T03-21-30TKRL-GreatnessOfAscetics
Tirukkural by Valluvar
3. நீத்தார் பெருமை = Greatness of Ascetics
Veeraswamy Krishnaraj
   
Kural 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை
விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
21. The scriptures assert the greatness and the allure of the ascetics who stand steadfast on their prescribed conduct.
Kural 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
துறந்தார் பெருமை துணைக் கூறின்
வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று
Can you enumerate all the dead in this world? Likewise, it is impossible to measure the greatness and the glory of the ascetic.
Kurl 23:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இருமை வகை தெரிந்து. ஈண்டு அறம் பூண்டார் பெருமை
உலகு பிறங்கிற்று.
Knowing the duality of birth and liberation and their corollary of sorrow and delight and taking up asceticism to overcome rebirth, the greatness of the ascetic is the highest in the world.
Kurl 24:
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து
The five senses (body, mouth, eyes, nose, and ears) are the five elephants. The Mahout with his self-control as a goad keeps his five organs under control. He is the seed for the best of lands, the heaven.
உரன் = Strength of will, self-control. தோட்டியான் = driver of the elephant; Mahout. தோட்டி = goad
Kurl 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐந்து அவித்தான் ஆற்றல்
அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி
25. Indra, the king of the denizens of vast heavens, is the witness to the prowess of a person controlling the five senses.
வலி = pain. Ache. ஆற்றல்= Strength, power, prowess, ability; கோமான் = king. கரி = Witness.

Kurl 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செயற்கு அரிய செய்வார் பெரியர்
செயற்கு அரிய செய்கலாதார் சிறியர்.
26. The great men do deeds hard to do. The mean men do not do difficult deeds.
Kurl 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை
தெரிவான்கட்டே உலகு.
27.He who knows the nature of five Tanmātras, Taste, Form and Color, Touch, Sound, and Smell, has the world under his control.
Kurl 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
நிறைமொழி மாந்தர் பெருமை
நிலத்து மறைமொழி காட்டிவிடும்.
In this world, the secret words of Mantra are the insignia of the greatness of the prophetic words of the sage.
நிறைமொழி = prophetic words of holy persons which are sure to take effect
நிறைமொழியாளர் = Holy persons, sages
மறைமொழி = Mantra, as secret word;
Kurl 29:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும்' காத்தல் அரிது.
வெகுளி = Anger, wrath, one of mu-k-kuṟṟam, q.v.; முக்குற்றங் களுள் ஒன்றான கோபம்.
It is rare indeed to avert even the passing anger of a Muni, who ascended the mountain of good character.
Kurl 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்
அந்தணர் என்போர் அறவோர்
The one, who shows grace and mercy to all lifeforms, is called Anthaṇar, the ascetics say.
செந்தண்மை = Grace
அந்தணர் = The one with a gracious disposition.
அறவோர் = Ascetic
T03-21-30TKRL-GreatnessOfAscetics.html