GPT16TheStoryOfGarudaBirth | |
கருடபுராணம்
16:
கருடன் பிறந்த கதை! யானைக்கும் ஆமைக்கும் வந்த ஆணவம்!
4 Min
Read
தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க
கருடபுராணம்
16:
கருடன் பிறந்த கதை! யானைக்கும் ஆமைக்கும் வந்த ஆணவம்! சுவாரஸ்ய கதை!
Published:11 Nov 2024 4 PMUpdated:11 Nov 2024 4 PM |
Garuda Puranam 16: The Story of Garuda's Birth The arrogance of the
elephant and the tortoise!
4 Min Read
Read other episodes of the series
Garuda Puranam 16: The Story of Garuda's Birth The
arrogance of the elephant and the tortoise! Interesting story!
Published:11 Nov 2024 4 PMUpdated:11 Nov 2024 4 PM |
1. ஆனால் அதை அறியாத பிரம்மன் ஆணவம் கொண்டான். பிரம்மனின் கர்வம் தீர்க்கத் திருவுளம் கொண்ட பெருமாள் தன் பார்வை யால் பிரம்மன் அமர்ந்திருந்த தாமரைத் தண்டிலிருந்த இரு நீர்த்துளிகளைப் பார்த்தார். அவை, மது கைடபன் என்கிற இரண்டு அசுரர்களாக ஆகின. 1 |
Garuda Purana 1. But Brahma, not knowing this, became arrogant. Perumal, who was determined to root out Brahma's pride, saw with his eyes two drops of water on the lotus stem on whose leaf Brahma was sitting. They became two demons, Madhu and Kaitapan. |
2.மது கைடபர்கள் பிரபஞ்சத்தை ஆவலோடு வேடிக்கைப் பார்த்தனர். அப்போது வானில் கண்ணைப் பறிக்கும் மின்னல்கள் தோன்றின. இதைக் கண்டதும் இருவரும் வியந்துபோய் தம்மை மறந்து, ‘ஐ’ என்று வியந்து கூறினர். ‘ஐ’ என்கிற எழுத்து துர்கா தேவிக்குரிய பீஜாட்சரங்களில் ஒன்று. எனவே, இருவரும் தம்மை மறந்து அந்த பீஜாட்சரங்களை உச்சரித்ததால் தேவி துர்கை அவர்களுக்குக் காட்சி கொடுத்தாள்.2 | 2. Madhu and Kaitaba gazed eagerly at the universe. Then there were flashes of lightning in the sky. Seeing this, both of them were amazed and forgot themselves and exclaimed, 'Ai,' which is one of the beejacharas (Seed Letters/Mantras) of Goddess Durga. So, both of them forgot themselves and chanted those Beejacharas, and Goddess Durga appeared before them. |
3.“தங்களுக்கு என்ன வரம்
வேண்டும்?” என்று கேட்டாள். வழக்கம்போல் இந்த அசுரர்களும், “எங்களுக்கு மரணமே நிகழக்கூடாது” என்று கேட்டனர். அதற்கு தேவி, “குழந்தைகளே அப்படி ஒரு வரத்தை நான் மட்டுமல்ல... வேறு எந்த சக்தியாலும் தரமுடியாது. எனவே வேறு வரம் கேளுங்கள்” என்றாள். “அப்படியானால், நாங்கள் எப்போது மரணம் அடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்கிறோமோ, அப்போதுதான் மரணிக்கவேண்டும்” என்று கேட்டனர். |
3. "What boon do you want?" she asked. As usual, these Asuras (a class of demons) also said, "Let no death befall us." Devi replied, "Children, I am not the only one who cannot grant such a boon. No other power can give it. So ask for another boon." They said, "Then we should die only when we resolve to die." |
4`இந்த உலகத்தில் யார் மரணத்தை விரும்பிக் கேட்பார்கள்... எனவே, தாங்களும் ஒருநாளும் கேட்கப் போவதில்லை. மரணிக்கப் போவதில்லை' என்று நினைத்துக் கேட்டனர்.அன்னையும் ``தந்தேன்'' என்று சொல்லி வரம் தந்து மறைந்தாள். | 4. "Who in this world would want to die? So, we are never going to ask. ‘We are not going to die,’ they thought. Mother also said, "I gave," and granted the boon and disappeared. |
5.மது கைடபர்களும் ஆணவத்தில் அராஜகம் செய்ய ஆரம்பித்தனர். பிரம்மா விடம் குழந்தைகள் வடிவில் இருந்த வேதங்கள் நான்கையும் கடத்திக்கொண்டு வந்து மறைத்துவைத்தனர். அதைச் சாமர்த்தியமாக மீட்ட ஹயக்ரீவ மூர்த்தியிடம் இருவரும் சண்டைக்கு வந்தனர். | 5. Madhu and Kaitaba also began to commit arrogant anarchy. They smuggled the four Vedas from Brahma, disguising themselves as children, and hid them. Both of them got into a fight with Hayagriva Murthy, who cleverly rescued them. |
6.நீண்ட நேரம் யுத்தம் நடந்தது. யாருக்கு வெற்றி என்று கணிக்கவே முடியவில்லை. பெருமாள் இருவரும் பெற்றிருக்கும் வரத்தினை நினைத்துக்கொண்டார். உடனே ஞானமே வடிவான ஹயக்ரீவர் இருவரையும் அழைத்து, “நன்றாக யுத்தம் செய்கிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு வரம் தருகிறேன்” என்றார் | 6. The battle went on for a long time. It was impossible to predict who would win. Perumal thought of the boon that both of them had received. Immediately Hayagriva as the epitome of wisdom called both and said, "You are fighting well. I will grant you a boon." |
7.உலகில் பெரிய வரம் மரணம்
இல்லாத வாழ்வு. அதுவே தங்களிடம் இருக்கும்போது, அதைவிடப் பெரிய வரம் என்ன
கொடுக்க முடியும்... என்று நினைத்துச் சிரித்தார்கள் அசுரர்கள். ஆணவம்
தலைக்கு ஏறியது. “பரிமுகனே, எங்களிடம் அனைத்தும் உள்ளன. உமக்கு ஏதேனும் வரம் வேண்டு மானாலும் கேளும். தருகிறோம்” என்று சொல்லிச் சிரித்தனர். பெருமாள் புன்னகைத்தார். “அப்படியானால் நீங்கள் இருவரும் மரணிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்” என்றார். |
7.
The greatest gift in the world is life without death. When we have it,
what greater boon can he give? The Asuras laughed. Arrogance rose to
their heads. "Parimukha (Pari-Mukha = Horse-Faced)!, we have everything. Ask for any boon you want from us. We'll give it," they laughed. Perumal smiled. He said, "Then both of you should vow to die." |
8. இதை எதிர்பாராத அசுரர்கள் திகைத்து நின்றனர். அவசரப் பட்டுவிட்டோமே என்று வருந்தினர். அப்படியே பெருமாளின் திருவடிகளைச் சரணடைந்து வாழ்ந்திருக்கலாம். ஆனாலும் தங்களின் அறிவால் வென்றுவிடலாம் என்று நினைத்தனர். | 8. The Asuras, who were not expecting this, were stunned. They regretted that they were hasty. They could have surrendered to the feet of Perumal and lived. But they thought they could win with their knowledge. |
9.அவர்கள் இருந்த லோகம் ரசாதள லோகம். அங்கு நீர் முழுமையாக நிரம்பியிருந்தது. எனவே, பெருமாளைப் பார்த்த அசுரர்கள், “நீர் இல்லாத இடத்தில் வைத்து எங்களை நீங்கள் கொல்லலாம்” என்றனர். | 9. The world they were in was the Rasādala Lōka. It was full of water. So, seeing Perumal, the demons said, "You can kill us in a place where there is no water." |
10. அடுத்த கணம் பெருமாள் பிரமாண்டமாக வளர்ந்தார். இரு அசுரர்களையும் இரு கைகளால் தூக்கித் தன் தொடையின் மீது வைத்தார். அவர்கள் கேட்டுக்கொண்டபடியே நீர் இல்லாத இடமாக அது இருந்தது. ஒரு நொடியில் அவர்களைத் தன் கையினால் நசுக்கிக் கொன்றார். | 10. The next moment Perumal grew huge. He lifted the two demons with both hands and placed them on his lap. It was a place where there was no water, just as they had requested. In an instant he crushed them to death with his hand. |
11. இப்படி மரணத்தை வெல்ல முயன்று தோற்றவர்கள் ஏராளமானோர். எனவேதான் கருடபகவான், பகவான் விஷ்ணு மூலம் இந்த உலகுக்குக் கருடபுராணம் என்னும் மகத்தான ஞானத்தைக் கொடுத்தார். மரணத்துக்குப் பின்னான மனித உயிர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை கருட புராணம் விவரிக்கிறது. அப்படிப்பட்ட ஞான நூல் கிடைக்கக் காரணமாக அமைந்த கருடபகவான் தோன்றிய புராணமும் சுவாரஸ்யமானது மட்டுமல்ல... நமக்குப் பல படிப்பினைகளைக் கொடுக்கவல்லது. | 11. There are many who have tried to conquer death and failed. That is why Lord Garuda through Lord Vishnu gave the world the great knowledge of Garuda Purana. Garuda Purana describes the life of human beings after death. The legend of the origin of Garuda Bhagavan, who was the reason for such a book of knowledge, is not only interesting, but also can teach us many lessons. |
12. தவ வலிமையில் சிறந்த வாலகில்யர்களை இந்திரன் அவமதித்தான். அதனால் கோபம் கொண்ட வாலகில்யர்கள் ஒரு யாகம் செய்து அதில் தம் தவ வலிமையை ஆகுதியாக்கி, Oblation offered in the consecrated fire “இந்தப் பிரபஞ்சத்தில் இந்திரனின் ஆணவத்தை அழிக்கும் மற்றுமொரு இந்திரன் தோன்ற வேண்டும்” என்று பிரார்த்தித்தனர். | 12. Indra insulted the Vālakhilyas, the best with ascetic prowess. Angered by this, the Vālakhilyas performed a yajna in which they sacrificed their austerities and prayed, "Let another Indra appear in this universe who will destroy the arrogance of Indra." |
13. உடனே, அவர்கள் செய்த தவப்பயன் முழுமையும் திரண்டு, வினதையின் இரண்டாவது முட்டையைச் சேர்ந்தது. அந்த முட்டையில் இருந்து வெளிவந்தவர்தான் கருடபகவான். அவருக்குப் பறவை இந்திரன் என்றும் ஒரு பெயருண்டு. | 13.
Immediately, the whole of the penance they performed accumulated and
belonged to the second egg of Vinatā. Lord Garuda emerged from that egg.
He is also known as Bird Indra. (Vinatā. The mother of Garuḍa) |
14. வினதையின் கஷ்டம் தீரும் காலம் வந்தது. கருடபகவான் பேரொளி வீசும் திருவடிவோடு பிறந்தார். வினதைத் தன் மகனைப் போற்றி வளர்த்தாள். சில காலம் சென்றது. கருடன் கம்பீரமாக வளர்ந்தான். என்றாலும் தாயைப்போலவே தன் பெரியம்மாவுக்கும் அவள் புதல்வர்களுக்கும் சேவகம் செய்து வந்தான். | 14. The time had come for Vinata's troubles to end. Lord Garuda was born with a radiant form. Vinata cherished her son and brought him up. Some time passed. Garuda grew majestic. But like his mother, he served his aunt and her sons. |
15.ஒருநாள் கத்ரு வினதையிடம், “தன் பிள்ளைகளாகிய பாம்பு களின் சந்ததி எண்ணிக்கையில் பெருகியபடியால் ரமணீயகம் என்னும் தீவுக்கு இடம்பெயர வேண்டும். நீ என்னைத் தூக்கிக் கொள். உன் மகன் கருடன் மீது என் பாம்புக் குட்டிகள் ஏறிக் கொள்வார்கள்” என்றாள். | 15. One day Kadri said to Vinata, "Since the serpentine descendants of her children have multiplied in number, she should migrate to an island called Rāmanīyaka. You pick me up. My snake cubs will climb on your son Garuda." |
16. வேறுவழியின்றி வினதை கத்ருவைச் சுமந்துகொண்டு தீவுக்கு நடக்கத் தொடங் கினாள். பாம்புகள் அனைத்தும் கருடன் மீது ஏறிக்கொண்டன. கருடன் பறக்க ஆரம்பித் தார். உயரமாகப் பறக்கத் தொடங்கினார். | 16. Vinatha had no choice but to carry Kadri and start walking to the island. All the snakes climbed on Garuda. Garuda began to fly. He began to fly high. |
17. இதனால் சூரியனின் வெப்பம் பாம்புகள் மீது மிகுதியாக விழுந்தது. கருடனை அந்த வெப்பம் ஒன்றுமே செய்யவில்லை. பாம்புகளோ மயங்கிச் சரியத் தொடங்கின. இதைக் கண்ட கத்ரு இந்திரனை வேண்டினாள். உடனே இந்திரன் மழை பொழியச் செய்தார். பாம்புகளும் தம் மயக்கம் நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றன. ஒருவழியாக ரமணீயகம் என்னும் தீவை அடைந்தனர். | 17. As a result, the heat of the sun fell heavily on the baby snakes. The heat did nothing to Garuda. The snakes began to faint. Seeing this, Kadri prayed to Indra. Immediately Indra made it rain. The snakes also recovered from their stupor. Finally, they reached the island of Ramanīyakam. |
18.கருடன் தன் அன்னையிடம், “ஏன் இப்படி அடிமைப்போல் சேவகம் செய்ய வேண்டும்” எனக் கேட்டார். உடனே வினதை, நிகழ்ந்த அனைத்தையும் கூறினாள். |
18. Garuda asked his mother, "Why do you have to serve like a slave?" Immediately Vinatha told him everything that had happened. |
19. கருடன் தன் பெரியம்மாவாகிய கத்ருவிடம் சென்றார். “என் தாய் அடிமைத்தளையில் இருந்து விடுபட நான் என்ன தர வேண்டும்?” என்று கேட்டார். | 19. Garuda went to his aunt Kadri. "What should I give my mother to free herself from slavery?" he asked. |
20. உடனே கத்ருவும் பாம்புகளும் யோசிக்கத் தொடங்கினர். கருடனின் பிரபாவத்தை அவர்கள் பார்த்து வருவதால் கருடனால் எதுவும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொண்டனர். | 20. Immediately Kadri and the snakes began to think. They understood that Garuda could do anything because they were watching his valor. |
21. எனவே மண்ணுலகில் வாழ்பவர்களுக்குக் கிடைக்காத வரம், ‘மரணம் இல்லா பெருவாழ்வு.’ தேவர்களுக்கு அதை அருள்வது, ‘அமிர்தம்.’ அது மட்டும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் கிடைத்து விட்டால் இந்தப் பூவுலகில் நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தாள் கத்ரு. | 21. Great life without death for the earthlings is unobtainable. Amrita or Nectar gives eternal life to the Devas or gods. Kadru thought that if her children obtained the Nectar, they could live eternal life. |
22. அமிர்தத்தைக் கொண்டுவந்தால் வினதையை விடுவிப்பதாக கத்ரு கூறினாள். கருடன் உடனே புறப்பட்டுத் தன் தாயிடம் வந்து ஆசி பெற்றுக்கொண்டார். | 22. Kadru stated that she would release Vinatha from bondage if Vinatha brought her nectar. Garuda left immediately and came to his mother and received her blessings. |
23.அப்போது வினதை, “கருடா, நீ நீண்ட தூரம் பயணிக்கவேண்டும். எனவே அதற்குரிய சக்தியைப் பெற உரிய உணவும் வேண்டும். எனவே நிஷதாலயம் என்னும் தீவுக்குப் போ. அங்கே தீயவர்கள் பெருகிவிட்டார்கள். எனவே, அவர்களை நீ உண்டால் உன் பசி ஆறும். | 23. Then Vinatha said, "Garuda, you have to travel a long way. Therefore, it needs proper food to get the energy it deserves. So go to the island called Nishadālaya. Evil people have multiplied there. So if you eat them, your hunger will be satisfied. |
24. அங்கு யாரை விழுங்குகிறாயோ... அவர்கள் உன் வாய்க்குள் செல்லும்போது உனக்கு எரிச்சல் ஏற்பட்டால், அவர்கள் நல்லவர்கள் என்று புரிந்துகொள். உடனே அவர்களைத் துப்பிவிடு. தீயவர்கள் என்றால் உனக்கு எந்த எரிச்சலும் உண்டாகாது. எனவே, அங்கே உன் வயிறார உண்டு பின் உன் பயணத்தைத் தொடர்” என்றாள். | 24. Whoever you swallow there cause irritation in your mouth, know they are good and spit them out at once. If they are evil, you will have no irritation. Therefore, eat your fill and then continue your journey." |
25.கருடனும் அதன்படியே நிஷதாலயம் தீவுக்குச் சென்று தீயவர்களைத் தின்று பசியாறினார். அங்கிருந்து கந்தமாதனம் மலை நோக்கிப் பறந்தார். அங்குதான் கருடனின் தந்தை கஸ்யபர் வசித்தார். கருடன் அவரை தரிசனம் செய்து வணங்கினார். | 25. Garuda accordingly went to the island of Nishadālaya and ate the wicked. From there he flew to Gandhamādana hill. It was there that Garuda's father Kasyapa lived. Garuda offered him his filial respect and prayer to him. |
26.தந்தையும் தாயைப் போலவே பாசத்தோடு, “கருடா! தேவலோகம் மிகத் தொலைவில் உள்ளது. உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்டார். கருடனும், “தந்தையே! இன்னும் கொஞ்சம் உணவு கிடைத்தால் என் பசி முழுவதும் தீர்ந்துபோகும்” என்றார். | 26. The father said with the same affection as his mother, "Garuda! The heavens are far away. Are you hungry?" Garuda said, "Father! If I get some more food, my hunger will be satisfied." |
27அதைக் கேட்ட கஸ்யபர், “கருடா! மனிதனின் உடல் எடையைவிட அதிகம் உள்ளது அவன் ஆணவம். எனவே ஆணவம் அதிகம் கொண்டவர்களை உண்டால் உன் பசியாறும். இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு ஏரிக்கரையினைக் காண்பாய். அங்கே ஒரு யானையும் ஆமையும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை உண்டால் உன் பசி ஆறும்” என்றார். | 27. Hearing this, Kasyapa said, "Garuda! A man's arrogance is heavier than his body weight. So if you eat those who are more arrogant, your appetite will be satisfied. Go a bit farther to see the lake shore. An elephant and a tortoise are fighting there. If you eat them, your hunger will be satisfied." |
28. கருடனும் தந்தையை மீண்டும் வணங்கிப் பறக்கத் தொடங்கினார். கஸ்யபர் சொன்னது போலவே ஏரிக்கரையில் ஒரு யானையும் ஆமையும் சண்டைபோட்டுக் கொண்டிருந் தன. | 28. Garuda bowed to his father again and started flying. An elephant and a tortoise were fighting on the bank of the lake, just as Kasyapa had said. |
29. சரி, யானைக்கும் ஆமைக்கும் அப்படி என்ன ஆணவம்? இதைத் தெரிந்துகொள்ள அவர்களின் பூர்வ ஜன்ம வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள். 29 தொடரும். |
29. So, what is the arrogance between an
elephant and a tortoise? To know this, let us know the history of their
previous births. Continue. |