T11-101-110TKL-Gratitude
Tirukkural by Valluvar
Veeraswamy Krishnaraj

செய்ந்நன்றி அறிதல் Gratitude
அறத்துப்பால், இல்லறவியல், குறள் 101-110, செய்ந்நன்றி அறிதல்
Kural 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
செய்யாமல் செய்த உதவிக்கு help rendered without prior receipt of benefit (causeless help)
வையகமும், வானகமும் ஆற்றல் அரிது offering earth and heaven is no recompense.
101. Heaven and earth are scant recompenses for causeless help.
Kural 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
காலத்தினால் செய்த நன்றி help rendered in the critical hour (of need)
சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது Though small, its value is bigger than the world
102. Help rendered in the critical hour (of need), though small, is bigger than the world.
Kural 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் Help without Quid Pro Quo and weighing the compassion
நன்மை கடலின் பெரிது that help is larger than an ocean.
103. Weighing the compassion and virtue that go with absent Quid Pro Quo, that help is greater than an ocean.
Kural 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
தினைத்துணை நன்றி செயினும் Though the help is small like a millet seed
பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் they, in the know, understand the benefits are like the multi-use palmyra tree.
104. Though the help is small like a millet seed, they, in the know, understand the benefits are immense like the (multi-use) palmyra tree.
Kural 105:
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
உதவி உதவி வரைத்து அன்று The value of service is not measured by the benefit (it yields to the recipient with regards to cause, the object and or time).
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து its value runs parallel to the recipient’s moral worth.
105. The value of service is not measured by the benefit (it yields to the recipient regarding the cause, the object, and or the time). Its value runs parallel to the recipient’s moral worth.
Kural 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
துன்பத்துள் துப்பு benefit at misfortune ஆயார் நட்பு துறவற்க Do not abandon the friendship of those who benefitted you during your misfortune.
மாசு அற்றார் கேண்மை மறவற்க Do not forget the fellowship with the pure souls.
106. Do not forget the friendship with pure souls. Do not abandon the friendship of those who benefitted you during your misfortune.
Kural 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு The friendship of those who wiped the tears of sorrow
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் remember through the sevenfold births
107. The indebted will hold in memory, through the sevenfold births, the friendship of those who wiped the tears of sorrow.
Kural 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
நன்றி மறப்பது நன்று அன்று Forgetting a good deed is not proper.
நன்று அல்லது அன்றே மறப்பது நன்று Forget that day itself what is not a good deed.
108. Forgetting a good deed is not proper. Forget that day itself what is not a good deed.
Kural 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கொன்று killing அன்ன similar things இன்னா misery செயினும் Though a person committed an act similar to murder
அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் his single beneficial act will efface
109. A single favorable action in the past will efface the present injurious act similar to murder.
Kural 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் There is escape for the killers (violators) of virtue.
செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை There is no redemption for the killers of gratitude.
There is an escape for the killers (violators) of every virtue. But, there is no redemption for the killers of gratitude.
T11-101-110TKL-Gratitude.html