SI25-SitaAvatarAccordingToRavana
The machine translation has been edited for clarity.
சீதாதேவி அவதாரம் குறித்து ராவணன் விவரிக்கும் தகவல்கள்- இராவணீயம் சொல்லும் ரகசியம்!
தி.தெய்வநாயகம் Ravana's Secret About Sita Avatar and his description. Rāvanīyam’s secrets.
T. Theyvanayagam   Sakthi Vikatan
ஶ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று, அவரின் அவதாரப் பணி நிறைவேற ஶ்ரீமகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி. அவரின் பிறப்பு, தோற்றம் பற்றிய விவரங்கள் வெவ்வேறு கதைகளில் வித்தியாசமான பரிமாணத்தில் காணப்படுகின்றன! Sita Devi is the incarnation of Goddess Mahalakshmi who stood by Sri Rama and fulfilled his incarnation. The details of his birth and appearance are seen in different stories in a different dimension!

Published:14 Apr 2025 2 PM  Sakthi Vikatan
Updated:14 Apr 2025 2 PM
ஶ்ரீசீதாராமன்
Published:14 Apr 2025 2 PM
Updated:14 Apr 2025 2 PM
ஶ்ரீசீதாராமன்
Sri Seetharaman
Join Our Channel
சீதாதேவி அவதாரம் குறித்து ராவணன் விவரிக்கும் தகவல்கள்- இராவணீயம் சொல்லும் ரகசியம்! சீதாதேவி அவதாரம் குறித்து ராவணன் விவரிக்கும் தகவல்கள்- இராவணீயம் சொல்லும் ரகசியம்!
Ravanīyam’s Secret About Sita Avatar, as described by Rāvana..
1. ராமநவமித் திருநாளை நாம் அறிவோம். அதேபோல், சீதா நவமி திருநாளும் கொண்டாடப்படுவது உண்டு. இந்நாளில் சீதாதேவியின் மகிமைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும், வீட்டில் லட்சுமிகடாட்சம் உண்டாகும்; பொன் - பொருள் - ஆபரணங்கள் சேரும்; பண வரவுக்குக் குறையே இருக்காது என்கின்றன ஞானநூல்கள்.
1. We know the festival of Ram Navami. Similarly, Sita Navami is also celebrated. Reading and listening to the glories of Goddess Sita on this day will bring Lakshmi kaṭākṣam at home. Gold - material - ornaments; Wisdom books say that there will be no shortage of money.

லட்சுமிகடாட்சம் = Lakshmi kaṭākṣam = Lakshmi ‘s– Goddess of Wealth- side glance (= Grace).
2. சீதாதேவி அவதாரம் குறித்து ராவணன் விவரிக்கும் தகவல்கள்- இராவணீயம் சொல்லும் ரகசியம்!
ராம நவமிக்கு அடுத்து வரும் நவமியில். அதாவது, உத்திராட நட்சத்திரமும் தேய்பிறை நவமியும் கூடிய புண்ணிய திருநாளையே சீதாநவமியாக வட மாநிலத்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
2. Ravanīyam’s Secret About Sita’s Avatar, as described by Rāvana.

On the Navami following RamaNavami. Sita Navami is celebrated by the people of North India on the auspicious day of Uthrada star and the waning moon Navami.
நவமி = Navami = the ninth lunar day after the new or full moon. Uthrada = The 21st nakṣatra
3. சீதாதேவி அவதரித்த புனித தலத்தின் பெயர் ஸீதாமடி. இது, பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சீதாநவமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் நாமும், சீதாதேவியின் மகத்துவங்களை நினைவுகூர்வது வழிபடுவது சிறப்பு!
3. The name of the holy place where Goddess Sita was born is Sīthamadi. It is about 120 km from Patna, the capital of Bihar. Far away. Sita Navami is specially celebrated here. On this day, we also remember and worship the greatness of Goddess Sita.
4. வால்மீகி ராமாயணத்தைத் தழுவி பல ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் ஶ்ரீராமனின் புகழ்பாடும் காவியங்களாகத் திகழ்கின்றன. இது பலருக்கும் தெரியும். ஆனால், ‘சீதாயணம்’ என்ற காவியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
4. Many Ramayanas based on Valmiki Ramayana are epics in praise of Sri Rama in different languages. Many people know this. But how many of us know the epic 'Sīthayanam'?
5. ‘அயனம்’ என்பது வழிநடந்த பாதை யைக் குறிக்கும். ஶ்ரீராமன் நடந்து சென்ற பாதையும், அவர் காட்டிய தர்மநெறிகளுமே ராமாயணமாகத் திகழ்கின்றன என்றால், ராமாயணத்தின் தெய்வீகக் கதாநாயகி சீதை வாழ்ந்து காட்டிய வரலாறு ‘சீதாயணம்’ என்று ஆன்மிக ஆன்றோர்களால் போற்றப் படுகிறது. இதை, ராமாயணத்தின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
5. 'Ayanam' refers to the path taken. If the path walked by Sri Rama and the ethics shown by him is the Ramayana, then the history of the life of Sita, the divine heroine of Ramayana, is hailed as 'Sitāyanam' by the spiritual scholars. We can take this as a part of the Ramayana.
6. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஶ்ரீமகாவிஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ராமாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில் ஶ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று, அவரின் அவதாரப் பணி நிறைவேற விஷ்ணு பத்தினி மகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி. அவரின் பிறப்பு, தோற்றம் பற்றிய விவரங்கள் வெவ்வேறு கதைகளில் வித்தியாசமான பரிமாணத்தில் காணப்படுகின்றன.
6. Rama Avatar is one of the 10 incarnations of Lord Vishnu to destroy Adharma and establish Dharma. Sita Devi is the incarnation of Mahalakshmi, the wife of Lord Vishnu, to support Sri Rama in this incarnation. The details of his birth and appearance are seen in different stories in a different dimension.
1. Adharma = that which is unrighteous, unjust, uncharitable
7. வால்மீகி ராமாயணம் சொல்லும் கதை!
வால்மீகி ராமாயணத்தின்படி, மிதிலை நகர் மன்னர் ஜனகர் ஒரு யாகத்தைச் செய்து முடித்து, தங்கத்தால் ஆன உழுகருவியை ஏர்கொண்டு பூட்டி நிலத்தை உழுதார். அப்போது, பூமியில் புதைந்து கிடந்த ஒரு வண்ணப்பெட்டகம் தட்டுப்பட்டு, அதனுள் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. பூமித்தாய் தந்த புத்திரியாக ஏற்று, அவளுக்கு ஜானகி என்று பெயரிட்டார் ஜனகர். சீராட்டி வளர்த்த அந்த மகள் பெரியவள் ஆனதும், அவளுக்காக சுயம்வரம் நடத்தினார். யாராலும் தூக்கமுடியாத சிவ தனுஸை, தசரதன் மைந்தன் ஶ்ரீராமன் வளைத்து முறித்து ஜானகியின் கரம் பற்றினான். இந்த சீதாராம கல்யாணக் கதை அனைவருக்கும் தெரிந்ததே!

7. The story of Valmiki Ramayana
According to Valmiki Ramayana, King Janaka of Mithila performed a yagna and ploughed the land with a golden plough. Then he stumbled upon a painted box buried in the earth and found a beautiful baby girl inside. Janaka accepted her as the daughter of Mother Earth and named her Jānaki. When the daughter grew up, he conducted a swayamvaram for her. Dasaratha's son Sri Rama broke the bow of Shiva who could not be lifted by anyone and held Janaki's hand. This Seetharama wedding story is known to all!
Swayamvaram = svayam-vara. Self-choice of a husband by a princess or a daughter of a Kṣatriya at a public assembly of suitors.
8. அதே நேரம், சீதையின் பிறப்பு ரகசியம் பற்றி ‘அத்புத ராமாயணம்’ என்ற காவியத்திலும், ராவணனால் எழுதப்பட்ட ‘இராவணீயம்’ என்ற நூலிலும் வித்தியாசமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
8. At the same time, the secret of Sita's birth is mentioned differently in the epic 'Adbhuta (wonderful) Ramayana' and in the book 'Ravanīyam' written by Ravana.
9. இராவணீயம் சொல்லும் விவரம்
ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைதான் சீதை. தான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானின் இடப்பாகமாகத் திகழும் அன்னை பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தான் ராவணன்.

9. What Ravaniyam says
Sita was the first girl child born to Ravana and Mandodari. Ravana was very happy that his daughter was born to Mother Parvati, who is the left side of Lord Shiva (Androgynous Siva) whom he worshipped every day.
10. ஆனால், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், அந்தக் குழந்தை விஷ்ணுவின் அம்சமுடையது என்றும், ராவணனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவுக்கு உதவவே அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் கூற... அதிர்ச்சியானான் ராவணன். அந்தக் குழந்தையைக் கொன்றுவிட உத்தரவிட்டான்.
10. But the astrologers who predicted the horoscope of the child said that the child was born to help Vishnu to destroy Ravana. Ravana was shocked. He ordered the child to be killed.
11. ஆனால், அவன் மனைவி மண்டோதரி, சிசுஹத்தி பெரும் பாவம் என்றும், அதனால் தங்களுக்குச் சந்ததியே இல்லாமல் போய்விடும் என்றும் எடுத்துக் கூறி, மன்றாடினாள். இதில் கொஞ்சம் மனம் இரங்கிய ராவணன், அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்தான்.
11. But his wife Mandodari pleaded with him saying that Sisuhatti (Infanticide) was a great sin and that they would have no offspring. Ravana took pity on her and decided to leave the child in the Himalayas where Lord Shiva was sitting.
12. அதன்படி, கங்கையின் உற்பத்தி ஸ்தானத் தில், பனிபடர்ந்த ஒரு பகுதியில், பனிப் பாறைகளுக்கு நடுவில் பேழை ஒன்றில் குழந்தையை வைத்து, விட்டுவிடுகிறான். இப்படிச் செய்தால், பனியில் உறைந்து அந்தக் குழந்தை மடிந்துவிடும் என நம்பினான்.
12. Accordingly, he leaves the child in a nook between the snowy rocks at the source of the Ganges. He believed that if he did so, the child would freeze to death in the snow.
13. ஆனால் அதற்கு மாறாக, பனி உருகி, கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப் பட்டது அந்தப் பேழை. அது, மிதிலை நகரை அடைந்து பூமிக்கடியில் புதைந்தது. அந்தத் தருணத்தில்தான், மன்னர் ஜனகர் ஏர் பூட்டி உழுதார். குழந்தையும் கிடைத்தது. பூமியை உழும்போது கிடைத்த குழந்தை என்பதால், ஏரின் கூரான பகுதிக்கு வழங்கப்பட்ட ‘சீதா’ என்பதையே குழந்தைக்குப் பெயராகச் சூட்டினார் ஜனகர். ஜனகர் மகள் என்பதால் ‘ஜானகி’ என்றும், மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டதால் ‘மைதிலி’ என்றும் அழைக்கப்பட்டாள் சீதை. அவளுக்கு ‘வைதேஹி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
13. Instead, the snow melted and the casket was dragged along the Ganges. It reached the city of Mithila and was buried underground. It was at this moment that King Janaka began ploughing and found the baby. Janaka named the child Sita, after the sharp end of the plough, as she was born while ploughing the earth. Sita was called 'Jānaki' as she was the daughter of Janaka and 'Maithili' as she was found in Mithila. She also has a name 'Vaidēhi'.
14. தேவி மஹாத்மியம் என்ன சொல்கிறது?
தேவி மஹாத்மிய புராணத்திலோ சீதையின் அவதாரம் பற்றி முற்றிலும் வேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில், நாரதரிடம் பகவான் விஷ்ணுவே, ‘மகாலட்சுமி துளசிதேவியாகவும், வேதவதியாகவும், சீதையாகவும் அவதரிப்பாள்’ என்று கூறுவதாக வருகிறது. இந்தக் கதையை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

14. What does the Devi Mahatmyam say?
In the Devi Mahatmya Purana, the incarnation of Sita is described in a completely different way. In it, Lord Vishnu himself tells Narada that Mahalakshmi will incarnate as Tulsi Devi, Vēdavati and Sita. Let us look at this story in more detail.
15. த்ரேதா யுகத்தில் தர்மத்வஜன், குஜத்வஜன் என்னும் இரண்டு பேர் விஷ்ணுவை நோக்கிக் கடும் தவமிருந்து, மகாலட்சுமியே தங்களுக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என வரம் கேட்டுப் பெற்றனர். அதன்படி, தர்மத்வஜனுக்கு மகாலட்சுமியே பெண்ணாகப் பிறந்து, பிருந்தா எனப் புகழ்பெற்றாள். தன் பதிவிரதா தர்மத்தால், பிருந்தாவே ‘துளசி’ எனும் செடியாகி, விஷ்ணு சேவை செய்து, நம்மால் வழிபடப்பட்டு வருகிறாள்.
15. In the Treta Yuga, two persons, Dharmadhvaja and Kujadhwajan, performed severe penance on Lord Vishnu and asked for a boon that Mahalakshmi should be born as their daughter. Accordingly, Mahalakshmi was born as a daughter to Dharmadhwaja and became famous as Brindā. By virtue of her Pativrata Dharma, Brindā herself has become a plant called 'Tulsi' serving Lord Vishnu and is worshipped by us.
Pativrata Dharma = Chaste wife in moral stance.
16. இதேபோல், குஜத்வஜனுக்கும் மகாலட்சுமி பெண் குழந்தையாகப் பிறந்தாள். பிறந்த சில மணி நேரங்களிலேயே, அந்தக் குழந்தையின் வாயிலிருந்து வேதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதனால், அவள் ‘வேதவதி’ என்று பெயர் பெற்றாள். ஒரு கானகத்தில் தபஸ்வினி போல தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அவள், விஷ்ணுவையே பதியாக அடைய வேண்டும் என்று கடும் தவம் புரிந்தாள். தர்மத்தைக் காக்க ஶ்ரீராமனாக அவதாரம் செய்யும் விஷ்ணுவுக்குப் பத்தினியாகி சேவை செய்ய வேண்டும் என்பது அவளின் ஆசை.
16. Similarly, Mahalakshmi was born to Kujadhwaja as his daughter. Within a few hours of birth, the Vedas began to emanate from the child's mouth. Hence, she came to be known as 'Vēdavathi'. Living in solitude like a tapasvini in a forest, she performed severe penance to attain Vishnu as her husband. She wanted to serve Lord Vishnu who incarnated as Sri Rama to protect Dharma.
17. ஒருநாள், வேதவதி வாழ்ந்து வந்த கானகத்தின் வழியே ஆகாய மார்க்க மாகச் சென்று கொண்டிருந்தான் ராவணன். யதார்த்தமாக வேதவல்லியை அவன் கவனித்துவிட, அக்கணமே அவள் அழகில் மயங்கினான். அவள் அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றினான். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த வேதவதி, எந்த ஒரு பெண்ணையும் அவளுக்கு விருப்பமில்லாத நிலையில் ராவணன் தொட்டால், அக்கணமே அவனது தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் கொடுத்துவிட்டு, அங்கே எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீயில் அக்னிப் பிரவேசம் செய்தாள்.
17. One day, Ravana was passing over the forest in the sky where Vēdavati lived. He noticed Vēdhavalli and instantly was mesmerized by her beauty. He went up to her and took her hand. Shocked and angry, Vēdavati cursed Ravana that if he touched any woman without her will, his head would explode instantly and entered the forest fire that was burning there.
18. அப்போது, ‘`நான் மீண்டும் பிறந்து வந்து உன்னை அழிப்பேன்’’ என்று சபதமிட்டு அக்னியில் பஸ்பமாகிவிடுகிறாள் அவள். அக்னிதேவனோ, வேதவதியாகத் தோன்றிய மகாலட்சுமியைப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறான். பஞ்சவடியில் சீதா, லட்சுமணனுடன் ஶ்ரீராமன் வனவாசம் கழித்துக்கொண்டிருந்த நாளில், ஒருநாள் மாலையில் சந்தியாவந்தனம் செய்யும் வேளையில், அக்னி பகவான் ஶ்ரீராமன் முன் தோன்றினான்.
18. She vowed, "I will be born again and destroy you," entered the fire and renders herself into ashes. Agnideva (Fire God) protects Mahalakshmi who entered fire as Vēdavati. One evening when Sri Rama was in exile with Sita and Lakshmana in Panchavati, Lord Agni appeared before Sri Rama while performing Sandhyavandanam.
Sandhyavandanam = Morning and evening prayers
19. ‘`ராமா! உன்னிடம் ஒரு பரம ரகசியம் சொல்லவே வந்தேன். சில நாட்களில் ராவணன் தன் மாயா சக்தியால் உன் மனைவி சீதாதேவியை சிறையெடுத்துச் செல்வான். அப்போது நான் உன் மனைவி சீதைக்குப் பதில் என்னுள் மறைந்திருக்கும் வேதவதியை மாயா சீதையாக்கி ராவணனுடன் அனுப்பிவிடுவேன்.
19. "Rama! I have come to tell you a secret. In a few days, Ravana will imprison your wife Sita with his Maya Shakti. Then instead of your wife Sita, I will make Vedavati who is hidden in me as Maya Sita and send her with Ravana.
Maya Sita = Illusory Sita
20. நிஜ சீதாதேவியை நான் பவித்ரமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன். ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு மாயா சீதை என்னை வந்தடைவாள். நிஜ சீதை உன்னை அடைவாள். அதுவரை இந்த ரகசியத்தை நீ யாரிடமும் வெளியிடக் கூடாது!’’ என்றான் அக்னிதேவன். ஶ்ரீராமனும் அந்த ரகசியத்தைக் காப்பாற்று வதாக சத்தியம் செய்து கொடுத்தார்.
20. I will keep the real Sita Devi immaculately pure. Maya Sita will come to me after the destruction of Ravana. The real Sita will go to you. Until then, you should not divulge this secret to anyone!" said Agnidev. Sri Rama promised to keep the secret.
22. ராவண வதம் முடிந்ததும், ஶ்ரீராமன் சீதைக்கு அக்னிப் பரீட்சை நடத்தினான். லட்சுமணன், ஹனுமன், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் ‘சீதைக்கா அக்னிப் பரீட்சை?’ என்று கலங்கிக் கண்ணீர் வடித்தனர். ஆனால், அதற்கான காரணம் ஶ்ரீராமனுக்கும் அக்னிதேவனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தீக்குளித்த மாயா சீதை (வேதவதி) அக்னிதேவனை அடைகிறாள்.
22. After the killing of Ravana, Sri Rama conducted a fire test (ordeal) for Sita. Lakshmana, Hanuman, Vibhishana, Sugriva and others shed tears of grief saying, "Should Sita undergo the fire test?" But the reason for this was known only to Sri Rama and Agnideva. Maya Sita (Vedavathi) enters fire and attains Agnideva.
23. தன்னிடம் அடைக்கலத்தில் இருந்த நிஜ சீதையை ஶ்ரீராமனிடம் சேர்க்கிறான் அக்னி தேவன். ஏகபத்தினி விரதனான ஶ்ரீராமன் ராமாவதாரத்தில் வேதவதியை மனைவியாக ஏற்க முடியவில்லை. ஆனால், கலியுகத்தில் அவளை ஏற்பதாக வாக்களிக்கிறான். திருமலையில் ஶ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாளிக்கும் வேங்கடாசலபதியின் தேவியாகத் திகழும் பத்மாவதி, வேதவதியின் அவதாரமே!
23. Agni Dev takes the real Sita to Sri Rama. Sri Rama could not accept Vedavathi as his wife in Rama's incarnation. But he promises to accept her in Kali Yuga. Padmavathi, the Goddess of Lord Venkatachalapathi who graces as Srinivasa Perumal in Tirumala, is an incarnation of Vedavathi.
24. தேவி மஹாத்மியம் மட்டுமின்றி, வெங்கடேஸ்வர மஹாத்மியம் எனும் திருமலை ஸ்தல புராணத்திலும் வேதவதி என்கிற வேதவல்லி யின் வரலாறு காணப்படுகிறது. இதேபோல், பூமித்தாயின் புத்ரிதான் சீதை என்கிற தகவலைச் சொல்கிறது, உத்தர ராமாயணம். அற்புதமான இந்தக் கதைகளைப் படித்துச் சீதாமாதாவைப் பணிந்து வழிபட்டு, சீர்மிகு வாழ்வை வரமாகப் பெறுவோம்!
24. Apart from Devi Mahatmyam, the history of Vedavati is also mentioned in the Tirumala Sthala Purana, Venkateswara Mahatmyam. Similarly, the Uttara Ramayana says that Sita is the daughter of Mother Earth. Let us read these wonderful stories and worship Sīta Māta and get a blessed life!