km far from Thirukkadavoor. |
| இங்கே, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக் கோயிலில், தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார் இந்த ஆஞ்சநேயர். திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி காட்சி தருகிறார். வேறெங்கும் காண்பதற்கரிய திருமேனி இது என்பது குறிப்பிடத்தக்கது. 8 | 8. Sri Anjaneya graces from the southfacing shrine of Sri Rajagopala Perumal with His consort Sri Chengamalavalli Thayar built during the Vijayanagara Kings' period. He is holding weapons like conch, discus, bow, arrow and trident in His hands. It is noteworthy that this is an idol (holy body of rare occurence) that cannot be seen anywhere else. |
| திரேதாயுகத்தில் ராமபிரான் ராவண சம்ஹாரம் முடித்துவிட்டு, சீதா பிராட்டியுடன் அயோத்தி திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார். அவரிடம் முனிவர், உலக நன்மையை முன்னிட்டு கொடிய அசுரர்களான ரக்த பிந்து, ரக்த ராட்சகன் ஆகியோரை அழிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று அசுரரை அழித்துவரும்படி அனுமனைப் பணித்தார் ராமபிரான். 9 | 9. In Treta Yuga, Lord Rama was returning to Ayodhya with Sita after completing the destruction of Ravana. On the way, he visited the ashram of Sage Bharadwaja. The sage requested him to destroy the demons Rakta Bindu and Rakta Rakshaka for the welfare of the world. Lord Rama ordered Hanuman to destroy the demons. |
| அனுமனும் ஆயத்தமானார். அப்போது, ராமனின் வில்-அம்புகள், விஷ்ணுவின் ஆயுதங் களான சங்கு-சக்கரம், சிவபெருமானின் திரிசூலம், அம்பிகையின் அங்குச-பாசம், ருத்ரனின் மழு ஆயுதம் ஆகியவை அவருக்குக் கொடுக்கப்பட்டன. அனைத்துக்கும் மேலாக சிவபெருமான் தம்முடைய நெற்றிக் கண்ணையும் வழங்கினார் என்கிறது புராணம். 10 | 10. Hanuman was ready. He was given the bow and arrows of Rama, the conch-discus of Vishnu, the trident of Lord Shiva, the angusa-pasa (Anchor Chain) of Ambica and the Mazhu (Battle axe) weapon of Rudra. Legend has it that Lord Shiva bestowed his forehead third eye above all. |
| இப்படி அனைத்து தெய்வங்களாலும் வலிமைபெற்ற ஆஞ்சநேயர், அரக்கர்களை சம்ஹாரம் செய்து திரும்பினார். வரும் வழியில், கடற்கரையோரத்தில் ஆனந்தமாக ஆஞ்சநேயர் தங்கிய தலமே ஆனந்த மங்கலம். அதுவே, தற்போது அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்கிறது தலவரலாறு. இந்த அனுமனைத் தரிசிப்பதால், மேற்சொன்ன அனைத்து தெய்வங்களின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். மட்டுமன்றி இவர் திரிநேத்ரம் கொண்டுள்ளவர் அல்லவா? இவரின் நெற்றிக்கண் சகல பாவங்களையும், தோஷங்களையும், பிணிப் பாதிப்புகளையும் பொசுக்கவல்லதாம். 11 | 11. Thus Anjaneya, made powerful by all the deities, destoyed the demon and returned. On the way, Aananda Mangalam is the place where Sri Anjaneya stayed happily on the seashore. The temple history says that it is now known as Ananthamangalam. By worshipping this Hanuman, one can get the blessings of all the above mentioned deities simultaneously. Moreover, is he not Trinethra (three-eyed)? His forehead eye is capable of burning all sins, doshas and diseases. |
| உடல் நலம் குன்றியவர்கள், பில்லி-சூனியம் மற்றும் ஏவல் என பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து 9 அகல் விளக்குகளில் நல்லெண் ணெயில் எள் தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் தீராத நோயும் தீரும்; தீய சக்திகள் விலகி ஓடும்; சத்ரு பயம் நீங்கும் என்கிறார்கள். 12 | 12. Those suffering from witchcraft and instigated witchcraft come to this temple and worship by lighting sesame oil lamps in 9 earthen lamps. This will cure chronic diseases; Evil spirits will flee; It is said that the fear of enemies will be removed. |
| இந்த அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, வடை மாலை, பூமாலை என பஞ்ச மாலைகளை (ஐந்து மாலைகள்) அணிவித்து வணங்கினால், அனைத்து தோஷங்களும் நீங்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 13 | 13. Devotees worship Lord Hanuman with five garlands – betel leaf garland, tulsi or Holy Basil garland, lemon garland, vada garland and flower garland. It is believed that you will get complete success in the tasks taken |
| அனுமன் ஆலயங்கள் பாரிஜாதப் பூமாலை சார்த்தி, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை மாலை, சுண்டல்... இவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வியாபாரம் சிறக்கும். திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்! 14 |
14. Hanuman Temples Parijatha flower garland, Kumkum archana, Pongal, tamarind, curd rice, vada garland, sundal... If any one of these is offered and prayed, business will prosper. It is believed that the marriage ban will be lifted! |
| கல்யாண வரம் தருவார் கிண்டி வீர ஆஞ்சநேயர் சென்னை கிண்டி, எம்.கே.என். சாலையில் அமைந்துள்ளது, ஸ்ரீவீரஆஞ்சநேயர் ஆலயம். இங்கு அருளும் அனுமன், ஸ்ரீமத்வரின் சீடர் பரம்பரையில் தோன்றிய ஸ்ரீவியாஸராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். இந்தக் கோயிலில் ஸ்ரீவேணுகோபாலன், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சமேத அழகிய மணவாளப்பெருமாள், ராமாநுஜர் ஆகியோரை தரிசிக்கலாம்.15 |
15. Guindy Veera Anjaneya will grant marriage
boon Chennai Guindy, MKN Sri Veera Anjaneya Temple is present on the road named after the deity. Hanuman here was installed by Sri Vyasaraya who was born in the lineage of disciples of Srimadva. Devotees can have the darshan of Lord Sri Venugopalan, Lord Narasimha, Chakkarathazhwar, Sri Azhagia Manavalapperumal with His consorts Andal, and Sri Ramanuja. |
| மேற்குநோக்கி அருளும் வீரஆஞ்சநேயர், தெற்கு நோக்கி நடப்பதுபோல் இருக்கிறார். அவரின் திருப்பாதங்களில் தண்டை, நூபூரம் அணிந்துள்ளார். வலக்கரத்தில் அபயமுத்திரை திகழ, இடக்கரத்தை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கரத்தில் சௌகந்திகா புஷ்பமும் திகழ்வது சிறப்பு. வால்நுனியில் சிறு மணி திகழ்வது அற்புதம்! 16 | 16. Lord Veera Anjaneya graces facing west as if
walking towards south. He wears Dhandai and Nupooram on His feet. He
sports Abhaya Mudra in His right hand and His left hand rests on His
hip. Sowgandika flower is also in that hand. The little bell on the tip
of the tail is wonderful! |
| இவருக்கு, தொடர்ந்து 9 வியாழக்கிழமைகள் வெற்றிலை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, கோயிலில் உள்ள அணையா விளக்கில் நெய் சேர்த்து, 9 முறை கோயில் முழுவதும் வலம் வந்து வழிபட வேண்டும். ஒன்பதாவது வாரம் வடைமாலை சாத்தி, ஜாதகத்தை சுவாமி திருவடியில் வைத்துச் சமர்ப்பித்தால், விரைவில் கல்யாணம் கூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அமாவாசை தினத்தில் இவரை வழிபட்டால் காரிய ஸித்தி உண்டாகும்! 17 | 17. He should be garlanded with betel leaves for
9 consecutive Thursdays, perform archanas, add ghee to the
unextinguished lamp and go round the temple 9 times. It is the belief of
the devotees that if they offer Vadaimala in the ninth week and place
their horoscope at the feet of the Lord, the marriage will take place
soon. Worshipping Him on Amavasya day will bring success in tasks! |
| காடு ஹனுமந்தராய ஸ்வாமி! திருப்பம் தரும் கடலூர் அனுமன்! 18கடலூரிலும் ஒரு வீரஆஞ்சநேயர் அருள் கிறார். கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இவரின் ஆலயம். இந்த அனுமன் வனத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டவராம். 18 |
18. Forest Hanumantharaya Swami! Cuddalore Hanuman gives a turn for better. There is also a Veera Anjaneya in Cuddalore. The temple is 1 km from Cuddalore bus stand. This Hanuman was found in and removed from the forest and installed in the present location. |
| அமாவாசை நாளில், இவருக்கு வெற்றிலை மாலை சாத்தி வேண்டிக்கொண்டால், வாழ்வில் நல்ல திருப்பங்களும் முன்னேற்றமும் உண்டாகும். சனிக்கிழமைகளில் விளக்கேற்றி, வடை மாலை சாத்தி வணங்கினால் சனிக்கிரக தோஷங்கள் நீங்கும். மங்கலகாரியங்களில் உள்ள தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 19 | 19. On the new moon day, offering a betel leaf garland to the deity will bring a good turn for the better and progress in life. Devotees light lamps on Saturdays and offer vada garlands to get relieved from adverse effects of Saturn. It is believed that obstacles in auspicious activities will be removed. |
| காடு ஹனுமந்தராய ஸ்வாமி! திருப்பூர் மாவட்டம் - தாராபுரத்தில், அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகாடு ஹனுமந்தராய ஸ்வாமி ஆலயம். ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்த 83-வது அனுமன் இவர். இந்தக் கோயிலில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீசீதாராமர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோரையும் தரிசிக்கலாம். 20 |
20. Forest Hanumantharaya Swami! Sri Kadu Hanumantharaya Swamy temple is 1 km from Dharapuram Amaravathi river in the Tiruppur district. He is the 83rd Hanuman installed by Sri Vyasaraya. Devotees can also have the darshan of Sri Lakshmi Narasimha, Sri Seetharama and Sri Raghavendra in this temple. |
| மூலவர் அனுமன், சுமார் ஏழு அடி உயரத்தில் இடுப்பில் மணி கட்டிக்கொண்டு, அபய ஹஸ்தத்துடன் அழகுறக் காட்சி தருகிறார். சனிக்கிழமை, அமாவாசை மற்றும் மூல நட்சத்திர தினங்களில், இந்த அனுமனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தத் தலத்தில் வேண்டிக்கொண்டு கோதானம் செய்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் உள்ள கால்நடைகள் ஆரோக்கியமாகத் திகழும் என்கின்றனர் பக்தர்கள்! 21 | 21. The presiding deity Hanuman is about seven feet tall with a bell tied around his waist with abhaya hasta (Have No-Fear Pose). Special pujas are performed to Hanuman on Saturdays, Amavasya - New Moon- and Moola star (19th lunar mansion) )days. If one prays in this place and does Godan - making a gift of a cow-, there will be prosperity in the house. Lakshmi's benevolence will be abundant. Devotees say that the cattle belonging to the house will be healthy! |
| பிள்ளை வரம் தரும் வெண்ணெய் பிரசாதம்! புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், சுமார் 29 கி.மீ தொலைவில் உள்ளது அழியாநிலை கிராமம். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியிலிருந்து இவ்வூருக்குச் செல்ல பேருந்து வசதி உண்டு. 22 |
22. Butter Offering for progeny- Children! Azhiyanilai village is about 29 km from Pudukkottai on the way to Aranthangi. Buses are available from Pudukkottai and Aranthangi to Azhiyanilai. |
| இந்தத் தலத்தில் ஒரே கல்லாலான, சுமார் 12 அடி உயரத்துடன் அருள்கிறார் விஸ்வரூப ஆஞ்சநேயர். இதே கோயிலில் சுமார் 33 அடி உயரத்துடன் பஞ்சமுக ஆஞ்சநேயரும் அருள்கிறார். ஆகவே இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும். 23 | 23. Lord Viswaroopa Anjaneya is a 12 feet tall monolith. Lord Panchamukha Anjaneya is 33 feet tall monolith in the same temple. So, if you come to this place and worship, you will get double benefits. |
| அனுமன் ஆலயங்கள் இங்கு வந்து அனுமனுக்கு நெய் விளக்கேற்றி, வடைமாலை சமர்ப்பித்து வழிபட, வியாபாரம் சிறக்கும்; தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். ராமநவமி நாளில் அனுமனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மஞ்சள் அரைப்பதற்காக, இங்கு ஏராளமான அம்மிக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. 24 |
24. Hanuman Temples Devotees come here and light ghee lamps to Lord Hanuman and offer Vadaimala to him. Devotee's business will thrive. The stalled marriage will take place. Things will come true as planned. On the day of Rama Navami, a yellow bracelet decoration is performed for Hanuman. A large number of mortar stones have been placed here for the devotees to grind turmeric. |
| Vadaimalai: Black Gram Fritter Garland. Skinned black gram is made into thick paste with added whole black pepper, or green chillies and deep fried. It looks like a smaller version of doughnuts with central holes. These fritters are strung together as a garland and applied on the idol. Yellow bracelet made of turmeric root and worn on the wrist. Turmeric is sacred. | |
| அனுமனுக்கு மஞ்சள் அரைத்து அலங்கரித்தால் குடும்பத்திலுள்ள பிரச்னைகள் நீங்கும், தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதிகம். 25 | 25. It is believed that application of turmeric on Lord Hanuman will remove family problems and promote harmony between the couple. |
| குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியர் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்து, அந்த வெண்ணெய்ப் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிட்டு வந்தால் விரைவில் புத்திர யோகம் உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. 26 | 26. It is the belief of the people of this region that if childless couples adorn Vishwaroopa Anjaneya with butter bracelet and eat the butter prasadam, they will soon have Puthra Yoga. |
| Vishwaroopa Anjaneya: Lord Hanuman appears in the Universal Form as comprising the whole universe, animate and inanimate. | |