T14-131-140TKRL-Decorum
Veeraswamy Krishnaraj
குறள் = distich = a rhyming couplet = a unit of two lines of verse
திருக்குறள் = Tirukkural = Sacred Verses= secular ethics
ஒழுக்கமுடைமை = Decorum
அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.
 Kural 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் Decorum gives eminence.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் –Conserve Decorum more than life itself.
131. Decorum gives eminence. Preserve decorum more than life itself.
Kural 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க Decorum should be protected, supported, and safeguarded.
தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே Though one with knowledge and exploration, decorum only is your fast friend.
132. Etiquette should be protected, supported, and safeguarded. Though one is well versed with knowledge and exploration, decorum only is your fast friend.
Kural 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடைமை குடிமை Possession of good conduct is nobility.
இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் Violation spells ignoble low birth
133. Possession of good conduct is nobility. Violation spells ignoble (low) birth.
Kural 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
ஓத்து Vedas மறப்பினும் Forgetting கொளல்ஆகும் is acceptable.
பார்ப்பான் Brahmin பிறப்பு birth ஒழுக்கம் conduct குன்றக் கெடும் diminish and disappear.
134. If a Brahmin forgets his Vedas, he can relearn them. If a Brahmin falls from his birth Dharma, he is relegated to the lowest of births.
Kural 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
அழுக்காறு உடையான் கண் with the jealous person ஆக்கம் இல்லை lacking wealth போன்று Like
ஒழுக்கம் இலான் கண் உயர்வு Man devoid of decorum has no eminence.
135. Just as the jealous person lacks wealth, the man devoid of etiquette will have no eminence.
Kural 136:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து knowing the suffering caused by the transgression
உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் the staunch of heart and mind will not backtrack from virtuous conduct
136. Knowing the suffering caused by the transgression, the staunch of heart, mind, and soul will not backtrack from virtuous conduct.
Kural 137:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் those who attained nobility in virtuous conduct
இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் ignominy earns unanticipated blame.
137. People attain nobility by virtuous conduct, while ignominy earns unanticipated blame.
Kural 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
நல் ஒழுக்கம் good conduct நன்றிக்கு for goodness வித்து ஆகும் is the seed
தீயொழுக்கம் evil conduct என்றும் always இடும்பை தரும் gives sorrow
138. Good conduct is the virtue’s seed. Evil conduct always gives sorrow.
Kural 139:
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்கம் உடையவர்க்கு The observers of good conduct
தீய வழுக்கியும் வாயால் சொலல் ஒல்லா do not utter evil (words) even forgetfully.
139. The observers of good conduct do not utter evil (words) even forgetfully.
Kural 140:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
பல கற்றும் Though very learned
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் அறிவிலாதார் Those who have not learnt to live in harmony with the world are ignoramuses.
140. Though very learned, those who have not learnt to live in harmony with the world are ignoramuses.
              T14-131-140TKRL-Decorum                                                                                                                                                                           Color: RGB = 255-255-0