T08-71-80TKRL-Love
Tirukkural by Valluvar
Veeraswamy Krishnaraj
திருக்குறள் = Tirukkural
8. Possessing Love

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.

Kural 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிற்கும் for love அடைக்கும் close தாழ் lock/Latch உண்டோ Is there
ஆர்வலர் Affectionate person புன்கண் sorrow நீர் tear பூசல் Making known தரும் gives
71. Does love have a lock to block the loving person? Tears of sorrow make known the love within.

Kural 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இலார் The loveless எல்லாம் all தமக்கு உரியர் claims to oneself.
அன்பு உடையார் The loving souls என்பும் bones பிறர்க்கு உரியர். Belongs to others
அன்பு & என்பு (Aṉbhu and Eṉbhu) are rhymers.
72. The loveless claims all for himself. The loving person belongs to others even down to his bones.

Kural 73:
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
ஆர் உயிர்க்கு cherished Human life/soul difficult to obtain என்போடு இயைந்த தொடர்பு Bone-join-connection
அன்போடு இயைந்த வழக்கு என்ப Love-join-custom-declare
73. The purpose of the merger of the cherished human soul with the bone (& the body) is to unite them with love, the elders declare.

Kural 74:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
அன்பு -ஈனும் -ஆர்வம் உடைமை = Love -yields or produces- desirability or affability in others-
அது -ஈனும்- நண்பு - என்னும் – நாடா - சிறப்பு That-yields-friendship-so said-unsought-distinction.
74. Love produces cordiality in others, which yields friendship, an unsought distinction.

Kural 75:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
அன்பு - உற்று அமர்ந்த – வழக்கு - என்ப Conjugal Love – enjoying it – following the path of the householder- they say.
வையகத்து – இன்பு – உற்றார் – எய்தும் - சிறப்பு In this world-joy-experiencer- attained- supreme bliss
75. Having relished conjugal love in this world, they enjoy supreme bliss in heaven.

Kural 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் Love’s-friend-virtue- says the ignoramus
மறத்திற்கும் அஃதே துணை for Valor also- it is – help/friend
76. The unwise declare virtue is love’s friend. It is also a friend of valor. (Love’s friend is virtue and valor.)

Kural 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
என்பு இல்- அதனை -வெயில் - போலக் காயும் Boneless- that (body) – the sun - dries
அன்பு இல்- அதனை - அறம் Loveless – that (the embodied soul) – virtue
77.The sun dries up a boneless body (like a worm). Likewise, virtue desiccates the loveless.

Kural 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை A life lived without love in the mind
வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று  it is unlikely a dead tree in the desert sprouts a shoot.
78. The life of a man with a loveless mind is like a dead tree in the desert sprouting a shoot.

Kural 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
யாக்கை1 அகத்து2 உறுப்பு3 அன்பு-இல்4 அவர்க்கு5 Body1 inside2 organ3 loveless4 the person5
புறத்து6 உறுப்பு7 எல்லாம்8 எவன்9 செய்யும்10 External6 organs7 all8 what9 can they do10
79. Of what use are the external organs in a person, whose body does not have love among the internal organs.

Kural 80:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பின் வழியது உயிர்நிலை Love is the sine qua non (essential element) of a living soul in the body.
அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர் If absent, the body is a skeleton shrouded with the skin.
80. Love is the sine qua non (essential element) of a living soul in the body. If absent, the body is a skeleton shrouded with the skin.
   
08T-71-80TirukkuralLove.html