T10-91-100TKRL-PleasantWords.html
Tirukkural by Valluvar

திருக்குறள்
Veeraswamy Krishnaraj

அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல், Kural 91-100
Kural 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
இன்சொல் sweet word
ஈரம் அளைஇ mixed with compassion படிறு இல ஆம் bereft of deceit செம்பொருள் straight talk கண்டார் the virtuous வாய்ச்சொல் spoken word
91. Sweet words replete with compassion and bereft of deception, and straight talk are the spoken words of the noble.
Kural 92:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
அகன் அமர்ந்து ஈதலின் நன்று Better than giving (a gift) with jubilance
முகம் அமர்ந்து இன் சொலன் ஆகப் பெறின் sweet words with a radiant smile
92. Sweet words with a bright smile are better than a gift with jubilant heart.
Kural 93:
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி With a blooming visage and pleasing gaze
அகத்தான் ஆம் இன் சொலினதே அறம் Virtue is pleasant words spoken from the heart.
93. With a glowing visage and pleasing gaze, virtue is pleasant words spoken from the heart.
Kural 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
யார் மாட்டும் இன்பு உறூஉம் இன் சொல் அவர்க்கு They who speak pleasing words that gladdens all
துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் will not suffer the sorrow of hunger.
துவ்வாமை = non-eating
94. They who speak pleasing words that gladden all will not suffer the sorrow of hunger.
Kural 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி Modesty and pleasant speech are ornaments of a man.
அல்ல மற்றுப் பிற. All else are not.
95. Modesty and pleasant speech are ornaments of a man. All else are not.
Kural 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
நல்லவை நாடி இனிய சொலின் Seeking goodness and saying pleasant words
அல்லவை தேய அறம் பெருகும் Sins wane and virtue surges
96. Seeking goodness and saying pleasant words help wane of sins and surge of virtue.
Kural 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
நயன் ஈன்று நன்றி பயக்கும் yielding justice (in this world) and excellence (for the hereafter)
பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் Giving virtue and speech united with character.
97. Words congruous with good nature yield virtue and justice (in this world) and excellence (for the hereafter).
Kural 98:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் Sweet words free from meanness
மறுமையும் இம்மையும் இன்பம் தரும் yields delight here and hereafter.
98. Sweet words free from meanness yield delight here and hereafter.
Kural 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் If pleasant words yields delight for the seer
வன்சொல் வழங்குவது எவன்கொல் harsh words dispensing to others for what purpose
99. If pleasant words yield delight to an individual (an observer), for what purpose does he dispense harsh words to others?
Kural 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய உளவாக இன்னாதகூறல் When pleasant words exist, to utter harsh words
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று is like eating unripe fruits while having ripe fruits on hand.
100. When pleasant words exist, to utter harsh words is like eating unripe fruits while having ripe fruits on hand.
T10-91-100TKRL-PleasantWords.html