T02-11-20TKRL-ImportanceOfRain
Veeraswamy Krishnaraj
Tirukkural by Valluvar
2. வான்சிறப்பு = The Importance of Rain.  குறள் = Kural 11-20


குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று.

Since rain sustains the world, it earned the name Ambrosia.
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி
ப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை.

For the consumer, rain produces the food. For the eater, it is food itself.
Comment: Rain helps not only grow food crops but also serves as food quenching the thirst.
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்துள்;
நின்று உடற்றும் பசி.

The oceans surround the wide world but, if the rains fail, hunger torments the world.
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
உழவர் ஏரின் உழார்
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால்.

If the rainy season fails, the farmers’ plowing diminishes.
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்


Drought from lack of rain is ruinous to the world. Rain also helps the drought-stricken people.
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
விசும்பின் துளி வீழின் அல்லால்
மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது.

Unless the clouds’ drops (raindrops) fall, it is rare to see the head of the green grass.

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்
எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின்
The nature of the vast ocean will diminish, when the clouds diminish (suck up) the ocean and fail to replenish it.
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது
வானம் வறக்குமேல்.
For the gods, the worship and festivals will cease, when the rainfall fails.

குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா
வானம் வழங்காது எனின்.
The twin deeds of charity and austerity in the wide world will not exist, when the heavens do not grant rain.
குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின்
ஒழுக்கு வான் இன்று அமையாது.
For no one, the world will exist, when there is no uninterrupted rainfall from the heavens.
T02-11-20TKRL-ImportanceOfRain