SNS10Ayurveda
Published:12 Aug 2019 8 PMUpdated:12 Aug 2019 8 PM Sakthi Vikatan
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் Śeṣādrinātha Śāstrigaḷ
Images: Maruthi

ஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ? மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும்.
Do you know what Ayurveda says? God: I must create man.
                                                                                        

ஆதியும் அந்தமும் Ādhi & Andham
1. இந்தப் பிரபஞ்சத்தை பகவான் சிருஷ்டி செய்தபோது, முதலில் எதை உற்பத்தி செய்தார் தெரியுமோ? இயற்கையைத்தான் சிருஷ்டி செய்தார். இயற்கையில் இருக்கக்கூடிய செடி கொடிகள், மிருகங்கள் போன்றவற்றையே முதலில் சிருஷ்டி செய்தார். அதற்குப் பிறகுதான் மனிதர்களைச் சிருஷ்டி செய்தார். 1. When Bhagavan created this universe, do you know what he created first? Nature! He created first the Nature’s flora and fauna. Later only, he created man.
2. ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ? மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும். அப்படி மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட உடனே பசி, தாகம் என்று சொல்வான். எனவே, மனிதன் பிறப்பதற்கு முன்பாகவே அவனுக்கு எல்லாம் தயார் செய்து வைக்கவேண்டும். அவன் கண்ணைத் திறந்ததும் அவனுடைய ஆகாரம் அவன் கண் முன்பாக வந்து நிற்கவேண்டும். இல்லாவிட்டால், அவனால் உயிர் வாழமுடியாது. ஆகையால்தான் முதலில் இயற்கையில் பயிர் வகைகளைச் சிருஷ்டி செய்தார். உணவைச் சிருஷ்டி செய்த பிறகுதான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்தார். 2. What does Āyurveda say? If man must be created, the created man seeks food and water for his hunger and thirst. Even before he was created, all his needs must be ready beforehand. When he opens his eyes soon after birth, he demands to appease his hunger. If not appeased, he can’t live. That is why he created the Nature’s flora like the fruits, vegetables, cereals and more.
3. இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது? 3. What do we understand from this?
4. செடிகொடிகள் எப்போது உற்பத்தியாயின என்பது நமக்குத் தெரியாது. அது முளைத்து வெளியில் வந்த பிறகுதானே நாம் பிறக்கிறோம். எனவே செடிகொடிகளின் ஆதி நமக்குத் தெரியாது. அவற்றின் அந்தமும் நமக்குத் தெரிவதற்குச் சந்தர்ப்பமே இல்லை. நாம் சென்ற பிறகும் அவை இருக்கவே செய்கின்றன. 4. We don’t know when the plants and creepers came into existence. We don’t knows its beginning or the end. They will remain after our demise.
5. குழந்தை வைத்தியர்சொல்வதுபோல் திருஷ்டாந்தமாக ஒன்று சொல்கிறேன். 5. Let me bring to your attention an illustration as said by a pediatrician.
6. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த அம்மாவின் உடலில் தாய்ப்பால் தயாராகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வெளியில் வருவதற்கு முன்பாகவே தாய்ப்பால் நிறைந்துவிடுகிறது. உணவை ஏற்படுத்தியபிறகுதான் குழந்தையைப் பெறுகிறாள் அந்தப் பெண். குழந்தை வெளியில் வந்ததும் தாயின் மார்பகத்தில்தான் வாயை வைக்கிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்து விடுகிறது. அதுவும் முழுமையான சத்துள்ள உணவு. குழந்தையின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான அத்தனை சத்துகளும் நிறைந்திருக்கும் உணவு தாய்ப்பால். 6. Even before an infant takes its birth, milk production in the mother becomes ready and available and the breasts are turgid with milk. She delivers after breast milk is ready to nourish the infant. That child has the spontaneous innate rooting reflex. (Rooting reflex: “A reflex that is seen in normal newborn babies, who automatically turn the face toward the stimulus and make sucking (rooting) motions with the mouth when the cheek or lip is touched. The rooting reflex helps to ensure successful breastfeeding.”) The infant seeks the source and suckles. The breast milk is the wholesome food for the infant’s nourishment and growth.
7. எப்படி குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்ப் பால் தயாராகிவிடுகிறதோ அப்படி, பகவான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்வதற்கு முன்பே உணவைச் சிருஷ்டி செய்துவிடுகிறார். 7. As the breast milk is ready even before the birth, Bhagavan creates food for the living beings before their creation.
8. செடி கொடிகள், பயிரினங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என்று எல்லோரும் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றியது பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர். அதற்கு முன்பாக ஒன்றுமே இல்லை. முதலில் பகவான் தண்ணீரைத்தான் சிருஷ்டித்தார். அதில் விதை விதைத்தார். அந்த விதையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. அநேக கோடி பிரம்மாண்டங்கள் தோன்றின. இதைப் பற்றியெல்லாம் வேதங்கள் விளக்குகின்றன. வேதங்கள் மட்டுமல்லாமல் புராணங்கள், இதிகாசங்கள் என்று அனைத்துமே பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி விவரிக்கின்றன. பாமரர் களுக்கும் புரியவேண்டுமானால், அவர்களுக்கு எளிய வடிவில் கதைகளின் மூலமாகச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்துதான் பின்னாளில் வந்த மகரிஷிகள் வேதத்தின் உண்மைப் பொருளை கதை வடிவில் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள். 8. Water, one of the Five Great Elements, appeared in the world before the creation of the flora, the fauna, the living beings and the humanity. Before water, there was nothing. Bhagavan created water first. He sowed the seed. From the seed, the universe emerged. Many millions of worlds appeared on the horizon and beyond. The Vedas delve in them and offer explanations, as Puranas and Itihāsas explore and explain the creation of the universe. For easy understanding (of Vedas) by the laymen and the uninitiated, the latter-day Ṛṣis composed Puranas and Itihāsas in story forms to explicate the truths in the Vedas.
9. இந்த வேதங்கள், ஆரம்ப காலத்தில் காடுகளில் பர்ணசாலை அமைத்துக்கொண்டு தவமியற்றி வந்த மகரிஷிகளால், அவர்களுடைய சீடர்களுக்கு வாய்மொழியாக உபதேசிக்கப்பட்டன. அதனால்தான் ஔவையார் வேதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எழுதாக் கிளவி’ என்று கூறியிருக்கிறார். 9. The Mahaṛṣis of yore performing austerities and living in the forest hermitages taught the disciples in the oral tradition. That is why Avvaiyār calls the Vedas ‘eḻutā-k-kiḷavi’ (= ‘எழுதாக் கிளவி’= Unwritten & spoken speech [word] = The Vēdas, as unwritten and handed down orally.).
10. பகவானால் சிருஷ்டி செய்யப்பட்டிருக்கும் அனைத்தையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நேற்று ஒருவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருக்கலாம். அடுத்து ஒருவர் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்திருக்கலாம். இனி வரும் காலங்களில் புதுப் புது உலகங்கள், புதுப் புது பொருள்கள், கருவிகள், சாதனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம். எனினும், ஏற்கெனவே இருப்பனவற்றைத்தான் அவர்கள் கண்டறிகிறார்களே தவிர, அவர்களாகவே புதிதாக ஒன்றைச் சிருஷ்டி செய்துவிட முடியாது. மேலும் பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியம் முழுவதையும் அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது. 10. We cannot discover Bhagavan’s creations in their entirety. Yesterday, one may have discovered America. The next person may have discovered Australia. In the future, the scientists may discover new worlds (ex. Kepler-452b) and invent new instruments, and implements. They discover what existed before but cannot create not even one new item. Moreover, they do not and cannot understand the secrets of the creation of the universe.
11. மனிதர்களின் மூளைக்கு எட்டாத ரகசியங்கள் எத்தனையோ பிரபஞ்ச சிருஷ்டியில் காணப் படுகின்றன. அத்தனைக்கும் காரணமாக இருப்பது அந்த சிருஷ்டிகர்த்தாவாக இருக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி. அது இன்னதென்று எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அதனுடைய உட்கருத்து வேண்டுமானால் மனிதர்களுக்குக் கதையின் வடிவில் புரியலாமே தவிர, சாமான்ய புத்திக்கு அந்தப் பெரிய சக்தி இன்னதென்று புரியாது. 11. This universe (His creation) holds secrets not within the grasp of the human mind. The supremely great Sakthi is the creator as the causal agent. No one can understand what it is. The inner meaning of that Sakthi may be understandable to men through the medium of stories. For ordinary Buddhi, it is too big a Sakthi for the comprehension of its nature.
12. அந்தச் சக்தியை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், புத்தி வளர்ச்சி வேண்டும். 12. If someone wants to know that Sakthi, he must have a higher Buddhi.
13. சின்ன வயதிலிருந்தே சரீரமும் புத்தியும் ஒன்றுக்கொன்று இணையாக வளர்ந்து வந்தால், நல்ல கல்வியறிவும் வந்துவிட்டது என்று சொன்னால், மூளை நன்றாக விகாசம் அடைந்து விடும். மூளை விகாசமடைந்து விட்டால், லோகம் முழுக்க உள்ள ரகசியங்கள் அனைத்தையும் புரிந்து வாங்கிக்கொள்ளக் கூடிய சக்தி கிடைத்து விடும். அந்தச் சக்தியைப் பெற்றிருந்த பெரிய பெரிய ரிஷிகள்தான் இந்த உண்மைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அந்த சக்தி சாமான்ய மனிதனுக்குக் கிடைத்துவிட்டால், அவனாலும் இந்தப் பிரபஞ்சம், பிரபஞ்சத்தைச் சிருஷ்டி செய்த அந்த மகா சக்தி ஆகிய அனைத்தையும் கண்ணாடியில் பார்ப்பது போல் தெளிவாகக் கண்டறிந்துகொள்ள முடியும். 13. Assuming the body and the Buddhi thrived as one unit from early age, and the individual acquired knowledge from learning, the brain will blossom in its entirety. The latter will facilitate comprehension of all the secrets of the world. Great Ṛṣis with such Sakthi have told us of these truths. Ordinary people with such caliber (of the Ṛṣis) can easily discover all the secrets of the force (Sakthi) that created the universe (the creator) and the universe, with such clarity, as if seeing them in a mirror.
                                                                        
14. ஒன்றை நன்றாக கவனித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் சிருஷ்டி செய்தார். தண்ணீரைக்கூட `இருந்தது' என்று சொல்லவில்லை; `படைத்தார்' என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆக, இல்லாத ஒன்றை சிருஷ்டி செய்வதற்கு ஒரு சக்தி தேவைப்பட்டது. அந்தச் சக்தி எப்படிப்பட்டது என்பதை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதால், நாம் அதை சக்தி என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. பிற்பாடு வந்தவர்கள் அந்தச் சக்திக்கு ஒரு பெயரைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தினால், கடவுள் என்றும் பகவான் என்றும் பெயர் கொடுத்து அழைக்கப்பட்டது. 14. Pay attention to water, which was the only substance in this universe at the beginning. Bhagavan created the water. The saying was not that water merely existed. Bhagavan created the water. A Sakthi was necessary to create something that did not exist before. We could not describe that force in words and therefore, we settled calling it a Sakthi. The latter arrivals feeling strongly of giving a name for that Sakthi, called him Kadavul (கடவுள் = God, who transcends speech and mind) or Bhagavan (= भगवान् = Glorious, Divine, Adorable, worshipful…). இறைவன் = iṟaivaṉ n. < இறு¹-. God, the all-abiding.
15. அந்தக் கடவுளையும் சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறோம். இப்படியெல்லாம் அழைத்தாலும் அதன் உண்மை சொரூபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாத நிலையில், அந்த சக்தியைப் பரம்பொருள் என்றும் அழைக்கிறோம். அந்த மகத்தான சக்தியை பார்த்தோ, கேட்டோ, அனுபவித்தோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது. 15. We call that God, Siva, Vishnu, Rama, Krishnan… Though we call him by so many names, we cannot understand his own true form and, in that state, we call that Sakthi Paramporuḷ (= பரம்பொருள் = The Supreme Substance = The Supreme Being). That great Sakthi, we do not understand, by sight, by hearing and by experiencing.
16. ‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யதுர் ப்ரயந்தி அபிசம்விஸந்தி தது விஜ்ஞா சஸ்வ தத் ப்ரம்ஹ’ என்று வேதம் சொல்கிறது. வேதம் சொல்லாத ஒரு சப்ஜெக்ட் இந்த லோகத்தில் எங்குமே இல்லை. எதிர்காலத்திலும், வேதத்தில் சொல்லப்படாத எது ஒன்றும் எவருடைய வாயிலிருந்தும் வெளிவராது. ஏனென்றால், இருக்கக்கூடிய ஒன்றுதான் வெளியில் வரும். இல்லாத ஒன்று எப்படி வெளியில் வரும்! 16. There is no subject unsaid in Veda anywhere in this world. Even in the future, no one will utter anything that which is not mentioned in Vedas. The reason it is so because what exists will out (can be revealed) and what does not exist will not out (not be revealed). Out = to become public, evident, known. intransitive verb.)
17. நான் ஒன்று சொல்கிறேன். நிறைய செடி கொடிகள் வளர்ந்திருக்கின்றன. பூத்துக் குலுங்கி, காய்த்து கனியாகி நிற்கின்றன. கொஞ்சநாளில் அந்தச் செடி கொடிகள் எல்லாம் அழிந்துவிடுகின்றன. அவை இருந்த இடத்தில் சாலை வந்துவிடுகிறது. கட்டடங்களும் தோன்றி விட்டன. எல்லாம் ஆயிற்று. இப்போது, எந்தக் காலத்தில் இந்த இடத்தில் செடிகொடிகள் இருந்தன, எந்தக் காலத்தில் வீடுகள் வந்தன, பின்னர் மறுபடியும் எந்தக் காலத்தில் வீடுகள் மறைந்து அந்த இடத்தில் செடி கொடிகள் வந்தன என்பதையெல்லாம் நாம் எப்படிச் சொல்ல முடியும்? 17. Let me give you an illustration. There is a plethora of plants and vines, giving rise to blossoms and later fruits. They perish after a while. A road is in place where the plants thrived before. Buildings rose. Who among us can tell now when the flora thrived, when the buildings rose and fell and when the flora came back?
18. இப்படியான மாறுதல்களை வைத்து நாம் காலத்தை அளக்கக்கூடாது. அதேபோல், மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு நாம் காலத்தை அளப்பதும் சரியல்ல. மனிதனின் மறைவுக்குப் பிறகும் காலம் இருக்கவே செய்யும். அதற்கு ஆதியும் அந்தமும் கிடையாது. 18. We cannot measure time from these changes. It is improper to measure time, based on man’s birth and subsequent death. After man’s death, time keeps marching. It has no beginning and no end.
19. காலத்தின் இயல்பே இப்படி இருக்கும்போது, பகவானை எப்படி நாம் பார்க்க முடியும். அவனுடைய ஆரம்பத்தையோ முடிவையோ எப்படி நாம் பார்க்க முடியும். ஆரம்பமும் முடிவும் இல்லாதவனாக என்றைக்கும் இருப்பவன் அல்லவா கடவுள். என்றைக்கும் இருக்கிறவனுக்குக் காலத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்? 19. When the nature of time is such, when could we see Bhagavan? How could we see (and know) his beginning or his end? God is without beginning and end. How can we determine the life and times of the eternal Being?
20. வேதம், வேதம் சொன்னதான கருத்துகள், அதை எடுத்து விளக்கியிருக்கக் கூடியதான தர்சனங்கள், பாமரர்களுக்கு விளக்கக்கூடியதான கதைகள் ஆகிய அனைத்தும் நம் புத்தியை விஸ்தாரமாக்கி, செழிப்பாக்கும். அந்தப் புத்தியில் ஊடுறுவிச் செல்லக்கூடிய தத்துவம் அறிவுக்கு எட்டியதும், காலம் என்றைக்கும் இருப்பது. அதற்கு அழிவு என்பதே கிடையாது என்ற ஞானம் மனிதனுக்கு வரும். 20. The Vedas, the explicatory Darśanas (Upaniśads) and the explanatory puranic stories for the uninitiated will expand and enrich our Buddhi. When the Tattvas penetrate and percolate through the Buddhi and reach the repository of intellect, the wisdom dawns on man that Time is eternal and imperishable.
21. ஒன்று சொல்வது உண்டு. கிருதயுகம் இத்தனை வருடங்கள்; திரேதாயுகம் இத்தனை வருடங்கள்; துவாபரயுகம் இத்தனை வருடங்கள்; கலியுகம் இத்தனை வருடங்கள் என்று கணக்கிட்டுச் சொல்வார்கள். இந்த நான்கு யுகங்களும் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருக்கின்றன. ஆரம்பமும் தெரியாது; முடிவும் தெரியாது. 21. There is a talk of the Cyclical Time. There are four Yugas (Yukams) occurring in a cyclical fashion: kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam. These cycles obviously have no beginning and no end. They go round and round. Each one of the said Yugas has a fixed time periods in years.

Comment: The Jains regard Time as revolving, circular, and cyclical as one would see a serpent (Ouroboros) would hold its tail in its mouth. The Time ascends and descends alternately. Avasarpini is Descending Time; Utsarpini is Ascending Time. Now you know the word 'serpent' came from Sanskrit, 'Sarpa/ Sarpin = सर्प in Sanskṛit; சர்ப்பம் (sarpam) in Tamil.' If it is not for Sanskrit and Tamil, we would call the serpent, 'that thing that slithers.' Unfortunately, we are in descending time right now.

                                                               


   22. இப்படியான ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது, பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், அதேபோல் ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஓர் இரவு என்றும் சொல்வார்கள். 22. A thousand foursome Yugas (1000 Caturyukams) is one day of Brahma, and similarly, foursome Yugas make one night of Brahma.
23. ஆக, பிரம்மாவின் ஒருநாள் என்பது இரண்டாயிரம் சதுர்யுகங்களைக் குறிப்பிடும். அப்படி நூறு வயது இருந்தால் பிரம்மாவின் ஆயுள் என்றும் சொல்கிறார்கள். இதை நினைத்துப் பார்த்தால்... நம்மால் இலக்கம் போட முடியுமா? நிச்சயம் முடியாது! 23. Therefore, one day (and one night) of Brahma refers to two thousand Caturyukams. Brahma’s life lasts for a hundred of these 2000 Caturyukams. Can we represent his life in years by numbers? Certainly not.
24. நம் கண்ணுக்கோ, காதுக்கோ மனதுக்கோ எட்டாத விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. 24. Many surprises, not sensed by sight, hearing and mind, are aplenty in this universe.
- தொடரும் Will continue.
SNS10Ayurveda