SV-WisdomFromBird01 | |
Translation: Veeraswamy Krishnaraj | |
ஆன்மிகக் கதை: அவன் பெயர் ராம்சுரத் குன்வர். உத்திரப்பிரதேசத்தின் கங்கைக்
கரை கிராமத்தில் வாழ்ந்த சிறுவன். மகான்களின் சரித்திரத்தையும் இதிகாச
புராணங்களையும் ஆர்வமுடன் கேட்பவன். அவனுக்கு
13
வயது ஆனபோது,
அவன் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஆன்மிகக் கதை
ஒருநாள் கிணற்றடியில் அமர்ந்திருந்தான். அவன் முன்
அழகான
குருவி ஒன்று வந்து அமர்ந்தது. அதைக்கண்டதும் ராம்சுரத்துக்கு அதோடு
விளையாடும் ஆர்வம் ஏற்பட்டது. கிணற்றடியில் கிடந்த கயிறு ஒன்றை எடுத்து
அதன் மீது வீசினான். அடுத்த கணம் அந்தக் குருவி கயிறுபட்டுக் கீழே
விழுந்தது.
ராம் சுரத் ஆர்வமுடன் ஓடிச் சென்று குருவியைக் கையில் எடுத் தான். குருவி
லேசாக அசைந்தது. ராம்சுரத் ஓடிச்சென்று கங்கையில் நீர் எடுத்து அதற்கு
அருந்தக் கொடுத்தான். ஆனால் எந்தப் பயனும் இல்லை. சில நொடிகள் கழித்து அது
அசைவின்றி விரைத்து அவன் கரங்களிலேயே உயிரை விட்டது.
ராம்சுரத் துடிதுடித்துப் போனான். இந்தக் குருவியின் மரணத்துக் குக்
காரணமாகிவிட்டோமே என்று வருந்தினான். ‘இதுவரை படபடவெனப் பறந்த குருவி ஏன்
தற்போது விரைத்துக்கிடக்கிறது?
இறகுகளும் நன்றாக இருக்கின்றனவே... ஆனாலும் பறக்கமுடியவில்லை. அப்படியானால்,
இதுவரை குருவிக்குள் இருந்த ஏதோ ஒன்று இப்போது இல்லை. அது என்ன?’
என்று சிந்திக்க ஆரம்பித்தான். தனிமையில் இருந்து மரணம்,
பிறப்பு பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்குள் பல கேள்விகள் எழுந்தன.
அப்போது கிராமத்துக்குத் துறவி ஒருவர் வந்தார். ராம்சுரத்தைக் கண்டதும்
அவன் சாதாரணமானவன் இல்லை என்பதைப் புரிந்துகொண்டார். ‘உன்குழப்பங்கள்
அனைத்தும் தீர,
காசிக்குப் போ’ என்றார். ராம்சுரத் அதை ஏற்றுக்கொண்டு காசிக்குச் சென்று
விஸ்வநாதரை தரிசனம் செய்தான். அப்போது அவனுக்குள் இறைவனின் சக்தி
இறங்கியது. அந்தப் பரவசத்தை அவன் உணரத்
தொடங்கினான். காலம் அற்ற பெருவெளியில் அவன் ஆன்மா பிரயாணித்தது. மரணம்,
பிறப்பு குறித்த கேள்விகளுக்கான விடைகள் கிடைத்தன. அதன்பின் அவன்
வாழ்க்கையே மாறியது.
அந்த ராம்சுரத் குன்வர் வேறு யாருமல்ல... நம் திருவண்ணாமலையைத் தேடி வந்து
தவம் செய்து
`விசிறி
சாமியார்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட குரு யோகிராம்சுரத் குமாரரே ஆவார்.
ராம நாம ஜபத்தின் மகிமையைத் தன் வாழ்க்கை
முழுவதும் கடைப்பிடித்து பிறருக்கும் உபதேசம் செய்து பல லட்சம் பேருக்கு
ஞானத் தந்தையாகத் திகழ்ந்தவர் யோகி ராம்சுரத்குமார். ‘அவர் நாமத்தை மூன்று
முறை சொன்னாலே ஓடிவந்து வினைகள் தீர்ப்பார்
குருநாதர்’ என்கிறார்கள் அவர் பக்தர்கள்! குருவே சரணம்! |
Spiritual Story: Ram
Surat Kunwar is none other than Uttar Pradesh’s Yogi Ramsurat Kunvar,
who lived as a youngster in a village on the banks of River Ganga. He
was an ardent student of Mahans' histories and Ityhāsas (Great Epics).
When he was 13 years of age, an event took place in his life.
Published: 05 Aug 2024 2 PM Updated: 05 Aug 2024 2 PM Sakthi Vikatan He was sitting in the bottom of a well. A beautiful bird sat before him. When Ram Surat saw the bird, he desired to play with it. He picked up a rope from the bottom of the well and threw it at the bird. As the rope hit the bird, it fell. With great excitement, he ran and picked up the bird in his hand. It moved very little in his hand. He ran to the Ganges River, fetched some (sacred) water and offered it to drink. It was of no use and in a little while, the bird became motionless and rigid with rigor mortis and gave up its life. Ramsurat was shook up and felt grievous that he was responsible for the death of the bird. He began thinking about the bird as follows. The lively bird that flew not long ago with flapping wings, is rigid with rigor mortis, unable to fly. He thought there was something inside the bird that is absent now. During the moment of solitude, he began thinking of death and birth. Questions rose in his mind. At that time, a hermit was visiting the village. When the hermit saw him, he realized Ram Surat was no ordinary child. He told the child, ′′Go to Kasi to clear all your doubts.'' Ram Surat accepted the hermit’s advice, went to Kasi and received Dharsan of Visvanathar. God’s grace descended on him. He felt ecstasy. His soul floated in the timeless great yonder. He obtained answers to questions regarding death and birth. His life changed for good from that moment. That Ramsurathkumar is none other than our Tapasvin Yogi Ramsurathkumar with the hand fan, who came to Tiruvannamalai and endearingly was called Visiri Swamiyar (Swamiyar with a hand fan). விசிறி = Visiri = fan. Yogi Ramsurathkumar excelled as the spiritual father of hundreds of thousands of devotees by teaching them the greatness of meditation of Rama’s name. BY the utterance of his name three times, Gurunathar will run to the devotee to expunge all sins and problems. |