T43-421-430TKRL-Wisdom
By Tiruvalluvar
Verses 421 – 430
Translation: Veeraswamy Krishnaraj
அறிவுடைமை Having wisdom  Date published October 28, 2019
Kural 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
அறிவு அற்றம் காக்கும் கருவி Wisdom as a weapon guards against destruction.
செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் It is an inner fortress indestructible by the enemy.
421. Wisdom as weapon guards against destruction. It is an inner fortress indestructible by the enemy.
Kural 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
சென்ற இடத்தால் செலவிடாது Allow not to go where the mind should not go
தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு ,wisdom removes and protects it from evil and directs it to goodness
422. Wisdom is to stop the mind from wandering, remove and protect it from evil and direct it to goodness.
Kural 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் Whatever you hear from whoever’s mouth
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு Wisdom is to perceive its true meaning.
423. Whatever you hear from whoever’s mouth, wisdom is to perceive its true meaning.
Kural 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி one’s words on esoteric subject must be lucid for the grasp of the interlocutor.
பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு Wisdom is to comprehend the subtlety of other’s speech.
424. One’s words on the esoteric subject must be lucid for the grasp of the interlocutor. Wisdom is to comprehend the subtlety of other’s speech.
Kural 425:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
உலகம் தழீஇயது ஒட்பம் It is beneficial and prescient to seek friendship with the world.
மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு Wisdom is to know the friendship is immune from blossoming and nyctinasty (closing).
425. It is beneficial and prescient to seek friendship with the world. Wisdom is to know it is immune from blossoming and nyctinasty (closing) of the flower.

Kural 426:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
உலகம் எவ்வது உறைவது Whichever way the world conducts itself
உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு Wisdom is to behave likewise in the world.
426. Whichever way the world conducts itself, wisdom is to behave likewise in the world.
Kural 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறிவுடையார் ஆவது அறிவார் The wise know what is yet to come.
அறிவிலார் அஃது அறிகல்லாதவர் The ignoramus are unknowing of it.
427. The wise are prescient. The unwise are ignorant of it (prescience).
Kural 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை It is ignorance not to fear what should be feared.
அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் To fear the fearful is the work of the wise.
428. It is ignorance not to fear what should be feared. To fear the fearful is the work of the wise.
Kural 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு The wise safeguarding against future mishaps
அதிர வருவது ஓர் நோய் இல்லை shocking events are not a disease.
429. The wise exercise self-protection against future mishaps. To them, future shocks are not morbidity.
Kural 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
அறிவுடையார் எல்லாம் உடையார் The wise have everything.
அறிவிலார் என் உடையரேனும் இலர் The unwise, having whatever they have, have nothing.
430. The wise are self-sufficient. The unwise, though having whatever possessions, have nothing.
43-421-430TKRL-Wisdom